(Reading time: 9 - 17 minutes)

1974:

தீடீரென்று அவர்களின் விளக்கு ஒளிபெற்றது. ஆனால் அதன் நிழலில் கரிய நெடிய உருவம் தோன்றியது. அதன் நிழல் இவர்களையும் தாண்டி பிரம்மண்டமாய் உருவெடுத்தது. இவர்கள் வெலவெலத்து போயினர். கையில் இருந்த பொருட்களை போட்டு விட்டு ஓட்டமெடுத்தனர், தங்கள் உயிரை தக்க வைத்து கொள்ள.... அவனும் அரண்டு தான் போனான், இன்று தனக்கான நாள் இல்லை என வெறுத்து அவ்விடத்தை விட்டு போனான்.

பின் மெல்ல மெல்ல உருவம் மறைந்து விளக்கு சாதரணமாக, சூழ்நிலையும், உண்டாகிய விகாரத்திலிருந்து மெல்ல மீண்டது. அனைத்தும் சரியாக, நிலவு மகள் தன் மேக போர்வையை நீக்கி தன் சுற்றத்து நட்சத்திரங்களையும் பூமியையும் நோக்கி மென்னகை புரிந்தாள்.

அடுத்த நாள் காலையில் நால்வரும் ஜுரம் கண்டிருக்க அவன் மீண்டும் அவர்களை அழைத்தான் மீதி வேலையை முடிக்க. அவர்கள் தங்களின் மறுப்பை சொல்ல, அவனோ தன் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். தாங்கள் இந்த வேலைக்கு வந்த துரதிஷ்டத்தை நினைத்து மிகவும் நொந்து போயினர் நால்வரும்.....

2015:

அவர்கள் சென்ற சிறு நேரத்திற்கெல்லாம் பங்ஷன் தொடங்கியது. அங்கே மனங்களின் பகிர்தலுக்கு பதிலாக பணமே பகிரப்பட்டது... ஸ்ருதி அவள் வயது பிள்ளைகளுடன் விளையாட, லீலா மற்றும் சரவணன் தங்கள் நட்பு வட்டத்தில் இணைந்தனர்

விழா முடிந்து இவர்கள் கிளம்ப 8 மணி ஆகியது. ஸ்ருதி மெல்ல தூக்கத்தை எட்டி இருக்க, கார் சீரான வேகத்தோடு சென்றது.. அப்போது மெல்ல ஆரம்பித்த மழை ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கும் போது இடி முழக்கத்துடன் பெய்தது. சட்டென கார் பெரும் சத்தத்துடன் நின்றது ...

தே நேரம்

காமாட்சி வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு இவர்களை எதிர்நோக்கி காத்திருந்தார். அவரின் நினைவுகளோ பூஜையறையை சுற்றியே இருந்தது. பரமு மற்றொரு இருக்கையில் அமர்ந்து கொண்டு இராமாயணத்தில் அயோத்திய காண்டத்தில் இருந்தார், தன்னை தொலைத்தவராக, அப்போது அவர் அருகே இருந்த போன் ஒலி எழுப்ப படிப்பதில் கவனம் சிதற கை போனில் நர்த்தனமாடியது கோபத்தில். அவரின் கோபத்திற்க்கு பயப்பட, அது என்ன கமாட்சியா? தொ(ல்)லைபேசி அல்லவா? அது ஸ்பீக்கர் மோடிற்க்கு சென்றது. சில நிமிட அமைதிக்கு பின்னர் "என்ன பரமு! பண்ணிய அயோக்கிய தனத்திற்க்கு பிரயிச்சித்தம் செய்ய அயோத்திய காண்டம் படிக்கிற போல? விடமாட்டேன் டா. நீ சந்தோஷமா இருக்க போற நொடிகள எண்ணிகிட்டே இரு. உனக்கான தீர்போட வந்துட்டேன்டா" என்று கூறி வெற்றியின் வெறியில் சிரித்தவாறு அழைப்பு துண்டிக்க பட்டது.

போன் துண்டிக்க பட்ட அதே நேரம் சரவணன் கார் அருகில் மர்ம மனிதன் தோன்றினான்....

1974:

அவனின் முகத்தில் சிறுமாற்றமும் இன்றி "உங்க குடும்பம் மொத்தமும் உயிரோட இருக்கணும்னா நான் சொன்ன வேலையை முடிங்க இல்லன்னா உங்க அத்தனை பேரையும் சில்லு சில்லா சிதறடுச்சுடுவேன் பாத்துகோங்க." என்று தெரிவித்தான்.

" ஐயோ! அப்படி எதுவும் செஞ்சுடாதிங்க. எங்க குடும்பத்துக்காக தான் இந்த வேலையை விருப்பம் இல்லாட்டினாலும் ஒத்துக்கிட்டோம். ஆனா நேத்து நடந்தது எதுவும் சரி இல்லையே!. ஏதோ அமானுஷ்யமா நடக்குதுங்க அங்க. நாங்க இருந்தாதானே எங்க குடும்பத்த பாத்துக்க முடியும்" என்று அழுகையுடன் கூறினர்.

"இத நீங்க செய்யறதுனால எனக்கு மட்டும் லாபம் இல்லை, உங்க தலைமுறையும் செழிப்பா இருக்கும். இந்த காரியத்தை சரியா முடிச்சிட்டிங்கன்னா உங்களுக்கு ஏற்கனவே சொன்ன பணத்தை விட இப்ப இரு மடங்கு தர்றேன். அத விட்டுட்டு ஏதோ காத்து அடிச்சுது இலை பறந்துச்சுன்னு காரணம் சொல்லாம கிளம்புற வழியை பாருங்க என்று இறுதியாக முடித்தான்.

அன்றே இந்த வேலையை முடிக்கவென அந்த இடத்தை சென்றடைந்தனர் அனைவரும். இவர்கள் சென்ற நேரம் அனைத்தும் இயல்பாகவே இருந்தது. எனவே துளிர் விட்ட தைரியத்துடன் வேலையை தொடங்கினர். மண்ணை தோண்டி "அதை" புதைக்க ஆயுத்த படுத்தினர். சடாரென்று மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இவர்கள் கண்ணெதிரே கண்ட காட்சி மூளையை எட்டுவதற்குள் முற்றிலும் நிசப்தம் .

இவர்களுக்கு வேர்க்க தொடங்கியது. அவனோ எதுவும் நடக்காதது போல் துரித்தபடுதினான். பிரம்மை என்றே தங்களை நிதானித்து கொண்டு "அதை" குழிக்குள் போட்டு மூடினர். இவர்கள் நின்றிருந்த இடத்திற்கு சற்று அருகில் மண்ணில் குருதி குமிழியிட்டது....

2015:

போன் கால் துண்டிக்க பட்டதும் காமாட்சி பயத்துடன் கூடிய கோவத்தோடு பரமுவை பார்க்க "போடி, எவனோ காசு பறிக்க சும்மா பூச்சாண்டி காட்டுறான். நீ என்னமோ மொறச்சுகிட்டு நிக்குற, போய் வேலைய பாரு."

தன்னுடைய உணர்வுக்கு இந்த வீட்டில் இருக்கும் மதிப்பு அறிந்தவர் ஆதலால், இறைவனை வெளியே சென்ற தன் குடும்பம் எந்த பிரச்சனையும் இன்றி திரும்பி விட வேண்டி கொள்ள தொடங்கினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.