(Reading time: 11 - 22 minutes)

 "அதுக்கு, நீங்க உடனடியா எங்க கட்சியிலே உறுப்பினரா சேர்ந்து, இந்த தொகுதி வேட்பாளரா போட்டியிட்டு வெற்றி பெறணும், தேர்தல் செலவு ஒரு பைசாகூட நீங்க செய்யவேண்டாம். அதை கட்சியே செய்யும். கட்சித் தொண்டர்கள் உங்களை ஜெயிக்க வைச்சிருவாங்க! நீங்க வேட்பாளர் விண்ணப்பத்திலே கையெழுத்தப் போட்டா, போதும். இப்ப, நீங்க செய்ய வேண்டியதெல்லாம், எங்க கட்சியிலே நீங்க உறுப்பினராக விருப்பம் தெரிவித்து இந்த விண்ணப்பத்திலே கையெழுத்து போடுங்க, போதும்!"

 சமையலறையிலிருந்து பார்வதி இருவருக்கும் காபி எடுத்து வந்தாள்.

 எம்.பி.யும் எம்.எல்.ஏ.யும் எழுந்து நின்று கும்பிட்டார்கள், பார்வதியை!

 " அம்மா! உங்களுக்கு நினைவிருக்கும், இந்த தொகுதியிலே முப்பது வருஷம் முன்பு எஸ்.கிருஷ்ணமூர்த்தினு ஒரு வக்கீல் இருந்தார். ரொம்ப நல்லவர். சமூகநல தொண்டர். அவரைப்போல, உங்க புருஷனுக்கும் இந்த தொகுதியிலே ரொம்ப நல்ல பெயர், மக்களிடத்திலே! அந்த காலத்திலே அவரை மேயராக்கினதுபோல, இப்ப உங்க புருஷனை மேயராக்கிடணும்னு சி.எம். ஆசைப்படறார்......."

 " அதில்லே....வந்து.."

 " யோசிக்காதீங்க! நாங்க விரும்பிக் கேட்டாலும், எத்தனை பணம் செலவழித்தாலும், கிடைக்காத கௌரவம், இவரை தேடி வந்திருக்கு, அவரை கையெழுத்து போடச் சொல்லுங்க, சந்தோஷமா! மற்றதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்...."

 பார்வதி, சிதம்பரத்தை பார்த்தாள். அந்தப் பார்வையிலே அவள் சம்மதம் தெரிந்ததுபோல, தோன்றியது, சிதம்பரத்துக்கு!

 தலை குனிந்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதும், வந்த இருவரும் விண்ணப்பத்துடன் அவசரமாக காரில் ஏறி, சி.எம். வீட்டுக்கு விரைந்தனர்.

 அவர்கள் சென்றதும், சிதம்பரம் கதவை சாத்திவிட்டு வந்து பார்வதியை பார்த்தார்.

 அவளோ ஆவேசமாக கண்களை உருட்டிக்கொண்டு நின்றாள்.

 " நான் திரும்பத் திரும்பச் சொன்னேன், நமக்கு இதெல்லாம் வேண்டாம்னு! ......."

 " நீ என்னை பார்த்தபோது, அந்தப் பார்வையிலே சம்மதம் தெரிந்ததே....."

 " உங்களுக்கு ஆசை, மேயராகணும்னு, வேறெப்படி தெரியும்? இவங்க அரசியல்வாதிங்க, இன்னிக்கி காரியம் ஆகணும்னு என்ன வேண்டுமானாலும் பேசுவாங்க! அவங்க கட்சி தொண்டர்கள் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், இந்த தொகுதியிலே நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்கன்னு தெரியும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.