காலம்! பேரும் புகழும் அதிகமாகும். ஆனா பண விரயமும் கூடவே இருக்கும்.."
" விரயமாற பணம் திரும்ப கிடைக்குமா அல்லது போனது போனதுதானா?"
" நோ நோ நோ! மூணு மாசத்துக்குப் பிறகு மூணு வருஷத்துக்கு கனகாபிஷேகமா இருக்கும்! ஜமாய்ங்க!"
சிதம்பரத்துக்கு புதிய உற்சாகம் பிறந்தது. அதை தன் மனைவியுடன் பகிர்ந்துகொண்டார்!
"பார்வதி! நமக்கு இனி ரொம்ப நல்ல நேரமாம், பணமும் புகழும் வருமாம்!...."
" இத பாருங்க! நான் சொல்றதை நிதானமா காதிலே வாங்கிண்டு யோசனை பண்ணுங்க!
சிதம்பரம்-நடராஜன் ஜோடிப் பொருத்தம் மாதிரி, உங்களுக்கொரு பரமசிவம்!
கழுகுக்கு மூக்கிலே வியர்க்கிறமாதிரி, தேர்தல் எப்போ வரும்னு காத்திருந்து, ஓடிவந்துட்டாரு, உங்களிடமிருந்து பணம் கறக்க!
நமக்கு இருக்கிற பணமும் புகழும் போதும்! பிள்ளையா, குட்டியா, நாம ரெண்டே பேர், ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துண்டு நிம்மதியா காலம் தள்ளுவோம்!
உங்களுக்கு சம்மதம்னா, ரெண்டு பேருமா கோவில், குளம்னு ஊர் ஊரா போய்ட்டு வருவோம்.
இத பாருங்க! ஊரிலே இருக்கிற நல்லவங்க நாலுபேரிலே நாமும் ஒருத்தரா இருந்தா போதும்! வேற புகழ் எதுக்கும் ஆசைப்படாதீங்க!"
சிதம்பரம் பொறுமையாக மனைவி சொன்னதை காதில் வாங்கிக்கொண்டு, யோசித்தார்.
அவள் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது.
அவர், யாருக்காக பணம் சேர்க்கவேண்டும்? வாரிசு எவருமில்லை! படிக்கவைக்க பிள்ளையிமில்லை, கல்யாணம் செய்துவைக்க பெண்ணுமில்லை!
கார்ப்பொரேஷன் கௌன்சிலர் என்பதிலே அப்படியென்ன கிரீடமா வைத்திருக்கு? தொகுதியிலே இருக்கிறவங்க, நடுராத்திரியிலே எழுப்பி, 'எங்க வீட்டு சாக்கடை அடைச்சிருக்கு, ரோடு குண்டும் குழியுமா இருக்கு'ன்னு புகார் பண்ணுவாங்க!
கார்ப்பொரேஷன் கௌன்சில்லே, அரசியல் கட்சிக்காரங்க என்னைப்போல தனிநபரை பேசக்கூட விடமாட்டாங்க!
"பார்வதி! நீ சொல்றது கரெக்ட்! நாளைக்கு பரமசிவம் வந்ததும், என் முடிவை சொல்லி அனுப்பிடறேன். நமக்கு தேர்தலும் வேண்டாம், புகழும் வேண்டாம்! நிம்மதியா இருப்போம்!"
" இப்படித்தான் இப்ப பேசுவீங்க, அவன் வந்ததும், எதையாவது சொல்லி மறுபடியும் உங்க மனசை மாற்றிடுவான்....."
" நோ நோ! என் முடிவு, இறுதியானது, உறுதியானது!"