(Reading time: 10 - 20 minutes)

தைக் கேட்டதும் அவள் இதயம் மூன்றாய்ப் பிளந்தது. அவள் சந்தேகப்பட்டது சரி தான். அன்று இவளை ஏமாற்றிவிட்டுப் போன அதே அர்னால்ட் தான்.

சில நிமிடங்களில் திரும்பி வந்த அவனை தனியே அழைத்துச் சென்றாள் அனுஷ்கா.  ஆற்றின் குறுக்கே நிற்கும் அந்த பாலத்தின் மேல் இருவர் மட்டும் எதிரெதிர் திசை பார்த்து நின்றுகொண்டிருந்தனர்.

“என்ன அடையாளம் தெரியுதா அர்னால்ட்?”

“எப்படி மறக்க முடியும் அனுஷ்கா? போலீஸ்காரங்க பொண்டாட்டி கூட சண்டை வந்த போதெல்லாம், என்ன தான லாடம் கட்டி கோபத்தைத் தனிச்சுக்கிட்டாங்க.  அதுக்கெல்லாம் காரணமான உன்ன எப்படி மறக்க முடியும்?”

“ஹ்ம்ம்..நீங்க எனக்குப் பண்ணினத மட்டும் அவ்வளவு சுலபமா மறக்க முடியுமா? நீங்க விட்டுட்டுப் போன பின்னாடி என் வாழ்கை என்னாச்சு தெரியுமா?”

“என்னாச்சு?”

டுத்த பத்தொன்பது நிமிடங்களில் தன் கதையை சோகமாக  சொல்லி முடித்தாள் அனுஷ்கா. சொல்லி முடித்துவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் சைன்ஸ் எக்ஸாம்க்கு படித்தவனுக்கு மேத்ஸ் எக்ஸாம் வைத்ததைப் போல ஒரு குழப்ப ரேகை ஓடியது.

“என்ன  யோசிக்கிறீங்க அர்னால்ட்?”

“இல்ல.. நீ சொன்னது அவ்ளோ ஒன்னும் சோகமா இல்லையே. சொல்லப்போனா இது ஒரு கதை மாதிரியே இல்லையே" என்றான்.

ஐந்து நிமிடம் மௌனமாய் இருந்தாள்.

“ஏன் ஏதும் பேச மாட்டேங்குற?”

“ இது மாதிரி சோக சிறுகதை க்ளைமாக்ஸ்  சீன்ல ஒவ்வொரு டயலாக்கும் அஞ்சு நிமிஷ கேப் விட்டு தான் பேசணும். அது கூட தெரியாத அர்னாலட்?”

அவனும் ஐந்து நிமிடம் அமைதியானான். அப்புறம் பேசினான்.

“இல்ல. நான் சிறுகதைகள் படிக்கிறதில்ல. அதனால இந்த நுணுக்கமெல்லாம் தெரியாது"என்றான்.

இன்னொரு ஐந்து நிமிடங்கள் ஆனது.

“சரி..இப்போ என்ன சொல்ல வர்ற" என்றான்.

அவள் ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள். பின்னர் பேசினாள்.

“தெரில அர்னால்ட். இந்தக் கதைய இப்போ எப்படி முடிக்கிறதுனு தெரியாம இதை எழுதிட்டு இருக்கிறவர் முழிக்கிறார்னு தோணுது"

“ஆமா.. ஒரு ப்ளோவா போயிட்டு இருந்த கதை இப்போ எங்க போறதுன்னு தெரியாம, தட்டு தடுமாறி தறிகெட்டுப் போயிட்டு இருக்கிற மாதிரி தான் எனக்கும் தோணுது"

“அப்போ கதைய முடிச்சிருவோமா?” என்று கேட்டாள்.

“முடியாது அனுஷ்கா. இது ஒரு சோகக் கதைனு சொல்லி ஆரம்பிச்சிட்டு, கதையும் இல்லாம, சோகமும் இல்லாம குழப்பி முடிச்சா அது நியாமில்ல"

“அடப்போங்க அர்னால்ட். உங்களுக்கு chillzee பத்தித் தெரியாதா? இங்க இருக்கிற வாசகர்கள் ரொம்ப நல்லவங்க. மொக்க கதை எழுதினாலும் சூப்பர் சூப்பர்னு கமெண்ட் போட்டு நம்ம மானத்தக் காப்பாத்தி விட்டுடுவாங்க"

“அதுவும் சரி தான். இல்லேனா இப்ப என்ன சொல்ல வர்றோம்னு நமக்கே தெரியாம கதை போயிட்டு இருக்கும் போது,  இவ்ளோ தூரம் மதிச்சு படிக்கிறாங்க பாரு. உண்மையான தெய்வங்கள் இவங்க"என்றான் அர்னால்ட்.

“அப்போ கதையை முடிச்சிக்கலமா?”

“இல்ல, சொன்ன வாக்க நாம காப்பாத்தி ஆகணும். இப்போ ஒரு சோகமான முடிவு வந்தே ஆகணும்"

அனுஷ்கா யோசித்தாள். ஆழமாக யோசித்தாள்.  ஆழமான அந்த ஆறு இவளிடம் ஏதோ சொல்லியது. திரும்பி அவனது கண்களைப் பார்த்தாள். அவனுக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தது.  இருவரும் அருகில் நெருங்கி வந்து கைகளைப் பற்றிக்கொண்டனர்.

“சிரிங்க அர்னால்ட். நான் சாகுறதுக்கு முன்னாடி பாக்குற கடைசி முகம் உன்னோடதாத்தான் இருக்கணும்" என்றாள் கண்ணீரோடு.

கஷ்டப்பட்டு சிரிக்க முயற்சி செய்தான். தன் பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து , 'என்ன சத்தம் இந்த நேரம்' பாடலை சுட்சுவேஷன் சாங்காக ப்ளே செய்தான்.

இருவரும் கண்களை மூடிக்கொண்டு அந்த பயங்கரமான ஆற்றில் சோகமாக வேகமாக குதித்தனர்.  சோகமாக மூச்சுத்திணறி, சில சோக நிமிடங்கள் கழிந்த பின்னாடி சோகமாக இறந்தனர். சோகமாக சொர்க்கம் சென்றனர்.

ன்றிரவு நெடுநேரம் அனுஷ்காவுக்காகவும்,அவள் வாங்கி வர வேண்டிய தோசை மாவுக்காகவும் சோகமாகக் காத்திருந்தனர் நறுமணக்குமாரும், சிங்மங்எங்கும், குழந்தைகளும். அவள் வரவே வராததால், தோசைக்கு பதில் சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு சோகமாகத் தூங்கச் சென்றனர்.

நன்றி வணக்கம்.... மீண்டும் சந்திப்போம்...

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.