அவரை தேடி வந்தார்
”இந்தாங்க தண்ணி குடிங்க” என நீட்ட அவரும் வாங்கி குடித்தார் அவர் கொண்டு வந்த பாத்திரத்தை வாங்கி பார்த்தார் அது காலியாக இருக்கவே
”யாருக்கு பலகாரத்தை கொண்டு போனீங்க”
”அந்த ராபர்ட்டுக்குதான்”
”அப்படியா சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் கொடுத்திருப்பேனே“
”எல்லாத்தையும் கொடுத்துட்டா வர்றவங்களுக்கு என்னத்த கொடுப்பியாம்” என கேட்க கமலாவிற்கு ஆர்வம் தாங்கவில்லை
”என்னங்க” என அன்பாக அழைக்க அவரோ
”ஆஆ எனக்கும் உன் கஷ்டம் புரியுது, இதுநாள் வரை நீ என்கிட்ட எதையும் கேட்கலை, வாழ்க்கையில முதல் முறையா ஒண்ணை கேட்டிருக்க, அதையும் செய்யலைன்னா நான்லாம் என்னத்த மனுஷன்”
”அப்பா கருப்பா என் வேண்டுதலை நிறைவேத்திட்டியே, உனக்கு கிடாவெட்டி பொங்கல் வைக்கிறேன், என் குடும்பம் ஒற்றுமையா இருக்கனும்பா என் குடும்பத்தை பார்த்துக்கப்பா” என கமலா வேண்டிக் கொள்ள கதிரேசனோ மென்மையாகச் சிரித்தார். அவரின் சிரிப்பைக் கண்டு கமலா வியந்தார்
”அப்பாடி 5 வருஷமாச்சி இந்த சிரிப்பை பார்த்து”
”அது ஒண்ணுமில்லை ராபர்ட்டு வீட்டுக்கு போனேன், அவன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வீட்டையே அலங்காரம் செய்து வைச்சிருந்தான்”
”அலங்காரமா அப்படி என்ன செய்து வைச்சான்” என கேட்க அவரும் தான் கண்டுவந்ததை