(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”சரி சரி நான் போய் வேஷம் கட்டிக்கிட்டு வரேன் ஆமா கிறிஸ்துமஸ் பாட்டுக்கு என்ன செய்றது”

  

”பாடனும்தானே அதுக்கென்ன நான் பாடறேன்”

  

“உனக்கு ஆங்கில பாட்டு வருமா”

  

”அட ஆங்கிலத்தில பாடினாதான் சாமி வருமா என்ன, எல்லாம் எனக்கு தெரிஞ்ச மாதிரி பாடறேன் சாமி வரும்“ என சொல்ல அவரும் சரியென தலையாட்டிவிட்டு எங்கோ சென்றார்.

  

கமலாவும் என்ன பாடலாம் என யோசிக்கலானார்.

  

சிறிது நேரத்தில் இருள் கவியத்தொடங்க கமலாவும் சுவிட்ச் போட வீடும் சரி அந்த மரமும் சரி அழகாக ஒளிவீசியது. அந்நேரம் கார் ஒன்று வரவே என்னவென பார்த்தார் கமலா. காரில் இருந்து அவரின் மகன், மருமகள் பேரன் என இறங்கி வரவே அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, 5 வருடம் கழித்து மகனை பார்க்கையில் கண்கலங்கினார்

  

”ஐயா ராசா” என அழைத்தார் அந்த குரலைக் கேட்டதும் அவரின் மகனும் கண்கள் கலங்கி அம்மா என அழைத்தபடியே தாயிடம் தஞ்சமடைய பேரனோ அங்கிருந்த மரத்தைக்கண்டு வியந்தான்

  

”ஐஐ கிறிஸ்துமஸ் ட்ரீ எவ்ளோ பெரிசா இருக்கு” என சொல்ல அவனின் தாய் கூட வியந்தார்.

  

கண்டிப்பாக தன்னை ஏற்கமாட்டார் என நினைத்தவருக்கு இங்கு இருக்கும் ஏற்பாட்டைக் கண்டு மகிழ்ந்துப் போனார்.

  

தாயும் மகனும் அன்பொழுக பேசிக் கொண்டிருக்க பேரனோ அந்த மரத்திற்கு முன் நின்று அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் ராபர்ட் வந்தான், கார் சென்றதைக் கண்டதும் ஒரு ஆர்வம் வந்தது, கதிரேசனின் மகன் குடும்பத்தை காண வேண்டும் என்ற ஆசையில் வந்தவனுக்கு அங்கு உயரமான கிறிஸ்துமஸ் மரத்தைக் கண்டதும் ஆச்சர்யத்தில்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.