(Reading time: 14 - 28 minutes)

பிரபுவிற்கு வினிதாவின் மீது. அவளுக்கும் அதே தான்!

“அப்பா! அப்பா! உங்ககிட்ட நான் ஒரு கேள்விகேட்டு கால்மணி நேரம் ஆச்சு! இதுக்கு முன்னாடி அம்மாவைப் பார்க்காமல் இத்தனை நாள் இருந்ததே இல்லையா?

“இல்லை ப்ரவீன்! இருந்ததே இல்ல!” என்று தன் மகன் ப்ரவீனிடம் பதில் சொன்னவன், கல்யணம் ஆனா புதிதில் ஸ்வைன் ஃப்ளு பரவாமல் இருக்க தன்னைத் தானே தனிமைப்படுத்தி இருந்தாள், அப்போ தான் கொஞ்சம் பிரிஞ்சு இருந்தாள். மத்தபடி பார்க்காமல் இருந்ததே இல்லடா!”

அம்மா மாதிரி எல்லாரும் முதலில் இருந்தா இந்த கொரோனா வைரஸ் இவ்வளவு பரவி இருக்காதுல்ல! என்னப்பா? என்றான் ப்ரவீன்.

ஆமாடா! நீ சொல்றது சரிதான்! என்ற பிரபுவிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டவனை, மடியில் அமர்த்திக் கொண்டான்.

எப்போ அம்மாக்கு கோவிட்-19 வார்ட் டியூட்டி முடியும் பா? அம்மாவைப் பார்க்கணும் போல ரொம்ப ஆசையா இருக்குப்பா! என்றான் ப்ரவீன் ஏக்கம் நிறைந்த குரலில்,

“அது முடிஞ்சிருச்சுப்பா, அம்மாவையும் தனிமைப் படுத்தி வச்சிட்டு அவங்களுக்குத் தொற்று எதுவும் இல்லைன்னு உறுதி ஆனதும், வீட்டில் வந்து விட்டுடுவாங்க!” என்று பிரபு பதில் சொல்லவும், அவன் செல்போன் ரிங் ஆகியது. வினிதா என்ற எழுத்துக்கள் மின்ன, வேகமா கால் அட்டென்ட் பண்ணினான்.

“வினி! டெஸ்ட் என்னாச்சுமா? நெகடிவ் தான்! நாளைக்கு காலையில் வர்றேன்! என அவள் சொல்லவும் அன்று அவள் கருவுற்ற பரிசோதனைக்குப் பாசிடிவ் என்ற வார்த்தைக்கு என்ன மகிழ்வோ அதே மகிழ்வு கொரோனா பரிசோதனைக்கு நெகடிவ் என்ற வார்த்தைக்கு.

இருபத்தியெட்டு நாட்களுக்குப் பின் வினிதா வீடு வந்து சேர, குளித்த பின்னரே தன்  அருகில் வரவேண்டும் என்று ப்ரவீனுக்கும், பிரபுவுக்கும் அன்புக் கட்டளையிட்டாள்.அதற்குள் காலை உணவைத் தயாரித்து விட்ட பிரபு, எல்லாவற்றையும் மேசையில் எடுத்து வைத்தான். குளித்து மாற்றுடை அணிந்து வந்தவள் நேராக பிரவீனிடம் சென்று கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தாள். பொய்க்கோபத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபுவிடம் வந்தவள், புன்னைகைக்கவும், ஒரு பாக்ஸ்சை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“என்ன சாக்லெட்டா!” என்றவாறே பிரித்தவள், ”இல்லை காதல் பரிசு!” என்று பிரபு சொல்லவும் அவனை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள், அதற்குள் புதிய மாடலில் நோக்கியா செல்போன் இருந்தது.

இது தான் இன்னும் இருக்கே எதுக்கு இப்போ இது என்றாள், தனது பிரியமான பழைய நோக்கியா போனைக் காட்டியவாறு. அதில் பேசமட்டும் தான் முடியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.