(Reading time: 20 - 40 minutes)

துதான் அவள் கருணாவைக் கடைசியாகப் பார்த்தது.

ஒரே மாதத்தில் கணவனின் கல்யாண குணங்கள் அனைத்தும் புரிந்து போயிற்று பார்வதிக்கு.அவன் ரெயில்வேயில் வெறும் நான்காம் கிரேடு ஊழியன்தான் என்பதும் சொற்ப சம்பளத்தையும் குடித்தே செலவழிப்பான் என்பதும் புரிந்த போது நிலைகுலைந்து போனாள்.பிறந்தவீட்டுச் சீதனமாக கொண்டு வந்த நகைகளும் பொருட்களும் கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போயின.

இத்தனை மோசமான ஒரு அயோக்கியனுக்குப் பெண்ணைக்கொண்டு மடுத்தோமே என்று உருகி உருகியே உயிரை விட்டார்கள் பார்வதியின் பெற்றோர்.அனாதையாகிப் போனாள் பார்வதி.

வயிற்றில் இரெட்டைப் பிள்ளைகளைச் சுமந்துகொண்டு குடிகாரக் கணவனோடு பாடாய்பாட்டாள் பார்வதி.அவனுக்குத் துளியும் பார்வதி மீதோ அவளின் வயிற்றுப் பிள்ளைகள் மீதோ அக்கறை இல்லை..தான் தன் சுகம் என்றே இருந்தான்.அக்கம் பக்கத்தவர்தான் அவளுக்கு உதவியாக இருந்தனர்.

நல்ல வேளை பிரசவம் சுகமாகவே நடந்தது.இரண்டும் ஆண் குழந்தைகள்.குழந்தைகள் பிறந்ததும் வந்து பார்த்தவன்தான் அதன் பிறகு பத்து நாட்கள் வீட்டுப் பக்கம் வரவே இல்லை.பதினோராம் நாள் வந்தபோது அவன் என்ன எண்ணத்தோடு வந்தான் என்பது பாவம் பார்வதிக்குத் தெரியவில்லை.

தூங்கும் குழந்தைகள் இருவரையும் பகத்துப் பக்கத்தில் படுக்க வைத்துவிட்டு குளிக்கப் போன பார்வதி குளித்துவிட்டு வந்து பார்த்தபோது ஒரு குழந்தையைக் காணாமல் பதறிப் போனாள்.அழுதுத் துடித்தபடி வீடெங்கும் தேடினாள்.அக்கம்பக்கத்தவரிடம் கேட்டாள்.குழந்தையையும் காணவில்லை.

காலையில் வந்த கணவனையும் காணவில்லை. ஒன்றும் ஒன்றும் இரண்டு.புரிந்து போயிற்று.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்கே சென்றானோ?குழந்தைக்கு என்னவாயிற்றோ?

அழுதாள் தவித்தாள் பார்வதி..அதைத் தவிர பார்வதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இன்று அந்தக்குழந்தையிருந்தால் சீனுவாசனின் வயது அதாவது நாற்பத்திரெண்டு வயதிருக்கும்.

குடிகாரக் கணவனுக்கோ,பெற்ற குழந்தைக்கோ என்னவாயிருக்கும் என்பது இன்று வரை தெரியாது.

படுத்திருந்த பார்வதியின் கண்களின் ஓரங்களில் கண்ணீர் வழிந்தது.உடல் விம்மித் தணிந்தது.

"அம்மா..அம்மா..யார் வந்திருக்காங்கன்னு பாருங்க."..மகனின் குரல் கேட்டு நிகழ் காலத்திற்கு மீண்டு வந்தார் பார்வதியம்மா.

மெள்ள கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டார்.யாரு..யாரு வந்திருக்கா?கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தார்.உருவம் மச மசவெனத் தெரிந்ததேயன்றி யார் என்று புரியவில்லை..."சீனு.. யாருப்பா வந்திருக்கிறது?"

அம்மா..ஒங்களோட ஒன்றுவிட்ட சித்தப்பா பிள்ளை ஒங்க தம்பி சந்துரு மாமா வந்திருக்காரும்மா...

அடடே..சந்துருவா..வா..வா..பாத்து எத்தன வருஷமாச்சு?எப்பிடி தம்பி இருக்க?சித்தப்பா நல்லா இருக்காரா?

அத்த..நமஸ்காரம் அத்த..நான் நல்லா இருக்கேன்...நீங்க எப்பிடி இருக்கீங்க அத்தை..அப்பா காலமாகி ஏழெட்டு வருஷமாச்சு..நீங்க இந்த மதுரைக்கு எப்ப வந்தீங்க?ஒங்களுக்கு அப்பா காலமானத நீங்க திண்டுக்கல்ல இருக்கறதா நெனெச்சு அந்த அட்ரஸுக்கு தெரிவிச்சோம்.ஒங்ககிட்டேந்து எந்த  பதிலும் இல்ல.மதுரைக்கு வந்தது தெரியாது அத்தை..

உக்காருப்பா...ம்ம்ம்...வாழ்க்கையில என்னென்னெவோ நடந்து போச்சு..யாருக்கும் எதுவும் தெரிவிக்கப் புடிக்கல..சந்தோஷம்ன்னா எல்லாரோடையும் பகிர்ந்துக்கலாம் ஆனா கஷ்ட்டம்ன்னா தனியாத்தான் அனுபவிக்கணும்..இல்லியாப்பா...அது சரி சீனுவ நீ எங்க பாத்த..அவன் என் பிள்ளைன்னு எப்பிடி தெரிஞ்சுகிட்ட?

அம்மா..நானும் மாமாவும் மளிகைக்கடையில பக்கத்துப் பக்கத்துல நின்னு சாமான் வாங்கிக்கிட்டு இருந்தோமா..மாமா என்னையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தாரு..என்ன சார் இப்பிடிப் பாக்குறீங்கன்னு நான் கேக்கவும் சாரி..என்னோட அக்கா பார்வதியோட பையன் மாதிரியே  இருக்கு ஒங்களப் பாத்தா  அக்கா பையன் பேரு சீனுவாசன்.பாக்க உங்களமாரியே இருப்பாரு அதான் பாத்தேன்னாரு...நான் ரொம்ப சின்னப்புளையா இருந்தப்ப அவர பாத்தது அதனால எனக்கு நெனப்பு இல்ல.அப்பரம் எல்லா விபரமும் கேட்டப்பதான் அவரு சந்துரு மாமான்னு தெரிஞ்ச்சிச்சு. ஒங்களப் பாக்கக் கூட்டியாந்துட்டேன்.சீனுவாசன் விபரமாகச் சொல்லவும் விட்டுப் போன சொந்தம் மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்ந்து போனார் பார்வதியம்மா.

அகல்யாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.மாமியாரின் சொந்தம் ஒன்று கிடைத்ததே என்று.

சின்ன விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் சமையலறையில்.

அக்கா என்னக்கா?கண்ண இப்பிடி சுருக்கிச் சுருக்கிப் பாக்கறீங்க?இப்பிடி கண்ண வெச்சிருக்கீங்களே?டாக்டரப் பாத்தீங்கள?ஆப்பரேஷன் செஞ்சுக்கா வேண்டிதுதானே?சந்துரு பார்வதியைக் கேட்டார்..அவருக்குப் பார்வதியின் நிலைமை மிகக் கஷ்டமாக இருந்தது.ஆனாலும் மகனும் மருமகளும் பார்வதியை நன்றாகவே கவனித்துக்கொள்வது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

"தம்பி என்ன செய்யச்சொல்றப்பா?"..செலவு ஏகமா ஆகும்போல இருக்கே?பாவம் சீனு என்ன செய்வான்?ஒரு ரூபா சேத்தா ரெண்டு ரூபாக்கு செலவு வருது..

சீனு.. எனக்கு ஒரு யோசன...

சொல்லுங்க மாமா...

கோயம்புத்தூர்ல ஒரு ஆஸ்பத்திரி இருக்காம்..என்னவோ பேர் சொன்னாங்களே..ஆங்..எம்.சி.பி ஹாஸ்பிடல்..

என்னடா தம்பி எம் பேரா இருக்கு?

என்னக்கா ஒங்க பேரா..எப்பிடி?

அதான்..மருதாநல்லூர் சின்னசாமி பார்வதி..அப்பா பேரு சின்னசாமி இல்லியா?சொல்லி சிரிக்க

அட..ஆமா..எல்லொரும் சிரித்தார்கள்..

இன்னூண்ணு அக்கா கேட்டா நீயே ஆச்சரியப் படுவ..

என்னது ஆச்சரியப் படர மாரி..

ஆமாங்க்கா..அந்த ஹாஸ்பிடல்ல பார்வதின்ற பேர்ல பொம்பளைங்க வைதியத்துக்குவந்தா அவங்களுக்கு டாக்டர் ஃபீஸு,ஆபரேஷன் செலவுன்னு எல்லாமே இலவசமாம்..கேள்விப்பட்டேங்கா.

இதென்னடா அதிசயமா இருக்கு?ஆச்சரியப்பட்டார் பார்வதியம்மா..

"ஏம்மாமா?..இந்த காலத்துல பார்வதின்னு யார் மாமா பேர் வெச்சுக்கிறாங்க?அகல்யா கேட்கவும் சிரிதார் பார்வதியம்மா..

அதானே..என்றார்.

அப்ப சரி சீனு..வர புதன் கிழம அக்காவ கூட்டிகிட்டு கோயம்புத்தூர் போவம்..அதுக்கு முன்னாடி ரேஷன் கார்டு ஜெராக்ஸ்,அக்காவோட ஆதார் அட்டை ஜெராக்ஸ் மறக்காம எடுத்துக்கோ...

ஹாஸ்பிடலுக்கு எதுக்கு அதெல்லாம்..மாமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.