(Reading time: 18 - 36 minutes)

காரின் அருகில் வந்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தாள்..அதை உள்ளுக்குள் ரசித்தவன்,முகத்தில் காட்டாது காரின் முன் கதவை திறந்துவிட்டான்..எதுவும் பேசாமல் அவள் அமர ஈஸிஆர் நோக்கி கார் பறந்தது..சிறிது நேரம் மௌனத்திலே கழிய,காரை ஓரமாய் நிறுத்தி அவள்புறம் திரும்பினான் ஹரி..அவனை பார்க்க நிமிர்ந்தவள் அந்த கண்களில் எதை கண்டாளோ அப்படியே விழி தாழ்த்திக் கொண்டாள்..

“மீனு”

“…………..”

“மீனு மா”

“…………”

உதடுகளை அழுந்த கடித்து உணர்ச்சிகளை அடக்கி கொண்டிருந்தாள் மீனு..

“அஎன்னை பிடிக்கலையாடா”—ஹரி

உடைந்து அழுதேவிட்டாள்..இதை சற்றும் எதிர் பாராதவன் பதறிவிட்டான்..

மீனு என்னாச்சுடா,அழாத மா என்னால தாங்கிக்க முடில..ப்ளீஸ்டா..என்று அவளின் கரம் பற்றி தேற்றினான்..சற்றே அழுகை மட்டுபபட்டு இருந்தது..

இப்போது முற்றிலுமாக தன் நிலைக்கு திரும்பியிருந்தவளை நோக்கி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்,மறுக்காமல் வாங்கி அருந்தினாள்..

இங்க பாரு மீனு என்ன பத்தி நீ என்ன நினைக்குறநு தெரில,ஆனா உன்ன நா உயர்வான இடத்துல வச்சுருக்கேன்,பெண்களின் கண்ணீர் பொக்கிஷம் மமாறி இன்னோரு தடவ அத இப்படி அநாவசியமா வேஸ்ட் பண்ணாத..என் மனச நா சொல்லிட்டேன் நீயும் மனசுல பட்டத சொல்லிடு..அதுக்கு மேல நநா உன் வழியில வரமாட்டேன்..நா பணக்காரன்கிறதால என்ன ப்ளே பாய்நூ நெனச்சுடாத,.என் வாழ்க்கைல நா இவ்வளவு ததூரம் பேசுற முதல்  பொண்ணும் நீதான்,கடைசி பொண்ணும் நீதான்..அதுல எந்த மாற்றமும் இல்ல..தோனினத சொல்லிட்டேன் இனி நீதான் சொல்லனும்…

மறுபடியும் அங்கே மௌனமே ஆட்சி நடத்த பொறுமையிழந்தவனாய் காரை நகர்த்த  ஆயத்தமான நேரம் வாய் திறந்தாள் மீனு..

“ஹரி”

“….........”

அவள் அழைத்தவிதமே அவளின் மனதை கோடிட்டு காட்ட இருந்தாலும் அவளே கூறட்டும் என்று அமைதிகாத்தான்..

ஹரி,எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசசு..எனக்குநு அக்கறை படவோ என்னை பத்தி யோசிக்கவோ யாரும் கிடையாது,ஆனா உங்க நிலைமையே வேற..உங்க ஸ்டேடஸ்கு ஐஷூவோட ப்ரெண்ட்ஷிப் கிடச்சதே பெரிய விஷயம் அத தாண்டி ஆசப்பட எனக்கு தகுதியில்ல,.அதனால…

“அதனால..”-ஹரி.

அவனின் ஊடுறுவும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்தாள் மீனு.

இங்க பாரு உனக்கு என்ன பபிடிச்சுருக்கா இல்லையா னு மட்டும் சொல்லு,அதவிட்டுட்டு நமக்குள்ள 8 வித்யாசம் கண்டு பிடிச்சுட்டு இருக்காத என்றான் காட்டமாய்..தன்னவள் தன்னை தானே தாழ்த்திக் கொள்வதை அவன் விரும்பவில்லை…

அதோடு பணம் தான் ஸ்டேடஸ் என்றால் நானும் உன்னை போல் மாத சம்பளக்காரன் தான்..என் அப்பாவின் சொத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லநு எழுதி குடுத்துறேன் அப்போ சம்மதமா..

ஹரி ஏன் இப்படிலாம் பேசுறீங்க..

நீ தான் பேச வைக்குற..மீனு, நேத்து வர எனக்கு காதல்னு ஒன்னு வரும்னே நா நினைச்சது இல்ல..அதுவும் முதல் காதல்,29 வயதில்..ஹா ஹா தன்னை நினைத்தே சிரித்து கொண்டான்,. ஆனால் இன்று நிலைமையே தலைகீழ்..

கல்லூரி காலத்தில் கூட எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்த்ததில்லை மீனு,பெருமைக்காக சொல்ரேன்னு நினைக்காத,யாரைப் பார்த்தும் இவ என்னுடையவள்நு எண்ணம் வந்ததில்லை..அதனால இப்போ நா எடுத்தது ஒன்னும் அவசரபட்டு எடுத்த முடிவு இல்ல..அத புரிஞ்சுக்கோ..

ஹரி என் மேல நீங்க வச்சுருக்குற நம்பிக்கையும்,அன்பும் என்னை கண்கலங்க வைக்குது..இதுக்கு நா தகுதியானவளானு கூட மனசோரத்துல சஞ்சலம் இருக்கு ஆனா எல்லாத்தையும் தாண்டி எனக்காக என்கிட்டயே இருந்தாலும் நீங்க உங்க நிலையிலிருந்து இறங்குறது எனக்கு பிடிக்கல..ஒரு வேளை இதுதான் காதல்னா….

நா உங்களை……….

மனசார விரும்புறேன்,உங்களை முதல் தடவை பார்த்த அப்போவே உங்களை போன்றே இனம் புரியாத உணர்வு என்னுள்ளும்,என் மனதை நானே அடக்கி கொண்டேன்..ஆனா இப்போ புரியுது எனக்காக பிறந்தவர் நீங்க தான்னு..என்றவள் வெட்கத்தை மறைக்க வெளியே பார்வையை சுழல விட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.