(Reading time: 7 - 13 minutes)

தாய் சொல்லியிருக்கிறாள்.

" சிவா! எங்கப்பா எங்களையெல்லாம் தவிக்க விட்டு அல்பாயுசிலே போய்ச் சேர்ந்தபோது, என் அண்ணன் சிங்காரம்தான், ஒரு ஓட்டலில் சர்வர் வேலை செய்து, குடும்பத்தை வறுமை யிலிருந்து காப்பாற்றினார்.

கடுமையாக உழைத்து தொழிலை கற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறி, பணத்தைச் சேமித்து, தனியா ஒரு சைனீஸ் ஃபுட் கோர்ட் ஆரம்பித்தார்.

அதற்கு அமோக வரவேற்பு! ஒருநாளைக்கு, லாபமே பத்தாயிரம் ரூபாய்! இன்னமும் அவர் மட்டுமேதான் தொழிலை கவனித்துக் கொள்கிறார். அவர் நம்மை கூப்பிட்டுக்கிட்டே இருக்கார், நாம்தான் இன்னும் போகலை!"

அந்த மாமா சிங்காரம் தான் வந்திருக்கிறார்.

அவருக்குப் பிறந்த மூன்றும் பெண்கள்! மகன் பிறந்திருந்தால், தொழிலில் உதவியாக இருந்திருக்கும் என நினைத்தது, உண்டாம்!

மூன்று பெண்களும் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல உத்தியோகம் கிடைக்க ஆசைப்படுகிறார்களாம்.

சிவாவை பார்த்ததும், சிங்காரம் நெருங்கி வந்து " மாப்ளே! நல்லா இருக்கியா? பெரிய படிப்பு படிச்சு, நல்ல வேலையிலே இருக்கே, நான் படிக்காதவன், ஓட்டலில் வேலை செய்தவன், என்னை ஏளனமாகத்தான் பார்ப்பே!"

" மாமா! முதல்லே வாயை கழுவுங்க! தப்பா பேசாதீங்க! நீங்க முதலாளி! நான் சம்பளத்துக்கு வேலை செய்கிற தொழிலாளி! உங்க கௌரவம், மதிப்பு, எனக்கேது?"

" மாப்ளே! அப்படியா சொல்றே? அப்ப, நீ முதலாளி ஆயிடறியா? இப்பவே வா! கல்லாபெட்டி சாவியை உடனே கொடுத்துடறேன்!"

" அம்மா! நான் இப்பவே மாமாவுடன் போய் முதலாளியா வீடு திரும்பறேன் வரட்டுமா?"

" தங்கச்சி! இன்னிக்கி நாள் நல்லநாள், நிறைந்தநாள்! மாப்ளையை அழைச்சிகிட்டுப்போய், சாவி அவன் கையிலே தந்துடறேன், மச்சான் வந்தா சொல்லிடு!"

தங்கச்சி தாமரை, வாயைப் பிளந்துகொண்டு வியப்பில் தூணாகினாள்!

கண் இமைக்கும் நேரத்தில், வேலையிழந்த பட்டதாரி, ஃபுட் ஸ்டால் முதலாளியானது, பத்மா சொன்ன கடவுளின் செயலா?

ஸ்டாலுக்குப் போகும் வழியில், சிங்காரம் விவரங்களை சொன்னார், சிவாவுக்கு.

" மாப்ளே! என் ஐடியா என்னன்னு சொல்றேன், உன் பொறுப்பிலே இந்த ஸ்டாலை விட்டுட்டு, நான் ரெண்டாவது ஸ்டால், வேற இடத்திலே ஆரம்பிக்கப்போறேன்."

" மாமா! தைரியமா இன்னொரு கடை துவங்க ஏற்பாடு பண்ணுங்க! நான் முழுநேரம், இந்தக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.