" உங்களுக்கும் ஒண்ணும் தெரியாது, அவன்
குதர்க்கமா பேசி, முடிவு எடுக்க முடியாமலே இழுத்தடிப்பான்! நான் ஏமாற
தயாராயில்லே, இப்ப, உடனே, ரெண்டிலே ஒண்ணு
தெரிஞ்சாகணும்!"
மாதவன், மகனைப்
பார்த்து, கை விரித்தார்!
"மாம்! நீ ரொம்ப கோபமா இருக்கே! எனக்கோ நல்ல பசி! அதுவும்
உன் சமையல் வாசனை மூக்கை துளைக்குது!
அதனாலே, மாம்! நான் சரண்டர் ஆயிட்டேன், ஆனா, ஒரு கண்டீஷன்!"
"எந்தக் கண்டீஷனும் கிடையாது, சொல்லு எஸ் ஆர் நோ!"
" எஸ், மாம்! நீயே என்
கல்யாணத்தை அரேஞ்ச் பண்ணு! எனக்கு இப்ப சாப்பாடு போடு!"
"என் ராசா! இப்பத்தான்டா, நீ என் பிள்ளை! உட்கார்! நிதானமா
வயிறார சாப்பிடு! நீங்களும்,
பிள்ளையோட உட்காருங்க!"
" மாம்! நீயும் உட்காரு! ஜாலியா பேசிக்
கொண்டே சாப்பிடலாம், அப்பத்தான் நிறைய வயிற்றிலே இறங்கும்......"
மூவரும் சாப்பிட்டனர்.
" அப்பா! ஒண்ணு கவனிச்சியா? அம்மா சரியா
சாப்பிடாம, ஏதோ யோசனை
பண்ணிண்டிருக்கா?"
" ஆமாம்டா கண்ணா! நீதான் எஸ்னு சொல்லிட்டியே, இன்னும் என்ன யோசனை, அவளுக்கு?"
" சொல்லட்டுமா? நான் ஏதோ கண்டீஷன்னு சொன்னேனே, அது என்னவா
இருக்கும்னு யோசிக்கிறாங்க"
" ஆமாம்டா ராசா!"
" சொல்றேன், ரெண்டு
பேருமே கேளுங்க!
அப்பா! முதல்லே, உனக்கு என் கங்கிராட்ஸ்!"