(Reading time: 20 - 39 minutes)

"ய்யோ சந்தியா அப்படியெல்லாம் ஒன்னுமில்லை, உள்ள வா, வந்து உக்காரு" என்று அவளை வரவேற்றான்.

"இருக்கட்டும் ஜீவா, முதலில் இன்விடேஷனை வாங்கிக்கங்க, வர 25ஆம் தேதி கல்யாணம் நீங்க கண்டிப்பா வந்துடுங்க" என்று பத்திரிகையை அவனிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிய அவன் அதை அருகில் இருந்த மேசை மேல் வைத்துவிட்டு "உக்காரு சந்தியா உனக்கு ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரேன்" என்று கூறி சமையலறையை நோக்கி சென்றான்.

"ஜீவா எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம், நீங்க என்ன இன்விடேஷன வாங்கி பார்க்காம வச்சுட்டீங்க" என்று கூறி அவன் பார்க்க வேண்டாம் என்று நினைத்த பத்திரிகையை அவள் பார்க்க வைத்தாள்.

அதை எடுத்து பார்த்து கொண்டிருந்த ஜீவாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது, அதில் மணப்பெண் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் இவள் பெயருக்கு பதிலாக இவளுடைய தங்கை திவ்யாவின் பெயர் இருந்தது, அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை, "என்ன சந்தியா, இதுல மணமகள் பெயர் திவ்யானு எழுதிருக்கு"

You might also like - Thalattum poongatru neeyallava

"திவ்யாவிற்கு தானே கல்யாணம், அப்போ அவள் பெயர் தானே இருக்கும்" என்று சாதாரணமாக கூறினாள்.

"என்ன திவ்யாவிற்கு கல்யாணமா?? நீ முதலில் புரிகின்ற மாதிரி சொல்"

"அப்பாவோட நண்பர், எங்க வீட்டில் பொண்ணு எடுக்கனும்னு ஆசைப்பட்டாரு, அது ஏன் திவ்யாவா இருக்க கூடாதுனு எனக்கு தோன்றியது, அவளுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு, படிப்பு முடிஞ்சதும் அவளுக்கும் கல்யாணம் பண்ணனும், அது ஏன் இப்பவே செய்யக்கூடாதுனு நினைத்தேன், பொண்ணு பார்க்க வந்தவங்கக்கிட்டேயும் திவ்யாவை கூட்டிட்டு போய் காண்பித்தேன், அவ மேல படிக்க ஆசைப்பறா, கல்யாணத்திற்கு பிறகு அவளை படிக்க வைக்கனும்னு கேட்டேன், அவங்க வீட்டில் சம்மதிச்சுட்டாங்க, திவ்யாவிடமும் கேட்டேன், முதலில் தயங்கினால், அப்புறம் ஒத்துக்கொண்டாள்.

அப்பாவோட நண்பர் தம்பி படிப்புக்கும் உதவி செய்கிறேன் என்று சொன்னார், என்னால தம்பியை படிக்க வைக்க முடியும் என்று கூறினேன், அதற்கு அவர், ட்ரஸ்ட் மூலமா நிறைய பேரை படிக்க வைக்கிறோம், இதில் உன் தம்பியை படிக்க வைப்பதில் எங்களுக்கு சிரமம் இல்லை என்று சொன்னார்."

 ஜீவா அவளையே பார்த்து கொண்டிருந்தான், சந்தியா பேச்சை தொடர்ந்தாள்.

"இப்படியெல்லாம் ஏன் செய்தேன் என்று தானே யோசிக்கிறீங்க, அன்றைக்கு ஒன்று சொன்னீங்களே, அது ஞாபகம் இருக்கா, உனக்கும் கல்யாணம் செஞ்சுக்கனும்னு தோனும், அதுவரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன் என்று சொன்னீங்களே, அப்பவே உங்களை தான் கல்யாணம் செஞ்சுக்கனும்னு முடிவு பண்ணிட்டேன் ஜீவா"

"சந்தியா உங்க அம்மா இந்த விஷயத்தை எப்படி எடுத்திகிட்டாங்க"

"அம்மாவை பொறுத்தவரை நாங்க மூன்று பேரும் நல்லா இருக்கனும் அவ்வளவு தான், அவங்களுக்கு உங்களை பிடிக்காதுனு இல்லை ஜீவா, இப்போ திவ்யா, சுரேஷ்க்கு ஒரு வழி பிறந்துடுச்சு இல்ல, அதனால இதுக்கு தடை சொல்ல மாட்டாங்க, சந்தோஷம் தான் படுவாங்க.

ஜீவா நான் இப்போ கல்யாணம் செஞ்சுக்கனும்னு நினைக்கிறேன், என்னை கல்யாணம் செஞ்சுப்பீங்களா???"

அவள் இவனை திருமணம் செய்து கொள்ள இவ்வளவு யோசித்து செய்திருக்கிறாள் என்றால் அதை விட சந்தோஷம் வேறு என்னவாக இருக்க முடியும்.

அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் வார்த்தையில் பதில் இல்லை, அவளை இறுக்கி தழுவி கொண்டான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.