(Reading time: 9 - 17 minutes)

ப்போது வெளி வாயில் கதவு திறக்கும் சத்தம் கேட்க ஜன்னல் வழியாக பார்த்தார். ஆனால் யாரையும் காணவில்லை, வீட்டை நோக்கி வரும் நடைபாதையில் இருந்த செடிகள் அசைந்தது, அதை தொடர்ந்து தோட்டக்காரன் சற்று நேரத்திற்க்கு முன்பு தண்ணீர் பாய்ச்சி விட்டு சென்றிருக்க, ஈர காலடி தடங்கள் வாசல் படியில் தோண்றியது. இதற்கே காமாட்சியின் இதயத்தின் லயம் தப்பியிருந்தது. அவர் தன் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு கண்களை திறந்த நொடி, நெடிய கரிய உருவம் அவர் கண்ணெதிரே தோன்ற, அதன் கண்களின் ஜொலிப்பில் அவரின் இதயம் முழுவதுமாக துடிப்பை நிறுத்தியது.

தே நேரம்,

சரவணனை நெருங்கிய அந்த உருவம் தன் வலிய கரங்கள் கொண்டு அவரின் கழுத்தை நெரித்தது, தடுக்க வந்த லீலாவை மறுகரத்தால் தூர வீசியது... சரவணன் மூச்சடைத்து இறக்க, லீலாவும் மரத்தின் மீது மோதி குருதி வழிய உயிரிழந்தார். இன்னும் வெறியடங்காத அந்த உருவம் தன் தீக்கங்குகள் போன்ற கண்களினால் அவர்களின் காரை பார்க்க, பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது அதனுள் உறங்கி கொண்டு இருந்த ஒன்றும் அறியா சிறு மலருடன் அக்கார்.....

சிறிது நேரத்தில் வீட்டின் தொலை பேசி அழைக்க அந்த உருவம் அதை நெருங்கி பேசியை உயிர்ப்பித்தது. அதன் வழி வந்த செய்தி அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. பரமு இதயத்தை பிடித்து கொண்டு தரையில் சாய்ந்தார் சுயநினைவோடு," கேட்டியாடா பரமு, உன் தலைமுறை மொத்தமும் அழிஞ்சு போச்சு, நான் உன்ன ஒன்னும் பண்ண போறது இல்ல, யாருக்காக எல்லாம் பண்ணியோ அந்த உறவுகள் இல்லாம பணத்தை சொந்தம் கொண்டாடு. "

அந்த மனிதன் மறைந்தான், ஆனால் அவன் தந்து விட்டு போன கூலி உயிர் வரை வலித்தது..

பரமு போன்ற மனிதர்கள் தனி மனித சுய லாபத்திற்காக செய்த ஆக்கிரமிப்புகள், சட்ட மீறல்கள், வெளி உலகு அறியாத உயிர் வதைகள் அனைத்தையும் வெள்ளம் உலகத்திற்கு வெளிச்ச படுத்தி சென்று விட்டது.

நீர் எனும் அமுதத்தை வழங்கி

நரன்களை உயிர்க்க செய்யும்

பாயும் நதிகளை அழித்து,

பூமித்தாயை மலடியென ஒடுங்க செய்து

பணம் ஈட்ட விலை நிலமாக மாற்றி

பாவம் குவித்த மனிதர்களே!

இயற்கையை நீ முடக்கினால்,

இறப்பு உன்னை நெருங்கும்.

பணத்திற்கு உயிர் கொடுக்காமல்

பந்தத்திற்கு உயிர் கொடு

பாருலகமும் போற்றும் உன்னை.

This is entry #38 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.