(Reading time: 20 - 39 minutes)

வர்கள் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றனர், சாமிக் கும்பிட்டு விட்டு, யாரும் ஆளில்லாத இடமாக பார்த்து அமர்ந்தனர், சிறிது நேரம் இரண்டு பேரும் பேச வில்லை, அதன்பின் ஜீவா தான் பேச ஆரம்பித்தான்.

"சந்தியா நான் காலையில் ஆபிஸ்க்கு  லேட்டாத் தான் வந்தேன், உனக்கு தெரியுமா?? "

எங்கே அவள் இருந்த நிலையில் இதெல்லாம் கவனித்தாள், "நான் கவனிக்கல ஜீவா, கொஞ்சம் வேலையாய் இருந்தேன்"

"சந்தியா உன்னோட அம்மா என்னைப் பார்க்கனும்னு சொன்னாங்க, அவங்களை பார்க்க தான் போயிருந்தேன்"

திடுக்கென்று நிமிர்ந்தாள் சந்தியா, அவன் அம்மா எதற்காக அவனை கூப்பிட்டிருப்பார்கள் என்று அவளுக்கு தெரியும்,  இவனுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று இவள் நினைத்திருந்தால், இவளின் அம்மா இவனை கூப்பிட்டு விஷயத்தை கூறியிருக்கிறார், இந்த அம்மாவிற்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா, இவன் மனசு கஷ்டப்படும் என்று கூட நினைக்கவில்லை, அவ்வளவு சுயநலமா??.

"சந்தியா நீ அமைதியாக இருப்பதை பார்த்தால் எந்த விஷயத்திற்காக அழைத்திருப்பார்கள் என்று தெரியுமென்று நினைக்கிறேன்"

"ம... தெரியும், உங்களிடம் ஏன் இதைப்பற்றி பேசினார்கள் என்று தான் தெரியவில்லை"

You might also like - Netru illatha matram ennathu

"சந்தியா...  நீ உன் அம்மா பார்த்து வைத்திருக்கும் வரனை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கலையாம், அதுக்கு காரணம் நான் தானாம், நான் என்ன நினைப்பேனோ என்று நீ தயங்குகிறாயாம், அப்படியா சந்தியா??"

அவள் அம்மாவின் யூகம் சரிதான், ஆனால் அதை இவனிடம் எப்படி சொல்வது, " ஜீவா கல்யாணம் ஏன் வேண்டாமென்று ஏற்கனவே உங்கக்கிட்ட காரணம் சொல்லியிருக்கேன், இப்ப மட்டும் அதெல்லாம் எப்படி மாறும்"

"சந்தியா இப்பவும் நீ இப்படி யோசிக்கிறது சரியில்ல, அவங்க வசதியானவங்க உன்னோட பிரச்சினைகளை சரிப் பண்ணிடுவாங்க, அப்புறம் ஏன் யோசிக்கிற "

அவன் மனதில் எவ்வளவு வருத்தம் இருக்கும், அதை மறைத்து இவளுக்குகாக பேசுகிறான், இவனை கல்யாணம் செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும், மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்

"ஜீவா பணம் மட்டுமே எல்லாத்தையும் சரி பண்ணிடுமா??"

"நீ என்ன சொல்ல வர, உன்னோட கல்யாணத்துக்கு பிறகும் உன்னோட குடும்பம் சந்தோஷமா இருக்கனும் அதானே??, ஆனால் நீ இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லி உன் குடும்பத்தோட சந்தோஷத்தை கெடுக்கிறியே??"

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு புரியவில்லை, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆமாம் சந்தியா, நீ இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டா, மத்த இரண்டு பிள்ளைகளுக்கும் ஒரு வழி பிறக்கும்னு உங்க அம்மா நினைக்கிறாங்க, உன் தம்பி தங்கையும் கூட அடுத்த ஸ்டெப் ஈசியா போய்டலாம்னு நினைப்பாங்க, இதை நீ மறுத்தா, அவங்க சந்தோஷமா இருப்பாங்களா?? அக்கா இப்படி ஈசியான வழியையும் கோட்டை விட்டுட்டாளே, அப்படினு நினைப்பாங்க" அவள் மௌனமாக இருந்தாள்.

"இங்க பாரு சந்தியா, நீ எனக்காக தயங்குற அப்படினா, கவலை வேண்டாம், நான் எதுவும் தவறா நினைக்கமாட்டேன், தான் காதலித்தப் பொண்ணு தனக்கு கிடைக்காட்டாலும், அவள் எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கனும்னு நினைப்பது தான், உண்மையான காதல் , என்னைப் பற்றி கவலைப் படாதே என் வாழ்விலும் ஒரு மாற்றம் வரும், அது நல்ல மாற்றமாகத்தான் இருக்கும்.

இதுக்கு மேலே உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன், நீயே நல்ல முடிவு எடுப்பாய் என்று நினைக்கிறேன், நம்ம போலாமா??"

"நீங்க போங்க ஜீவா, நான் கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்கு போகிறேன்"

"சரி சந்தியா நல்ல முடிவா எடு, அது எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கனும், நான் வருகிறேன் சந்தியா"

அவன் கிளம்பி சென்றவுடன், அவன் பேசியது, அவள் அம்மா பேசியது, அவள் தங்கை தம்பி நினைப்பது, எல்லாவற்றையும் யோசித்து ஒரு முடிவுடன் வீட்டிற்கு கிளம்பினாள்.

ன்று ஞாயிறு அலுவலகம் விடுமுறை, வழக்கமாக ஜீவா வீட்டில் இருக்க மாட்டான், தனியாக இருப்பது பிடிக்காமல் வெளியில் சென்று விடுவான், ஆனால் இன்று சந்தியா வருவதாக கூறியிருக்கிறாள், அதற்காக காத்திருக்கிறான், அவள் இன்னும் வரவில்லை, அவளுக்குகாக காத்திருந்தவன் அவளை பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.

அன்று சந்தியாவை கோவிலில் சந்தித்து பேசியப் பிறகு அவள் எடுத்த முடிவை அவனிடம் சொன்னப்போது அவன் சந்தோஷப்பட்டான், அவள் குடும்பத்திற்காக, அவள் திருமணம் செய்ய ஒத்து கொண்டாள், அதற்கு பிறகு இரு வீட்டாரும் பேசி திருமண நாளும் குறிக்கப்பட்டுவிட்டது, அந்த திருமணத்திற்கு பத்திரைகை கொடுக்கதான் அவள் வருகிறாள்.

இவ்வளவு நாள் எப்படியோ, இவள் வேறொருவனை திருமணம் செய்வதில் அவனுக்கு வருத்தம் இல்லை என்று அவள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவன் நடித்துக் கொண்டிருக்கிறான், ஆனால் இன்று அவள் கொடுக்கும் திருமண பத்திரிகையில் அவள் பெயரோடு வேறொருவன் பெயரை இணைத்து அவனால் எப்படி பார்க்க முடியும், இதுவே இப்படி என்றால் வேறொருவரோடு மண மேடையில் அவளை கண்டால் அவன் உயிரே போய் விடும்.

சந்தியாவை அலுவலகத்தில் முதன்முதலில் பார்த்த போதே அவனுக்கு பிடித்துவிட்டது, திருமணம் செய்து கொண்டால் இவளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான், அவன் உடனே அவளிடம் தன் காதலை வெளிபடுத்தவில்லை, அதன் பின் அவளுடன் அவன் பழகிய நாட்களில் அவன் உயிரோடு அவள் கலந்துவிட்டாள், அவன் காதலை அவளிடம் சொல்லி அவள் மறுத்த போது கூட அவள் என்றாவது அவனுக்கு கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது, ஏனென்றால் அவள் உதடு மறுத்த போதும் அவள் கண்கள் காதலை சொல்லிவிட்டது, ஆனால் விதி இப்படி விளையாடும் என்று அவன் நினைக்கவில்லை.

அவளுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்று தெரிந்தவுடனே இந்த ஊரைவிட்டு போக வேண்டும் என்று அவன் நினைத்தான், ஆனால் சந்தியாவால் அவன்  போகவில்லை, அவனுக்கு தெரியும் சந்தியா முழு மனதோடு கல்யாணத்திற்கு ஒத்து கொள்ளவில்லை, அவள் அம்மாவின் வற்புறுத்தலாலும், இவன் பேசியதாலும் தான் அவள் திருமணத்திற்கு ஒத்து கொண்டாள், இவனை ஏமாற்றுகிறோம் என்று உறுத்தல் அவளுக்கு இருக்கிறது, இதில் அவன் ஊரைவிட்டு போய்விட்டால் அவள் உறுத்தல் அதிகமாகிவிடும், அவள் திருமண வாழ்க்கை பாதிக்கும், அதனால்தான் அவன் இங்கு இருக்கிறான், அது மட்டுமல்ல இப்போது தான் அவளை பார்க்க முடியும், அவள் திருமணத்திற்கு பிறகு அவளை பார்க்க முடியாது, இப்படி இருக்க இவன் எப்படி இந்த திருமணத்தில் கலந்து கொள்வான்.

இப்படி இவன் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கும்போது, காலிங்பெல் சத்தம் கேட்டது, சந்தியாவாகத்தான் இருக்கும் என்று கதவைத் திறந்தான், சந்தியா இவன் கதவைத் திறந்ததும் இவனைப் பார்த்து புன்னகைத்தாள், இன்று சந்தியா சந்தோஷமாக இருப்பது போல் தெரிகிறது, சந்தியாவின் சந்தோஷமோ, துக்கமோ அதை அவள் கண்களை பார்த்தே அவன் கண்டுபிடித்துவிடுவான், இன்று அவள் கண்களும் புன்னகைத்தது, அவள் நிஜமாகவே சந்தோஷமாக இருக்கிறாள், அதற்கு காரணம் அவனுக்கு தேவையில்லை, அவள் சந்தோஷமாக இருந்தால் போதும்

"என்ன ஜீவா, என்கிட்ட இன்விடேஷனை வாங்கிக்கிட்டு என்னை இப்படியே அனுப்பிடலாம்னு உங்க ப்ளானா, உள்ள கூப்பிட மாட்டீங்களா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.