”பார்த்தீங்களா கல்யாணம்னு சொன்னாலே எப்படி வெறுப்பா பேசிட்டு போறாள்ன்னு”
”இப்ப என்ன அவசரம், இன்னும் நேரம் கூடி வரலை வரட்டும் அப்ப நாம தடுத்தாலும் எல்லாம் தன்னால நடக்கும் வா வா டிபன் செய்” என சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல சந்தியாவும்
”சரவணன் போல அனுசரிச்சி போறவனா மலருக்கு கிடைச்சா அவள் வாழ்க்கை நல்லாயிருக்கும் ம் கிடைக்கனுமே” என அலுப்பாக சொல்லிக் கொண்டே டிபன் வேலையைச் செய்யச் சென்றார்.
மணி 9 ஆனதும் அந்த கடிகாரத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். அதைக் கண்டபடி ரெடியாகி வந்த வைதேகியோ
”டேய் என்னடா நானும் ஒரு மணி நேரமா பார்த்துக்கிட்டு இருக்கேன், கடிகாரத்தையே வெறிச்சி வெறிச்சி பார்க்கற என்ன விசயம்” என கேட்க சரவணனோ
”பக்கத்துவீட்டு பொண்ணு இருக்காள்ல”
”ஆமாம் டாக்டர் பொண்ணு மலருதானே”
”ஆமாம் அவள் 9 மணிக்கு ரெடியாயிரு, நான் வந்து உன்னை கூட்டிட்டுப் பொய் தடுப்பூசி போட போறேன்னு மிரட்டினா மணி 9 ஆயிடுச்சி, அதான் பயமாயிருக்கும்மா”
”ப்ச் இதுக்கா இவ்ளோ பயம் சரி சரி நான் கிளம்பறேன், முதல் நாளே ஸ்கூலுக்கு லேட்டா போக கூடாது, என்னை கொண்டு போய் ஸ்கூல்ல இறக்கிவிடு வா”
”ஆனா அம்மா அந்த மலரு”
”அவள் வந்தாலும் சரி நான் அவள்ட்ட பேசிக்கிறேன் நீ வா” என அழைக்க அதே நேரம் வெளியில் இருந்து மலரோ தனது ஸ்கூட்டியில் இருந்து விடாமல் ஹாரன் அடித்தாள்.