(Reading time: 20 - 40 minutes)

ல்ல சீனு.. இலவச சிகிச்சங்கிறதுனால நிறைய பொம்பளைங்க பார்வதின்னு பொய்யான பேரச் சொல்லிக்கிட்டு வராங்களாம்..உண்மையா பார்வதின்னுதான் பேரான்னு தெரிஞ்சுக்க இதெல்லாம் வேணுமாம்.

சரிதான் மாமா..நான் எல்லாத்தியும் எடுத்துக்கிறேன்.

கோயம்புத்தூர்.பரந்து விரிந்திருந்தது அந்த M.C.P. மல்ட்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்.கண் சிகிச்சைப் பிரிவை கண்டு பிடிப்பதில் அவ்வளவு சிரமமாக இல்லை அவர்களுக்கு.

வரவேற்பாளரிடம் விபரம் சொல்லி பார்வதி என்ற பெயரைச்சொல்லி அடையாள அட்டையைக் காட்டியவுடன் ஏக மரியாதை.

கண் மருத்துவரைக் காணா காத்திருந்த நிறையப் பேரில் பார்வதி என்று யாரும் இல்லையோ என்னவோ பார்வதியம்மா முதல் ஆளாக மருத்துவர் அறைக்கு அனுப்பப் பட்டார்.

அறை வாசல் சுவற்றில் Dr.RAJARAJAN,M.S.D.O.,F.R.S.H.(London)என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது.

பார்வதியம்மாவுடன் மகன் சீனுவும் சந்துரும் உள்ளே சென்றனர்.

இவர்கள் உள்ளே நுழைந்ததும் எந்த மருத்துவரும் செய்யாத ஒன்றைச் செய்தார் மருத்துவர்..ஆம். சட்டென எழுந்து நின்று வணக்கம்மா என்று சொல்லி கை கூப்பினார் பார்வதியம்மாவைப் பார்த்து.

அம்மா....மருத்துவரின் அழைப்பைக் கேட்டு உடல் சிலிர்த்தது பார்வதியம்மாவுக்கு.

டாக்டரின்(மருத்துவர் என்று அழைப்பது கடினமாக உள்ளது)உருவம் மசமச வென்று தெரிந்ததால் அவர் நிற்கும் திசை நோக்கி வணக்கம் டாக்டர் என்று கை கூப்பினார் பார்வதியம்மா.

டாக்டருக்கு நம்ம வயசுதான் இருக்கும்..நினைத்துக்கொண்டான் சீனு..நல்ல களையான சாந்தமான முகம்..நம்ம அம்மாவப் போலவே என்று நினைத்தான். சம்பந்தம் இல்லாமலே தாயையும் டாக்டரையும் சம்பந்தப் படுத்தி நினைத்ததாகத் தோன்றியது. அவனுக்கு சிரிப்பு வந்தது.

உக்காருங்கம்மா..தனக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டூலைக் காட்டினார் டாக்டர்.

ஸ்டூலில் பார்வதியம்மாவை உட்காரவைத்தான் சீனு.

கண்களில் டார்ச் அடித்துப் பார்த்த மருத்துவர் சதை ரொம்ப வளர்ந்து போச்சு..கட்டாயம் அறுவை  சிகிச்சை செய்ய வேண்டும்..அதுவும் விரைவாக.அம்மா உங்களுக்கு சர்க்கரை உண்டா?என்று கேட்டுக் கொண்டே கீழே குனிந்து பார்வதியம்மாவின் இரு கால் பாதத்திலும் கைகளை வைத்து நாடித்துடிப்பைப் பார்த்தார் டாக்டர்.

டாக்டரின் கைகள் கால்களில் பட்டதுமே அந்த ஸ்பரிசம் ஏற்படுத்திய தாக்கம் பார்வதியம்மாவின் உடலைச் சிலிக்கவைத்து இனம் புரியாத தவிப்பை ஏற்படுத்தியது.தன்னை அறியாமலலவே வாய் நல்லாயிருப்பா என்றது கைகள் அவரின் தலையை ஆசிர்வதிப்பது போல் தொட்டது.

நன்றிம்மா...வலது கையை இடது மார்பில் வைத்துச் சிரித்தபடி தலையைத் தூக்கி சரியாக எழுந்து உட்கார்ந்து கொண்டார் டாக்டர்.

டாக்டர் அம்மாவுக்கு சர்க்கரை ஏதும் இல்லை டாக்டர்.

நல்லது..ஆனாலும் அறுவை சிகிச்சைக்கு முன் ப்ளட் டெஸ்ட் செய்வது முக்கியம்.டெஸ்ட்டுக்கு எழுதித் தருகிறேன்..ரிபோர்ட் பார்த்த பின்பு ஆபரேஷன வைத்துக் கொள்ளலாம்.

முதலில் ஒரு கண்ணுக்கு நல்லபடியாய் ஆப்ரேஷன் முடிந்து மருத்துவமனையின் ஸ்பெஷல்

வார்டில் கட்டிலில் படுத்துக்கிடந்தார் பார்வதியம்மா.காலை மாலை இரு நேரமும் ரவுண்ட்ஸ்

வரும் டாக்டர்..பார்த்துப் பார்துக் கவனிக்கும் நர்ஸ் என்று எவ்வித செலவும் இல்லாமல் நிம்மதியாய் இருந்தார் பார்வதியம்மா...நாற்காலியில் மருமகள்.

அன்று மாலை நர்ஸ்  ஜுரம் இருக்கிறதா என்று பார்க்க..வந்தபோது அவரிடம் மெள்ள பேச்சுக் கொடுத்தார் பார்வதியம்மா.

நர்ஸம்மா..

சொல்லுங்கம்மா..

இந்த டாக்டரு பார்வதின்னு பேரு இருக்கிறவங்களுக்கு பத்து காசு செலவு இல்லாம வைத்தியம் பண்றாரே எதுனாச்சும் காரணம் உண்டா அதுக்கு?

அத ஏம்மா கேக்குறீங்க?...யார்ட்டயும் சொல்லக் கூடாதுதான் ஆனாலும் ஒங்ககிட்ட சொல்லலாம் போல இருக்கு..டாக்டரு பத்து நாளு கொழந்தையா இருக்கரச்சே ஏதொ ஒரு களவாணிப்பய இவர யார் வீட்டுல திருடினானோ தூக்கிட்டு வந்திருக்குறான்..வந்தவ குடிச்சிட்டு ரெயிலு தண்டவாளத்துட்ட வர்ரச்சே ரெயிலுல அடிபட்டு செத்துட்டான்.கொழந்த நல்லவேள ஒரு ஓரமா போய் விழுந்து அழுகிட்டுக் கிடந்திருக்கு....

குபீரென்று வியர்த்துக் கொட்டியது பார்வதியம்மாவுக்கு..

அப்பரம்.?.குரல் நடுங்கியது...

அப்பரமென்ன...  அந்த வழியா வந்த நல்லவரு ஒருத்தரு கொழந்தய தூக்கிட்டு  அடிபட்டுகிடந்தவர ஒரு போட்டொவும் எடுத்துக்கிட்டு போலீசுக்கு சொல்லிருக்காரு.....

இப்ப இந்த டாக்டருக்கு என்ன வயசு இருக்கும்?..

ம்ம்ம்..என்ன ஒரு நாப்பது ..நாபத்ரெண்டு இருக்கும்...

அப்பிடியும் இருக்குமோ?..அப்பிடியிருக்கக் கூடாதா?தவித்தது பார்வதியின் தாய் மனசு.

அது சரி நர்சம்மா...இது எந்த ஊர்ல நடந்திச்சு தெரியுமா என்று கேட்பதற்கும் நர்ஸ் அவ்வறையை விட்டு அகல்வதற்கும் சரியாக இருந்தது.

ஒரு வேள இந்த டாக்டர் காணாமப் போன நம்ம மகனா இருக்குமோ?வயசும் சீனுவின் வயசான நாப்பது நாப்பத்ரெண்டு இருக்கும்ன்னு நர்ஸு சொல்றாங்களே..டாக்டருக்குப் படிக்க வெச்சு இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியக்கட்டிக் கட்டிக்கொடுத்திருக்கிற புண்ணியவான் யாரோ?அதெல்லம் இருக்காது....நாம்தான் ஏதேதோ தேவையில்லாம யோசிக்கிறோம்...

இந்த டாக்டர் வேற யாராவது இருக்கும்?மனதில்பல சிந்தைனைகளை எழுப்பிக் குழம்பிக் கொண்டிருந்தார் பார்வதியம்மா.

ஆப்பரேஷன் ஆகி ஒருவாரம் ஆயிற்று.அன்று கண்கட்டுப் பிரிக்கும் நாள்.பார்வதியம்மாள் டாக்டரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு சின்ன தடுப்புக்குப்பின் இருந்த கட்டிலில் படுக்க வைக்கப்பட்டார்..

என்னம்மா..கண்ணு கட்ட பிரிச்சிடலாமா?இதமாக அன்பாகக் கேட்டர் டாக்டர்.

மனம் முழுதும் பரபரப்பு,தவிப்பு....தனக்குக் கண் தெரிய வேண்டும் என்ற தவிப்பைவிட டாக்டரின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பே மேலோங்கியிருந்தது.

மெதுவாய்க் கட்டை பிரித்தார் டாக்டர்..அம்மா முதல்ல யாரைப் பாக்கணும்ன்னும்ன்னு நினைக்கிறீங்கம்மா..?..சிலபேரு சாமி படத்த பாக்கணும்ன்னு ஆச படுவாங்க..அதான்..டாக்டர் கேட்க.

ஒங்களத்தான் டாக்டர்..பட்டென பதில் சொன்னார் பார்வதியம்மா...

அட..என்னையா..சிரித்தார் டாக்டர். மெதுவா கண்ணத் தொறங்கம்மா...ஆப்பரேஷன் பண்ணாத கண்ண ஒரு கையால மூடிக்கிட்டு ஆப்ரேஷன் பண்ண கண்ண தொறங்கம்மா..

மெள்ளக் கண்ணைத் திறந்த பார்வதியம்மாவின் பார்வை டாக்டரின் முகத்தில் பரவி அவரின் நெற்றி உச்சியிலிருந்த துவரம்பருப்பை கவிழ்த்துவைத் தாற்போல் இருந்த சிகப்புக் கலர் மச்சத்தில் போய நின்றது.இது..இது...இவர்..இவர்..இவன்..இவன் என் மகன்தான் மனம் அடித்துச் சொன்னது. 

அதே நேரம் பார்வதியின் பார்வை அங்கு மாட்டியிருந்த ஆளுயர புகைப் படத்துக்குச் சென்றபோது கருணா என்று அவர் கத்திய கத்தல் வெளியே அமந்திருந்த அத்தனை பேருக்கும் கேட்டிருக்கும்.

அம்மா..அம்மா..சொல்லுங்கம்மா இவர உங்களுக்குத் தெரியுமா சொல்லுங்கம்மா...டாக்டர்

சட்டென பரபரப்பாகி பார்வதியம்மாவின் கைகளை பற்றிக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.