(Reading time: 6 - 12 minutes)

 

றுநாள் திருமணம் நல்லபடியாக முடிய, அர்ஜுன்க்கு ஒன்றுமே புரியவில்லை.

இவர்கள் இருவரும் என்ன பிளான் செய்யதார்கள்? நடந்து என்ன? ஒன்றும் புரியவில்லை.

ஏன் என்றால் அவனை அறிமுகபடுத்தும் போது சுபத்ரா அவனிடம் கண்ணால் ஏதோ வினவ, அவனும் கண்மூடி தலையசைத்தான். அவர்கள் அறியாமல் அர்ஜுன் அதை கண்டு கொண்டான்.

திருமணம், வரவேற்பு எல்லாம் முடிந்து, இரவின் தனிமையில் இருவரும் சந்தித்தனர்.

சுபத்ரா அர்ஜுனிடம் “அர்ஜுன் உங்களிடம் ஒன்று பேசலாமா?” என்றாள்

இப்போ வரபோகுது என்று எண்ணியவன் தன் மனதை திடபடுத்தி “சொல்லு” என்றான்.

“வந்து என்னை தவறாக எண்ணிக் கொள்ள கூடாது... உங்கள் ஆர்மி சர்வீஸ் முடிய இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கு இல்லியா” என்றாள்.

அவன் எதையோ எதிர்பார்க்க, அவள் இப்படி கேட்டவுடன் திகைத்து “ஆமாம்” என்றான்.

ஒருவேளை அது பிடிக்காமல், தன்னை வெளியே வர செய்ய, ஏதோ நாடகம் போட போகிறாளோ என்று எண்ணியவன், எதுவானாலும் அவளே சொல்லட்டும் என்று எண்ணியபடி காத்திருந்தான்.

“இல்லை.. ஆர்மியில் பெண்களுக்கு குறைந்த பட்சமாக ஐந்து வருடம் பணியாற்ற வாய்ப்பு உண்டாம் .. வந்து இந்த ஐந்து வருடம் நாம் தனியாகதானே இருக்க வேண்டும். எனக்கு ஆர்மியில் சேர ஆசை.. அதனால் நானும் Short Service Commission எக்ஸாம் எழுதி சேரட்டுமா? அந்த மினிமம் சர்வீஸ் வரை வேலை செய்து விட்டு, பிறகு நான் உங்களோடு செட்டில் ஆகி விடுகிறேன்.

என் வீட்டில் இதற்கு அனுமதி கிடைக்காது. உங்கள் வீட்டில் எல்லோரும் நாட்டு சேவை செய்பவர்கள் தானே. அதனால் ஒத்து கொள்வீர்கள் என்று தோன்றியது... அதனால் என் மாமா மகனிடம் பார்ம் வாங்கி அனுப்பி விட்டேன்.. நீங்களோ ... நம் வீட்டிலோ யாரும் ஆட்சேபிக்க மாட்டீர்கள் அல்லவா? “என்று வினவினாள்

அர்ஜுன் மனநிலை ஊப் என்று மாறியது, இப்படியும் ஒரு விருப்பமா.... இதற்குதான் இவ்வளவு பில்ட் அப் ஆ ..? இந்த நான்கு நாட்களாக மண்டை காய விட்டாளே .. என்று எண்ணியவன், அவள் தன் பதிலை எதிர்பார்ப்பதை உணர்ந்து ,

“இது என்ன ஆசை ?? பொதுவாக பெண்கள் ராணுவத்தில் சேர விரும்புவதில்லையே? வேண்டுமென்றால் நீயும் சர்வீஸ் கமிஷன் எக்ஸாம் எழுதி ஐ.ஏ.எஸ். இல்லை ஐ.பி.எஸ் ஆகலாமே...” என்றான்

“இல்லை .. ஸ்கூல், காலேஜ் என்.சி.சி...என்.எஸ்.எஸ்.. இதில் எல்லாம் இருந்தாலும், ராணுவத்தில் பணியில் சேர்வது எனது லட்சியம். . முதலில் திருமணம் செய்யாமல் நேராக ராணுவத்தில் சேர்ந்து விட்டால் பெர்மனென்ட்ட்டாக அங்கேயே வேலை செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்..

வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.. ஆனால் இந்த குறுகிய கால பணி பற்றி தெரிந்த பிறகு அட்லீஸ்ட் கொஞ்ச நாட்களாவது ராணுவத்தில் சேரலாமே என்று எண்ணினேன்...

என் மாமா மகன் தான், வீட்டினரை கஷ்டபடுத்தி செய்வதை விட, உங்களிடம் கேட்டு சேர சொன்னான்.. மேலும் நான் மட்டும் செய்வதை விட, என்னால் குறைந்த பட்சம் இரண்டு பேரை நாட்டுக்காக கொடுக்க முடியும் எனபதால் தான் நான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன். எனக்கு முதலில் பிடித்தது உங்கள் வேலை தான்.. பிறகுதான் உங்களை பிடித்தது..

அதனால்தான் உங்களிடம் பேசும் போதெல்லாம் உங்கள் வேலை பற்றியே பேசிக் கொண்டிருந்தேன்...“ என்று முடித்தாள் .

அவளின்  ஆசையை வியந்தவன் “உன்னை பார்க்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது... தாரளமாக உன் விருப்பம் போல் சேரலாம்.. அதற்கு தேவையான உதவி நானும், என் வீட்டாரும் செய்கிறோம் .. இப்போ நாம் நம் வேலையை பார்க்கலாமா ?” என்றவன் அவளை அள்ளி அணைத்தான்.

This is entry #41 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.