(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”வாசமா இருக்கே அப்ப சாப்பாடு நல்லாயிருக்கும் போல”

  

”நானே செஞ்சது”

  

”சரி பரிமாறு சாப்பிட்டுப் பார்க்கிறேன் எப்படிதான் நீ சமைச்சிருக்கேன்னு”

  

”எது நான் பரிமாறனுமா”

  

”ஏன் பரிமாற மாட்டியா”

  

”நான் என் அம்மாவை தவிர வேற யாருக்கும் பரிமாறினதில்லை தெரியுமா“

  

”பரவாயில்லை இன்னிக்கு எங்களுக்கு பரிமாறு வா வா” என சொல்ல அவனோ சந்தியாவை பார்த்தான் பாவமாக

  

”மலரு எதுக்கு தம்பியை அலைக்கழிக்கற பாவம் அவரு நமக்காக சாப்பாடு செஞ்சதே பெரிசு இதுல உனக்கு பரிமாறனுமா ஒண்ணும் வேணாம் நானே பரிமாறி விடறேன்” என சொல்ல அவளோ கேட்காமல் சரவணனை பார்த்து

  

”ஓ அம்மாகிட்ட என்னை மாட்டிவிடறியா, ஒரு டாக்டரையே பழிவாங்கறியா” என கேட்க அவனோ அவசரமாக அவளிடம் சென்று தான் கொண்டு வந்த சாப்பாடு பாக்ஸ்களை அங்கிருந்த டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு அவளுக்கு பரிமாறினான். அவனது செயலை உள்ளுக்குள் ரசித்தாள், ரவியோ அவ்விடம் வந்து அமர அவருக்கும் பரிமாறினான்

  

”தம்பி நானே பரிமாறிக்குவேன்பா நீ விடு”

  

”இருக்கட்டும்ங்க பரவாயில்லை” என சொன்னவன் சந்தியாவை பார்த்து

  

”அக்கா வாங்க உட்காருங்க உங்களுக்கும் நானே பரிமாறிவிடறேன் வாங்க அக்கா” என

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.