(Reading time: 18 - 36 minutes)

மியா…’ என்று பல்லைக் கடித்தான்.

‘சின்னப் பொண்ணு… ஏதோ தெரியாத சமையலை ஆர்வமா, நெட் பார்த்து கத்துட்டு பண்றாளே’ என்று, மனைவி உப்புமா என்ற பேரில் கொடுத்த கோந்தை, ரசித்து உண்பதாக அவன் போஸ் கொடுத்து தொலைத்திருந்தான்.

அந்த புகைப்படத்தை போட்டு, ‘ஊசலாடும் உப்புமா’ என்ற தலைப்பில் எதையோ மியா எழுத,... அதற்கு  அவள் பதிவுகளை தொடரும் நட்பு வட்டம் மட்டுமில்லாமல்,... இவன் பெயரையும் மியா டேக் (tag) செய்ததால், இவன் நண்பர்கள் என்று எண்ணிலடங்காதவர் லைக்கை தட்டி, அவர்கள் கருத்தை சொல்லி இருந்தனர்.

‘மானத்தை வாங்கிட்டாளே ராட்சசி…’ என்று குமைந்தவன் வேலை பிசியில், இந்தப் பிரச்சனையை கிடப்பில் போட்டான்.

மாலை வீட்டுக்கு வந்தவனிடம்,... அன்று அக்கம் பக்கம் நடந்த எல்லா விஷயங்களையும் அவன் கழுத்தில் ரத்தம் வரும் அளவுக்கு ஓயாமல் பேசியவள்,... பேச்சுவாக்கில் முகநூலை பற்றி ஆரம்பித்தாள்.

“பூனைக் குட்டி… என் செல்லமில்ல… மாமனோட போட்டோவை இப்படி பப்ளிக்கா போடலாமா, என் பப்ளி…?”

“எந்த போட்டோ சஞ்சு…?” கெண்டை மீன் கண்களை உருட்டி அப்பாவியாகக்  கேட்டவளை பார்த்து,...

“என்ன…? எந்த போட்டோவா…? அப்போ, ஏற்கனவே என்னோட வேற போட்டோவை  உன் ப்ளாக்ல போட்டு இருக்கியா…?”

“ம்ம்… அன்னைக்கு ஹனுமன்காரி கோவில் கிட்ட பார்த்த குரங்கு போல  நீங்க போஸ் கொடுத்தீங்களே…! நான் எடுத்த போட்டோ கூட, சூப்பர்னு சொன்னீங்களே…! அதை ‘மனுஷக் குரங்கு’ என்ற கேப்ஷன் போட்டு ரெண்டு வாரம் முன்ன போஸ்ட் போட்டேன். செம ரெஸ்பான்ஸ் மச்சி.”

‘இது எப்போ நடந்தது… இந்த  ரகு கடங்காரன் இதை சொல்லவேயில்லை’ என்று மனதில் பொறுமியவன்,...

“மியா ம்மா… உன் மாம்ஸ் செம ஹேண்ட்சம் பெர்சனாலிடி. இப்படி என் போட்டோவை  நீ  ஃபேஸ்புக்ல போட்டா, திருஷ்டி ஆகிடும் செல்ஸ்…! நீ எதை பத்தி வேணா எழுது,… பட் என்னையோ, நம்மளையோ பப்ளிக் ஃபிகர் ஆக்காதே பப்ளி குட்டி. எனக்கு ஷை ஆகுதில்ல” கொஞ்சலாக சொன்னவனிடம்,...

“உங்க ஃபிரெண்ட் ஜானோட வைஃப் மேரி, என்னோட ப்ளாக் தொடர்ந்து படிக்கறாங்க. அவங்க தான் எனக்கு முதல் கமெண்ட் போட்டவங்க. என் எழுத்துக்கு தீவிர ரசிகை அவங்க…! அவங்க கொடுத்த ஐடியா பிரகாரம், இப்போ ப்ளாக் பக்கத்தை முகநூலில் இணைச்சு, உங்க பேரையும் டேக் செஞ்சுக் கொடுத்தப்புறம் தான், எனக்கு செம ரெஸ்பான்ஸ்  சஞ்சு.”

‘அந்த ஜான் தடியன் தான் இதுக்கெல்லாம் காரணமா…? இருக்குடா உனக்கு…’ என்று கருவியவன்,... மனைவியை, கெஞ்சிக், கொஞ்சி, தாஜா செய்ய…

“ரொம்ப நேரம் செலவழிச்சு, இந்த போஸ்ட்டை டைப் செஞ்சுட்டேன். நாளைக்கு நான் போஸ்ட் போடற நாள், இப்போ என்ன போடுவேன்…? ப்ளீஸ் சஞ்சு… இந்த ஒரு வாட்டி இதைப் போட்டுடறேனே” என்று தான் காலையில் அமர்ந்து உருவாக்கியதை, அவன் பார்வைக்கு வைத்தாள்.

ரெண்டு நாள் முன்பு, அவள் செய்த மசால்வடை நன்றாக வந்திருக்க,... கடைசி வடைக்கு, இருவரும் போட்டி போட, மியா தான் வெற்றி பெற்றாள். அப்போது அவன் முகத்தை கையில் இருந்த போனில் க்ளிக்கிய போட்டோவை வைத்து ‘வடப் போச்சே’ என்று கிறுக்கி இருந்தாள்.

“மிய்யா… நோ… நீ போஸ்டும் போட வேணாம். எதுவும் பண்ண வேணாம். என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கிண்டல் பண்றாங்க. வனவிலங்கு, இயற்கை, பூக்கள்ன்னு எழுதிட்டு இருந்தியே அதை மட்டும் பண்ணு.”

உர்ரென்ற முகத்தோடு,... “அதை பத்தியெல்லாம் போட்டா, யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்க”

“அதுக்கு… உன் போதைக்கு என்னை துவையல் அறைக்கறியா செல்ஸ்… வேணாம் மியா”

‘சரி கொஞ்ச நாள் விட்டு பிடிப்போம்’ என்று முடிவு செய்த மியா, இப்போது கணவனை தாஜா செய்ய, அன்றைய மாலை இனிதே கழிந்தது.

றுநாள் காலை…

“ஆஆஆ…” என்ற மியாவின் அலறல், நல்லத் தூக்கத்தில் இருந்த சஞ்சய்யை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிப் பாடலானது.

“பாருங்க… சஞ்சு… பாருங்க…” என்று குதித்துக் கொண்டிருந்தவள்,... அப்போது தான் குளித்து விட்டு, இன்னும் ஈரம் சொட்ட நைட்டியில் நின்றுக் கொண்டு, இல்லை குதித்துக் கொண்டு இருந்தாள்.

“பார்த்துட்டு தான் இருக்கேன் மியா குட்டி… அப்படியே ஜில்லுனு இருக்கு…” கணவனின் வழிசலான கூற்றில் அவன் புறம் திரும்பியவள், அவன் பார்வை தன் மீது நிலைத்து இருப்பதைக் கண்டு, பல்லைக் கடித்தாள்.

“என்னை பார்க்கச் சொல்லலை… அங்க…” அவளின் நீட்டிய விரல் சுட்டிய திசையில் எதுவும் காணாமல்,...

“என்ன…?” என்பதாக அவன் கேட்க,...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.