”அப்பா பொறுங்கப்பா எல்லாத்துக்கும் காரணம் இருக்கு” என சொல்லியவள் சரவணனை பார்த்து
”ஆமா மாஸ்க் எங்க” என கேட்க அவனோ நொந்துப் போனான்
”மறந்துட்டேன்”
”சரி சரி உள்ள வா”
”இல்லை நான் வரலை”
”இப்ப வர்றியா இல்லையா” என மிரட்ட அவனோ அவசரமாக தலையாட்டினான்.
மலரும் அவளின் தந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல பின்னாலேயே சென்றான் சரவணன் அங்கு சந்தியா இருக்கவும்
”அக்கா இந்தாங்க சாப்பாடு, அம்மா கொடுக்க சொன்னாங்க வாங்கிக்குங்க” என சொல்ல மலரோ டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டு
”ஓய் சரவணன்” என அழைக்க அவனோ அவளைப் பார்த்து
”என்ன”
”இங்க வா”
”போ நான் உங்ககிட்ட வரமாட்டேன்” என கோபமாகச் சொல்ல அவளுக்கு சிரிப்பாக இருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு
”இப்ப வர்றியா இல்லையா” என அதட்ட அவனும் நொந்துப் போய் அவளிடம் சென்றான்.