(Reading time: 10 - 20 minutes)

ப்படி வாழ்க்கை காவிரி டெல்டா போல் காய்ந்திருந்த சமயத்தில் தான் இவள் வாழ்வில் வந்தான் அர்னால்ட்.  அமெரிக்காவிலிருந்து இந்திய சுற்றுப்பயணம் வந்தவன், திருச்சி பேருந்து நிலையத்தின் கட்டணக் கழிப்பறையின் ஆண்கள் அறையினுள் செல்லும் முன், பெண்கள் அறை அருகே நின்றிருந்த இவளைக் கண்டதும் கழிப்பறைக்குள் கூட செல்லாமல் காதலில் விழுந்தான். அவளும் திரும்பக் காதலிக்க, அந்த அன்பின் அடையாளமாய் ஏழரை மாதத்திலேயே பிறந்தான் ஒரு மகன். அவனுக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் தேடும் படலத்தின் போது, chillzeeல் வந்திருந்த ஒரு சிறுகதையின் கதைநாயகனின் பெயரான நறுமணக்குமார் என்பதையே தன் மகனுக்கு பெயராக்கினாள்.

இந்த சமயத்தில் தான் அர்னால்ட் கம்பி நீட்டி விட்டு காணாமல் போனான். எங்கே தேடியும் கிடைக்கவில்லை.  ரப்பர் பேன்ட் கழன்றதும் தளரும் பெண்ணின் கூந்தல் போல் உடனே மனம் தளராமல், 'மனதில் உறுதி வேண்டும்' சுகாசினி போல் பிரச்சினைகளை தானே எதிர்கொள்ளத் தீர்மானித்தாள். தீர்மானித்த கையோடு தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு, 'சொல்வதெலாம் உண்மை' நிகழ்ச்சிக்குப் போய், லட்சுமி மேனன் மூலமாக … .. ஸாரி ..லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் மூலமாக போலீசை விட்டு அர்னால்டைத் தேடிப்பிடித்து வாயிலேயே நாலு மிதி மிதித்து புழல் சிறைக்கு அனுப்பிவிட்டு சந்தோசமாய் கால் டாக்ஸியில் வீடு வந்து சேர்ந்தாள்.

பின்னர் நறுமணக்குமார் ஷேவ் செய்யா தாடியைப் போல் கடகடவென வளர்ந்தான். பின்னொரு நாள் 'நட்சத்திர ஜன்னலில் வானமெட்டிப் பார்க்குது' என்ற கதையாக ஒரே பாட்டில் படித்துப் பணக்காரனாகி அமெரிக்காவில் போய் ஒபாமா வீட்டுக்குப் பக்கத்து தெருவில் குடியேறிவிட்டான்.

அங்கே சென்ற பின் எவ்வளவோ முறை தன்னுடன் வந்து விடுமாறு அனுஷ்காவை அழைத்திருக்கிறான். ஆனால் சொந்த மண்ணை விட்டுப் போக மனமில்லாததாலும், ஆதார் கார்டிலும், வோட்டர் ஐடியிலும் அட்ரஸ் பொருந்தாமல் இருப்பதால் பாஸ்போர்ட் எடுக்க இயலாத காரணத்தாலும் அவள் அமெரிக்கா செல்லவில்லை.

மிக்சரில் கிடக்கும் கடலை போல அவ்வப்போது மட்டுமே இவள் வாழ்வில் சந்தோஷங்கள் தலைப்பட்டன.  அப்படிப்பட்ட நாள் தான் இன்று.

சாப்பிட்ட கையோடு குன்று இவளருகே ஓடிவந்தான். 

“சாப்பிட்டாச்சா கண்ணா?” என்றாள்.

“ம்ம்ம்..இப்போ உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் பாட்டி" என்றான்.

“அப்படியா? என்ன அது?” ஆவலோடு கேட்டாள்.

தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சின்ன புத்தகத்தை எடுத்தான்.

“ரேஷன் கார்ட் மாதிரி இருக்கே"

“ஐயோ பாட்டி. இது உங்க பாஸ்போர்ட்"

இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“எப்படிடா தங்கம் இது கிடைச்சுது? இப்ப தான் எனக்கு பாஸ்போர்ட் இல்லைன்னு இவங்ககிட்ட சொல்லிட்டு இருந்தேன்"

“அதெல்லாம் எப்படியோ வாங்கிட்டேன்" என்றாள் பொன்வண்டு.

“சொல்லுமா. எனக்கு தான் கரெக்டான ஐடி ப்ரூப் கூட இல்லையே" என்று ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“பாட்டி. ஒரு பக்கக் கதைனு டைட்டில் வச்சிட்டு ரொம்ப இழுத்தா படிக்குறவங்க கடுப்பாகிடுவாங்க. லாஜிக் எல்லாம் கேட்டுட்டு இருந்தேனா, நாங்க கெளம்பிடுவோம். அப்புறம் மீதி கதையும் இந்தியாவுல நடக்குற மாதிரி போய்டும். பரவாயில்லையா?” என்றான் குன்று சற்றே கடுப்பாக.

று மணி நேரத்திற்குப் பின் அமெரிக்காவில்..

நைட்டுக்கு சுட தோசை மாவு வாங்கிவரச் சொல்லி சீனாக்கார மருமகள் சிங் மங் எங், அனுஷ்காவை கடைக்கு அனுப்பினாள்.  சிக்காகோ நாடார் மளிகைக் கடையில் மாவு வாங்கிவிட்டு நூறு டாலர் தாளை நீட்டிய போது , நாடார் அண்ணாச்சி சில்லறை இல்லையென்று அலுத்துக்கொண்டார். கடையில் வேலை பார்க்கும் பையனை அழைத்தார்.

“ஏலே அருமை..இங்க ஓடியா.. எலிசபெத் அக்கா கடைல அண்ணாச்சி ஐநூறு டாலருக்கு சில்லறை கேட்டாருன்னு சொல்லி வாங்கிட்டு வா" என்றார்.

ஏதோ ஓர் அரை டவுசர் பையன் வருவானென எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு, எதிர்பாராமல் வரும் எக்ஸாம் ரிசல்ட் போல ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  அருமை, ஒரு அறுபது வயது வெள்ளைக்கார கிழவன். கை நடுங்கியவாறே சில்லறை வாங்க எலிசபெத் கடைக்குச் சென்றான். இதற்கு முன்னால் அவனை எங்கேயோ பார்த்தது போலத் தோன்றியது. அண்ணாச்சியிடம் கேட்டு விட்டாள்.

“இவன் பேரு அர்னால்டு. எனக்கு சட்டுனு அந்தப் பேரு வாயில வராது. அதாம்மா அருமைனு மாத்திட்டேன்" என்று விளக்கினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.