(Reading time: 18 - 36 minutes)

வசரத்துக்கு இது போதும்’ என்று நினைத்து, அதை வாங்கிக் கொண்டு நன்றி சொன்ன சஞ்சயிடம்,...

“இந்த எலிங்க செம கேடிங்க சார்... வெளிநாட்டு சாக்லேட் வெச்சா, வகையா மாட்டுது” என்று கூடுதல் தகவல் சொன்னவருக்கு மீண்டும் நன்றி சொல்லி விட்டு, வீட்டுக்குள் நுழைந்தான் சஞ்சய்.

“ரொம்ப பயந்துட்டியா செல்ஸ்…” என்றவனை இறுக அணைத்த மியாவிடம்,...

“சாரி டா… இப்படி, வனாந்தரமா இருக்க இடத்துல இது ஒரு பிரச்சனை. அவசரத்துக்கு சின்ன பொருள் கூட இங்க வாங்க முடியாது. டவுனுக்கு தான் போகணும். இன்னைக்கு நைட் இந்த பொறி உபயோகிக்கலாம். தேவைப்பட்டா, நாளைக்கு நான் வரும் போது வேற பொறி வாங்கிட்டு வரேன்.”

“ம்ம்… அப்போ இன்னைக்கு நைட்டும் மாட்டாதா…?” என்றவளை சமாதானப்படுத்தி, “இரு பப்ளி… நான் ஒரு சின்ன குளியல் போட்டுட்டு வந்துடறேன்” என்று பெட்ரூமுக்குள் நுழைந்தான்.

குளித்து விட்டு வந்தவன்,... “நான் தோசை வார்க்கறேன்… நீ கிட்சென்ல, இருக்க திண்பண்டங்களை, இடம் பார்த்து ஷெல்ஃப் உள்ள எடுத்து வை” ஆளுக்கு ஒரு வேலையை பங்கிட்டு, சமையலறையை ஒழித்தனர்.

“எங்க பார்த்த…?” பின் கட்டு வாசலருகே மியா கை நீட்ட,...

அங்கே அந்த பொறியை வைத்தவன்,... காட்பரி சாக்கலேட் பாக்கெட்டை எடுக்க,... “ஹுஹூம்… இந்தாங்க…” என்று ஒரு (ferroro rocher) ஃபெரோரோ ரோச்சரையும், ஒரு (lindt )லின்ட் சாக்கலேட்டையும் நீட்டினாள்.

“அடிப்பாவி…, உனக்கு ரொம்ப பிடிக்கும்னு போன மாசம் வந்தப்ப, உன் அண்ணா வாங்கிட்டு வந்த ஃபாரின் சாக்லேட்டை, எனக்கு ஒண்ணு கூட தராம தனியா கட்டு கட்டினவ,... கட்டின புருஷனை விட்டுட்டு, எலிக்கு அதைக் கொடுக்கறியா…?

“ச்ச்… சும்மா இருங்க… வாசு சார் சொன்னது காதுல விழல… எனக்கு இன்னைக்கு அந்த எலி மாட்டணும்.”

“காட்பரி போதும் டா…”

“இப்போ நீங்க இதை வெக்கறீங்களா, இல்லையா…?” சந்திரமுகி குரலில் மியா கேட்க,...

 “சரி… அதுக்கு எதுக்கு ரெண்டு…?”

“எலிக்கு எந்த சாக்லேட் பிடிக்கும்னு எனக்குத் தெரியாதே…!”

“குஷ்டம் டா  சாமி…” என்று பொறியை செட் செய்தான் சஞ்சய்.

“இருங்க… குடிக்க தண்ணி எடுக்கணும்…” என்று மீண்டும் உள்ளே போய் பாட்டிலை நிறைத்துக் கொண்டு வந்தாள். சமையலறை விளக்கை அணைத்து விட்டு, கதவையும் தாளிட்டனர்.

“பட்டுக் குட்டி…” என்று மனைவியை ஆசையாக  சஞ்சய் நெருங்க,...

“ஷுஷ்… இருங்க… சமையலறையில பாத்திரம் உருளற சத்தம் கேக்குது…”

“இல்லடா…”

“சுஷ்… பேசாதீங்க… பொத்துன்னு சத்தம்…” இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர்.

“ஒரு வேளை எலி பொறிக்குள்ள மாட்டிடுச்சோ… போய் செக் பண்ணலாமா…?”

“மியா… பேசாம படு. காலையில செக் பண்ணலாம்” என்றவனின்,... அணைப்பில் அமைதியானவள், உறங்க ஆரம்பித்தாள்.

யாரோ உலுக்கவும், தூக்கம் கலைந்தவன், “என்ன மியா…” என்று மேஜையில் இருந்த கடிகாரத்தை பார்க்க,... மணி ஐந்து என்றுக் காட்டியது.

“எழுந்துக்கோங்க… எலி மாட்டியிருக்கும்… அதை தூக்கி போடணும். நிறைய வேலை இருக்கு.”

“இம்சை அரசி… இன்னும் கொஞ்ச நேரம் படு… நான் தூங்கணும்” என்று போர்வையை இழுத்து மூடியவன்,... “ராட்சஸி…” என்று அலறிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

ஜக்கில் இருந்த நீரை மியா ஊற்றி இருந்ததால் முற்றிலும் நனைந்து இருந்தான்  சஞ்சய்.

“எனக்கு சரியா தூக்கம் வராம, நான் கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருந்தா, நீங்க…” இடுப்பில் கை வைத்து முறைத்த மியாவை, பாவமாக பார்த்தவன்,...

‘இனி எப்படியும் தூங்க விட மாட்டா’ என்று அலுத்தவாறு எழுந்து வந்தான்.

“உள்ள போங்க… பாருங்க…” என்று சமையலறை வாசலில் நின்று மியா ஊக்க,...

“ம்ஹூம்… எலி மாட்டல…” என்றவன் பேச்சைக் கேட்டு, உள்ளே ஓடி வந்தாள்.

“ஐயோ சாக்கி காணோமே… நீ எடுத்தியா…?” என்னும் பாவனையில் சஞ்சய்யை பார்க்க,...

“ச்சீ…” என்று முகம் சுழித்தவன்,... “கேடி எலி, நேக்கா வந்து சாக்கியை எடுத்துட்டு போயிருக்கு… ஹ்ம்ம்… கொடுத்து வெச்ச எலி…”

“ப்ச்… இப்போ என்னப் பண்ண…?”

“அதுவா மாட்டும்… இன்னைக்கு நைட் திரும்ப பொறி வைக்கணும்.”

“நான் வேணா மசால் வடை பண்ணட்டா…”

“வேணா செல்ஸ்… எலி பாவம்… அந்த எலியை உயிரோட பிடிக்க ஆசைப்படறேன்.”

மியாவின் முகத்தில் அதிருப்தியைக் கண்டு,... “உன்னை பார்த்து நான் பயப்படுவேன்… நீ போடுறதை சாப்பிடுவேன்… எலியுமா…?”

“உங்களை…” என்று அவனை துரத்திக் கொண்டு மியா வர,... கொஞ்சல்கள் நீண்டது.

ன்று மாலை நேரம் கழித்து வந்த சஞ்சய், பொறி விஷயத்தை சுத்தமாக மறந்து விட்டான். உடல் அலுப்பில் பொறியும் வைக்க மறந்து விட்டவனுக்கு, மறுநாள் மியாவின் கத்தலோடு விடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.