(Reading time: 11 - 22 minutes)

ங்க அக்காவும், அண்ணியும் ஒரே பதட்டமா இருக்காங்க!

ஏன்? என்ன ஆச்சு?

பிள்ளைங்க பிஸ்கட் கேட்டாங்கன்னு உங்க அண்ணனும் வருணும் வெளிய போனாங்க. அவங்க போய் அரைமணி நேரம் ஆகுது. போன் பண்ணாலும் எடுக்கல. இப்போ எங்க மாமாவும் அவங்களைத் தேடிட்டு போனாங்க. அவரையும் ஆளைக் காணோம். அவரும் போனை எடுக்கல. நீங்க கொஞ்சம் போய் பார்த்துட்டு வரீங்களா?

தேனிலவு வந்த இடத்துல இவங்களைத் தேடப் போகச் சொல்றியா?

ப்ளீஸ்! போய்க் கூட்டிட்டு வாங்க. அப்போ தான் நான் அங்கே வர முடியும். இந்த மருதையன் வேற சிங்கம், புலி, கரடின்னு கதை சொன்னதும் அக்காவும், அண்ணியும் ரொம்ப பயந்திட்டாங்க

அந்த ஆளு அங்கேயும் வந்துட்டாரா?அவர் தான் வெளிய போக வேணாம்னு சொன்னாரே!

வருணும், உங்க அண்ணனும் அதைக் கேட்டாத்தானே!

சரி இதை நீ நேர்ல வந்து சொல்றதுக்கென்ன?

இவங்க வர்றதுக்கு விட்டால் தானே! நான் வந்தால் அங்கேயே இருந்துப்பேனோன்னு பயப்படுறாங்க போல. சரி நீங்க சீக்கிரம் போய்  அவங்களை அழைச்சிட்டு வாங்க.

சரி!வரேன்!போனை வை.                     

வெளியில் கிளம்பினேன். மருதையனும் உடன் வருவதாகச் சொல்ல, வயதானவரைத் தொல்லைப்படுத்த நான் விரும்பவில்லை. பங்களாவிலிருந்து கிளம்பி, மூன்று தெருக்கள் தாண்டி இருப்பேன். மலையில் அமைந்த ஊர் அல்லவா, தெருக்களின் அமைப்பும் வெறும், வீடுகளும் தள்ளித் தள்ளி அமைந்து இருந்தன. ஒரு இடத்தில் பயங்கரக் கூட்டமாய் ஆட்கள் நின்று இருந்தனர்.  என்ன வென்று எட்டிப் பார்த்தேன். உடம்பில் சில கீறல்களுடன் ஒரு மனிதன், அவன் அருகில் ஒரு காவலர்.

"என்ன சார் ஆச்சாம்?" முகத்தைப் பார்க்காமலே பக்கத்தில் நின்றவரிடன் விசாரித்தேன்.

வீட்டுக்கு வெளியில் படுத்து இருந்தாராம். புலி மேல வந்து பாஞ்சதாம்.

அப்புறம் என்ன ஆச்சு? என்றேன் பதட்டத்துடன்,

கயித்துக் கட்டிலாலேயே அதைத் தடுத்து வீட்டுக்குள்ள புகுந்துவிட்டாராம். அவர் வீட்டு வாசலில் கட்டி இருந்த ஆட்டை மட்டும் கொண்டு போயிடுச்சாம்.

அச்சச்சோ?

அதிர்ச்சியுடன் நிமிர்ந்து முகத்தைப் பார்த்தால், அஞ்சலியின் மாமா.

என்னண்ணே நீங்க! அங்க அண்ணி உங்களைக் காணோம்னு பதறிட்டு இருக்காங்க. இங்கே நின்னுட்டு இருக்கீங்க. நானும் வருணையும், உங்க அண்ணனையும் தான் தேடிட்டு இருக்கேன்.

கூட்டம் சிறிது கலைய, எதிர் புறத்தில் என் அண்ணனும், வருணும் அவர்கள் செல்பேசி அலறியதைக் கூட கவனிக்காமல் இதைப்பற்றி பேசியவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மருதையன் சொன்னதை அவர்களிடம் சொல்லிவிட்டு விரைவாக பங்களா நோக்கி நடந்தோம். பங்களாவை அடைந்து மாடி ஏறினோம்.

அஞ்சலி, உங்க மாமா, உன் தம்பி, எல்லாரையும் கண்டுபிடிச்சு அழைச்சிட்டு வந்துட்டேன்.

நாங்க ரொம்ப பயந்துட்டோம். - அஞ்சலியின் அக்கா.

ஒருத்தரைப் புலி அடிச்சிருச்சாம். அதை வேடிக்கைப் பார்த்துட்டு மூணு பேரும் நின்னுட்டு இருக்காங்க.

புலியா?

அவர் தப்பிச்சிட்டார், அவர் வீட்டு ஆடு தான் பலி ஆகிடுச்சு.

இதை நீங்க நல்லா வேடிக்கைப் பார்த்தீங்க போங்க - என் அண்ணி சொல்லவும்,

சரி, பிள்ளைங்க எங்கே ? பிஸ்கட் வாங்கியாச்சு! என்றேன்.

பால்கனில விளையாடிட்டு இருக்காங்க.

நான் பதற்றமாய், கரடிலாம் மரம் ஏறுச்சுன்னா, பால்கனில தாவிரும்னு மருதையன் சொன்னாரே. என்ன கவனிச்சீங்க நீங்க?

இருங்க நான் போய்  கூப்பிடுறேன்!, அஞ்சலி சொல்ல.

நான் போய் அழைச்சிட்டு வர்றேன். பால்கனி நோக்கி விரைந்தேன்.

குழந்தைகள் அங்கே விளையாடிக் கொண்டு இருக்க...

என் கண்ணில் கருப்பாய் மிருதுவாய் ஒரு மிருகத்தின் கரம் பால்கனியின் சுவற்றில் தொங்குவது போல் தெரிய, இன்னும் வேகமாய் நடந்து நெருங்கிச் சென்றேன். குழந்தைகளை நகர்த்திக் கொண்டு சுவற்றின் அருகில் தயங்கி தயங்கிச் சென்றேன். அந்த கரம் லேசாக அசைவது போல் தெரிய, ஆனாலும் அதைத் தள்ளி விடும் நோக்கத்தில் நெருங்கிச் சென்றேன். வேகமாக என் அண்ணன் மகள் ஓடி வந்து, "சித்தப்பா, என் பாண்டா கரடி பொம்மையை எடுக்க மறந்துட்டேன். நான் தான் இங்கே தொங்க விட்டேன்! எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். அடச்சே பொம்மையா! என்ன ஒரு பீதி! உள்ளே குழந்தைகள் வரவும், பால்கனி கதவைத் தாழிட்டேன். நம் அறையிலும் ஞாபகமாகத் தாழிட்டுக் கொள்ள வேண்டும். முதலில் போய் தாழிட்டுக் கொள்ளுவோம்  என்று நினைத்தவாறே என் அறைக்குச் சென்றேன். அருகில் உள்ள அறைக்கதவு திறந்து இருந்தது. கீழிறங்கி செல்லும் வாசற்படிகள் தெரிந்தது. அங்கிருந்த இரும்பு ஸ்டூலைக் காணவில்லை. லேசாகக் கதவு துவரம் வழியே பார்த்தேன், ஒரு புலியின் வால் போலத் தெரிந்தது. என் பிரமை என்று நினைத்துக் கொண்டேன்.

ஞ்சலியைத் தேடி அவள் அக்கா இருந்த அறைக்குச் சென்றேன். ஸ்டூல் மீது ஏறி, சேலையில் தொட்டில் கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஸ்டூலை எடுக்க வேண்டாம் என்று மருதையன் சொன்னதை அவர்களிடம் சொன்னேன். நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க. எதையாவது வேற இடத்தில மாத்தி வச்சிருவோம்னு  எடுக்க வேண்டாம்னு சொல்லிருப்பாங்க. தொட்டில் கட்டி முடிச்சதும் கீழ போய் வச்சிருவோம். என் அண்ணன் மகளையும், அஞ்சலியின் அக்காவின் மகனையும் திரும்பவும் அங்கே காணவில்லை. நான் எங்கே என்று கேட்டதும் வராந்தாவில் விளையாடுகிறார்கள் என்று பதில் வந்தது. அந்த படிகளில் கீழ் இறங்கி இருவரும் அந்த கதவை ஆட்டிக் கொண்டு இருந்தார்கள். கதவும் ஆடிக் கொண்டு இருந்தது,  அந்த பக்கம் யாரோ சுரண்டுவது போல் சத்தம் கேட்டது, அந்த சத்தம் கேட்க கேட்க இவர்கள்  கதவை ஆட்டிக் கொண்டு இருந்தார்கள். நான் கீழிறங்கி, என்னால் இயன்ற அளவு நானும் கதவை ஆட்டினேன். சிறிய இடுக்கு வந்தது. இடுக்கின் வழியே...ஒரு புலியின் பாதம்...பொம்மைப் புலி அல்ல...நிஜப் புலியின் பாதம் தெரிந்தது. அரண்ட நான் பிள்ளைகளையும் அள்ளிக் கொண்டு படியேறினேன். எல்லாரையும் அறைக்குள் செல்லச் சொல்லிக் கதவைப் பூட்டச் சொன்னேன். ஸ்டூலைக் கொண்டு போய் அந்தக் கதவின் அருகில் போட்டுவிடலாம் என்று விழுந்தடித்து, படிகளின் வழியே இறங்கிச் சென்றேன். அங்கிருந்த துவாரத்தின் வழியில் மறுபடியின் உற்றுப் பார்க்க, இருட்டில் பளீர் கண்கள்.  இன்னும் கூர்ந்து பார்த்தேன், அது நிச்சயம் புலி தான். அதன் உடலும் வரிகளும் கூட மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்தது.

பயந்து பின்பக்கம் திரும்பப் போகையில் ஒரு கரம் தோளைத் தொட ,பீதியின் உச்சியில் நான்...

"தம்பி! என்ன வேணும்?” அஞ்சலி அப்பாவின் நண்பர், இந்த பங்களாவின் சொந்தக்காரர்.

"அந்த அறைக்குள்ள இந்த இருட்டுல இரண்டு பளீர் கண்கள்"

"அது என் வளர்ப்புப் பிராணி டைகர்"

"டைகர்"னா?

புலி தான். இது ஒரு அனாதையாக்கப்பட்ட குட்டி. காடுகள் எல்லாம் குடியிருப்புகள் ஆகிறனால மிருகங்களுக்கு வீடு இருக்க மாட்டேங்குது.

இதை நான் வச்சிருக்கது சட்ட விரோதம். ஜூவுக்கு அனுப்ப இஷ்டம் இல்ல. சீக்கிரமா லைசென்ஸ் வாங்கி நானே லீகலா வச்சுக்கப் போறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.