ஒவ்வொரு நொடியும் மிகப் பெறுமதியானதென இவர்கள் உணர்ந்தார்கள். தோல்வி படுவேகமாக இவர்களை நோக்கி வாயைப் பிளந்தபடி வந்தது. தோற்று விடுவார்களோ இலகுவில் என்ன?....அருள் மிகப் பரபரத்தான்.... தலையை அப்படியும் இப்படியும் குலுக்கினான். உணர்ச்சி வேகத்தில் கிடுகிடுவென நடுங்கினான்....ஏதாவது செய்...அவசரமாக...கெதியாக...
வாயில் கிளிப்பைக் கடித்து இழுத்தான். ஐயோ! இடது கை...இடதுகை...வழமில்லை! இழுபட மாட்டேன் என்கிறது.
இவனுக்கு துரதிர்ஷ்டவசமான தப்பு ஒன்று நிகழ்வது நன்றாகவே தொ¢ந்தது.
தொடைகளிலும், கணுக்காலிலும் குதிரைபலம் சேர்ந்தது. கால்விரல்களில் முழுபலத்தையும் சேர்த்துக்கொண்டே உந்தி எழுந்தான். பேய்த்தனமாக ஊதிக்கொண்டிருந்த காற்றிலும், பெரு அம்புகளாகத் துளைக்கும் மழையிலும் ஒருகணம் 'ஜிவ்'வெனப் பறந்து மழையில் நனைந்து சொசொதவென அனங்கிக்கொண்டிருந்த சகதியில் விழுந்தான். அவசர அவசரமாக நாலைந்து சுற்றுக்கள் புரண்டு தூரவிலகினான்.
இவனுக்கு பு¡¢ந்துவிட்டது....அவ்வளவுதான்...இன்னும் ஒரு நொடிதான்...அருள்! அடமுட்டாளே!...அவசரப்பட்டுவிட்டாயே!
தொடைகளில் இலேசாக அடிபட்டிருக்க வேண்டும். நொண்டிக்கொண்டே எழுந்தான். கால்போன திக்கில் ஓட ஆரம்பித்தான். செம்மண் நிறத்திலே கணுக்கால்வரை உயர்ந்து கனவேகத்துடன் வெள்ளம் ஒழுங்கைகள் வழியே பாய்ந்துகொண்டிருந்தது. 'சளசள' என்று இவன் கனத்த காலடிகளைத் தாங்கமாட்டாமல் வழிவிட்டுக் கொடுத்தது.
பெரும் இடிபோல முதல் தரம் வெடித்தது. வான்ஒருதரம் பெருகக் குலுக்கிற்று. தொடர்ந்து ஒன்று...இரண்டு...மூன்று...நாலு...ஐந்து...ஆறு...
அவர்கள் அஞ்சி நின்று விட்டார்கள் நிலையாக!