(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

அவருக்கே ஆம்பளை புள்ள பிறந்திருக்கு, யோவ் கேட்டிச்சா நீ தாத்தாவாயிட்ட” என பெருமையாக சொல்ல கதிரேசன் சோர்வாக உச் கொட்டினார்

  

”யோவ் பெரிசு எவ்ளோ நல்ல விசயத்தை நான் சொல்றேன், அதை கேட்டு சந்தோஷப்படாம அலுத்துக்கற, உனக்கு நெய்பந்தம் பிடிக்க பேரன் பிறந்திருக்கான்யா போதுமா”

  

என சொல்ல அவரோ அவனை கோபமாக முறைக்க

  

”புரியுது புரியுது உன் புள்ளை செஞ்சது தப்புதான், இந்த காலத்தில யார்தான் காதலிக்காம இருக்கா சொல்லு”

  

”ஏன் நீ யாரையாச்சும் காதலிக்கிறியா என்ன”

  

“அப்படி எதுவும் நடக்காதான்னு பார்க்கிறேன், நானும் பலபேரை பார்க்கறேன், காதலிக்கிறேன் ஆனா நான் காதலிக்கறவங்கதான் என்னை காதலிக்க மாட்டேங்கறாங்க” என வருத்தப்பட அவனின் முதுகில் பட் என ஒரு அடி போட்ட கதிரேசன்

  

”படவா காதல் கீதல்னு அலைஞ்ச உன் காலை உடைச்சிடுவேன்”

  

”ஆமா என்னையே குத்தம் சொல்லு, இப்படியெல்லாம் உன் புள்ள கிட்ட சொல்லியிருந்தா அவரு காதலிச்சிருப்பாரா என்ன” என சொல்ல கதிரேசன் மனம் உடைந்துப் போனார்.

  

எப்படியெல்லாம் தன் மகனை வளர்த்திருப்பார், செல்லம் கொட்டி ஊர் மெச்ச மகனை வளர்த்தார் ஆனால் இப்போது பெற்ற மகனையே வெறுக்கும் அளவு மாறிவிட்டார்

  

”பெரிசு இன்னும் என்னய்யா உனக்கு வறட்டு கௌரவம், உன் புள்ளைக்கு கல்யாணம் ஆகி 5 வருஷமாகுது, அவங்களை அப்படியே ஒதுக்கி வைச்சிட்டியே இது நியாயமா”

  

”அதுக்காக அவன் வேற மதத்தை சேர்ந்த பொண்ணை காதலிப்பான், கல்யாணம் கட்டிக்குவான், அதுக்கு நான் சம்மதிக்கனுமா முடியாதுல்ல” என வீரமாக பேசி தனது மீசையை முறுக்கிக் கொள்ள அதைக் கண்ட ராபர்ட்டோ

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.