(Reading time: 18 - 36 minutes)

தவை திறந்து நண்பனை வரவேற்றவன் இருவருக்கும் அறிமுக படலத்தை முடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான் ஜகனை...

சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க சென்றான் ஜகன்,தனிமையில் இருந்த ஹரியின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஆக்கிரமித்து இருந்தன..அப்படி  சொல்லி இருக்க கூடாதோ அவசரபட்டு விட்டோமோ என்ன நினைத்திருப்பாள் என தனக்கு தானே கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தான்..அவனது நிலையை கண்ட ஐஷூ அதனை மனதில் குறித்து கொண்டாள்..

என்ன அண்ணா வெளில போறோமா இல்லையா இரண்டு பேரும் இப்படி பேயறஞ்சமாறி இருக்கீங்க ரெடி ஆகலையா?

தன்னினைவில் இருந்து மீண்டவன் ஒருவாரு சமாளித்து கொண்டு போலாமேடா நா எப்பவோ ரெடி..ஏன் உன் ப்ரெண்டுக்கு என்னாச்சு?

தெரில நா ஏதோ மனசு கஷ்டமா இருக்கு வெளில வரலநு சொல்றா நா தான் வற்புறுத்தி கிளம்ப சொல்லிருக்கேன்..அவள் பேச பேச அவன் முகத்தில் தவிப்பின் சாயல்..ஏதோ புரிவது போல் இருந்தது ஐஷூவிற்கு..

அண்ணா என்று அவன் கரம் பற்றியவளை தன் அருகில் அமர செய்தான்..பின்பு ஏதோ முடிவுக்கு  வந்தவனாய் நடந்த அனைத்தையும் தங்கையிடம் கூறி முடித்தான்,எங்கே தன் செயலால் இரு பெண்களின் நட்பு பாதித்துவிடுமோ என்ற பதட்டம் வேறு..தங்கை என்ன கூறுவாளோ என்ற பயம் கண்களில் தெரிய அதை பார்த்த ஐஷூவோ பலமாக சிரித்தாள்…

நினச்சேன் அண்ணா நேத்தே உன்னை கவனிச்சேன் என்னடா இவன் இப்படி இருக்கானேனு..இதான் விஷயமா,..எனிவே மை ஹார்ட்டி விஷ்ஷஸ் டு யு நா..சூப்பர் செலக்ஷன்..என் தோழிங்கிறதுக்காக சொல்லல நிஜமாவே ரொம்ப நல்ல பொண்ணுனா மீனு…ஆனா ஒன்னு தயக்கம்னா என்னனே தெரியாத உன்னையே இப்படி ஆக்கிட்டாளே,என்று வாரினாள்..அவள் காதை திருகியவன் சரியான வாலு டீ நீ..சரி நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்துருக்காங்க தெரியுமா என்றான் புன்னகையாய்..

யாரு நா?நேத்து கூட நீ ஒஒன்னும் சொல்லல..என்று பேசிக் கொண்டிருக்கும் போதே பின்னிருந்து அவள் கண் பொத்தினான் ஜகன்..சிரித்துக் கொண்டே இடத்தை விட்டு நகர்தந்தான் ஹரி…

அவனை கண்டுகொண்டவள் ஜகா அத்தான் எப்போ வந்த ஏன் என்கிட்ட சொல்லவேயில்லஎன்று கேள்விகளை அடுக்கினாள்..ஹே ஜஷ் எப்படி கண்டுபுடிச்ச என்றான் ஆச்சரியமாய்..உன்னை எனக்கு தெரியாதா அத்தான் என்று விழி தாழ்த்திக் கொண்டாள்..அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்,காலம் பூரா இப்படி என்கூடவே இருந்துர்யா ஐஷ்..நா உன்னை பொக்கிஷமா பார்த்துப்பேன் என்று கூறியே விட்டான் விழியில் மின்னும் காதலுடன்…

ஹப்பா ஒரு வழியா என் அத்தான் என்ட ப்ரபோஸ் பண்ணிட்டான் என்றபடி அவனை இறுக கட்டிக்கொண்டாள்..நடப்பதை அவன் உணர்வதுக்குள் கன்னத்தில் முத்தமிட்டு லவ் யு மேட்லி டா ஜகா என்று அந்த இடத்தைவிட்டு பறந்துவிட்டாள்…வாயெங்கும் புன்னகையுடன் சாப்பிட அமர்ந்தவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் ஹரி..ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை..அண்ணா சாப்பாடு போட்டு ரொம்ப நேரம் ஆச்சு சாப்பிடுங்க என்ற குரலில் அனைவருமே நிகழ்காலத்திற்கு வந்தனர்..

அக்குரலுக்கு சொந்தமான மீனுவை முவருமே ஒரு ஒரு சிந்தனையோடு ஏறிட்டனர்..ஐஷூவிற்கோ,இவள் இவ்வாறு உறவுமுறை வைத்து யாரையுமே அழைத்தததில்லையே என்ற ஆச்சரியம்..ஜகனிற்கோ பார்த்த சில மணி நேரங்களிலேயே தன்னை அண்ணனாய் ஏற்று நடத்துபவளின் அன்பு,ஹரி க்கோ இவள் இவ்வளவு இயல்பாய் கூட பேசுவாளா என்ற ஆராய்ச்சி …

அனைவரின் பார் வையும் தன் மீது இருப்பதை உணர்ந்தவள்,,இல்லை ஐஷூ எனக்கு உயிர்த்தோழி அவளை தவிர சொந்தம்நு சொல்லிக்கவும் எனக்கு யாரும் கிடையாது..தனிமை மிகவும் கொடுமையானது அதிலிருந்து என்னை மீட்டு என் குறைகளோடு என்னை ஏத்துகிட்டவ..அவளின் வாழ்க்கை துணையா வர உங்கள அப்படி கூப்பிடனும்நூ தோணிச்சு தப்பா எடுத்துகாதீங்க என்றாள் சிறு குரலில்..

ச்ச ச்ச அப்டிலாம் ஒன்னும் இல்லடா இப்போதிலிருந்து நீ என் தங்கைடா என்று பாசமாய் தலை வருடினான்..ஐஷூவோ அவளை கட்டிகொண்டாள்..நிலைமையை சரியாக்க எண்ணியவனாய் போதும் போதும் விடு அங்க பாரு ஜகா காதுல புகையா வருது என்றான் ஹரி,.போடா அண்ணா என்றபடியே தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஐஷூ..

ஏற்கனவே முடி வு செய்தபடி அனைவரும் ஔட்டிங் செல்ல தயாராக வந்து ஹாலில் நின்றனர்..கடைசியாக வந்த மீனுவை கண்டவன் கண் சிமிட்டவும் மறந்துதான் போனான்..ஐஷூவின் வற்புறுத்தலினால் அணிந்து கொண்ட அவ ளது கடல் நீல நிற சுடிதாரில் தேவதையாய் ஒளிர்ந்தாள்..அண்ணா கல்யாணத்துக்கு அப்புறம் பார்கிறதுக்கு கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ என்று தமையனின் காதை கடித்தாள் ஐஷூ..

சுயநினைவிற்கு வந்தவன் விறுவிறுவென காரை நோக்கி சென்றுவிட்டான்..

ஏனோ மனம் ஏமாற்றமாய் உணர்வதை தடுக்க முடியவில்லை மீனுவால்..அவள் அருகில் வந்த ஐஷூ,மீனு நா அவரோட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு நீ அண்ணாவோட கார்ல வந்துடேன்..சாரி சாரி மீனு செல்லம் என்று பதிலுக்கு காத்திராமல் ஓடிவிட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.