(Reading time: 17 - 33 minutes)

சாப்டியா?” என்றான். எனக்கு அப்பவே எதோ தப்பா போகப் போகுதுன்னு தெரிஞ்சிட்டு… உள்ளுக்குள் எனை மீறிய அந்த உதறல்…..

அதற்குள் அவன் “கேன்டீண்ல போய் சாப்டுட்டு வா…” என்றபடி ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து என் முன் வைத்தே இருந்தான். நான் செத்தே போயிருந்தேன்…..என் கண் சிவந்து….அழக் கூடாது என்ற நினைவையும் தாண்டி கண்ணில் இருந்து கொட்டுகிறது நீர்…...

“போடா லூசு…” இப்பொழுது அழுத்தம் திருத்தமாய் அவனைப் பார்த்து சொல்லிவிட்டு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்…..இன்னும் கூட என்னால் மூச்சுவிட முடியவில்லை…. நான் வேலைய விடப் போறது இல்ல…எனக்கு வேலை வேணும் கொதிக்குது உள்ளே..

என்னால் அடுத்து அவன் முன்னிலையில் இயல்பாய் இருக்க முடியவில்லை. திரும்பவும் ட்ரெய்னிங்…. அவன் பேசுவதை கேட்டு அவன் சொல்வதை செய்து என எல்லாம் அச்சு பிசகாமல் நான் பின்பற்றினாலும் என் மனம் இறுகிப் போய் இருந்தது.  

 திடீரென என்னை சுட்டிக் காட்டி எழும்ப சொன்னவன் “எல்லோரும் இன்ட்ரடக்க்ஷன் கொடுத்தாங்கல்ல….அதை கவனிச்சல்ல…..இங்க இருக்க எல்லோரோட நேம்…..அவங்க தங்களைப் பத்தி என்ன சொன்னாங்க….இதையெல்லாம் சொல்லு..” என்றான்.

அதாவது 20 பேரைப் பத்தி…இதுதான் எங்களுக்கு முதல் நாள்….யாரையும் பெர்சனால தெரியாது…. ‘எனக்கு இவன் என்னை படுத்தி எடுக்கனும்னு முடிவு செய்துட்டான்னு மட்டும் தான் புரிஞ்சுது’

வந்த கோபம், கொஞ்சமான அழுகை எல்லாத்தையும் அடக்கிக் கொண்டு அவன் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல தொடங்கினேன்….கடகடவென எல்லோரைப் பத்தியும் சொல்லி முடித்துவிட்டேன்….

ஒரு ஸ்பெல்பாண்ட் சைலன்ஸ்….அடுத்து எல்லோரும் க்ளாப் பண்ணிட்டாங்க…. ஏன்னா நேம் மட்டுமில்ல…யார் யார் எங்க படிச்சாங்க…அவங்க வர்க் எக்‌ஸ்பீரியன்ஸ்னு எல்லாத்தையுமே பெர்ஃபெக்ட்டா சொல்லி இருக்கேன் போல…

அவனோ பதில் ஏதும் சொல்லாமல் செஷன் ஓவர்னு சொல்லிவிட்டு போய்விட்டான்.

டுத்து வந்த நாட்களும் இப்படித்தான் கழிந்தன. எல்லோரிடமும் அவன் கலகல. கூடவே எதோ ஒரு வகை அக்கறை வேறு…. இது எல்லாமுமாக சேர்ந்து மொத்த டீமும் அவனுக்கு ஃபேன் கிளப்பாகிட்டுது.

ஆனால் என்னிடம் மட்டும் எப்பவும் வித்யாசமாய்தான். என்னை சட்டை செய்யவே மாட்டான். நானும் அவன் முகம் கூட நேருக்கு நேராய் பார்க்க மாட்டேன்.

இதில் எல்லோருக்கும் வெறும் லாங்குவேஜ் ட்ரெய்னிங் என்றால் எனக்கு மட்டும் இன்னுமாய் வேலை….. கஸ்டமரோடு எம்ளாயி பேசிய வாய்ஸ் ரெக்கார்டை கவனிக்க சொல்வான்…..

எல்லோருக்கும் டிஸ்கஷன் டைம்….மூவி பார்க்ற டைம் என  சில இலகுவான நேரங்கள் உண்டு….அது எதுவும் எனக்கு கிடையாது…அப்பல்லாம் நான் இந்த கால்ஸை கவனிக்க போக வேண்டும்.

அவன் தன் கோபத்தை இப்படி காண்பிக்கிறான் என புரிந்தது எனக்கு.

ன்று எங்கள் டீம் சுரேஷுக்கு வீட்டிலிருந்து கால்….. அவனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்…..ஹாஸ்பிடலைஸ்டு   ….. எங்களுக்கு வேலை நேரத்துல மொபைல் ஆஃப்ல இருக்கனும்னு ரூல்….அதனால சுரேஷ் வீட்ல இருந்து ஆஃபீஸ் நம்பர் வழியா தகவல் சொல்லி இருந்தாங்க…..அதுல எங்க எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிட்டு…

சுரேஷ்க்கு டென்ஷன்ல என்ன செய்யன்னு கூட தெரியலை…. ஆனால் இவர்தான் முதல்ல தன் முழு சம்பளத்தையும் வித்ட்ரா செய்து கொடுத்தார்….

சுரேஷே “சார் உங்களுக்கு இந்த மாசத்துக்கு என்ன செய்வீங்க”ன்னு பதறிட்டான்…. “இல்ல கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு சமாளிச்சுப்பேன்” னு சொல்லிட்டு எங்க எல்லாரையும் நிமிர்ந்து பார்த்தார்,,,, அன்னைக்கு தான் சம்பள நாள்…எல்லோரும் என்ன முடியுமோ அதை கொடுத்தாங்க…. எனக்கு ஃபர்ஸ்ட் சம்பளம்…முதல் முதலா நான் அடுத்தவங்களுக்குன்னு அன்னைக்கு கொடுத்தேன்…….

சாயந்தரம் நாங்க ஹாஸ்பிட்டல் போனோம்…..இவர் சுரேஷ் கூட காலைலயே போய்ட்டார்….அங்க தான் இருந்தார்…. நாங்க போறப்ப சுரேஷ் அம்மா இவர்ட்ட ஏதோ பேசிட்டு இருந்தாங்க…..சுரேஷ் அப்பாக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்டி முடிஞ்சு…..அதுலயே சரியாகிட்டாம்…..ஸ்டேபிளா இருக்காங்கன்னு சொன்னாங்க…. என்னமோ எல்லாமே நிம்மதியா பட்டுது…

அன்னைக்கு எனக்கு அவர் சாப்ட பணம் கொடுத்தது கூட இப்டித்தான் இருக்குமோன்னு சின்னதே சின்னதா ஒரு தாட்…. ஆனாலும்….

  அடுத்தும் அவன் என்னிடம் பாரா முகம்தான்…. எனக்கு ரெட்டை வேலைதான்……நானும் முறைத்துக் கொண்டுதான் இருந்தேன்….ஆனால் உள்ளுக்குள் அவனோடு எனது அறிமுகம் நல்லபடியாய் இருந்திருக்க கூடாதா என ஏங்கத் தொடங்கி இருந்தேன்….. அப்டின்னா இப்டி ப்ரச்சனையே வந்திருக்காதே……

என்னை காலை  கவனிக்க சொல்லிவிட்டு சில நேரங்களில் அவன் எனக்கு அடுத்து ஒரு சேரில் அமர்ந்து தன் லாப்டாபை குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பான்….முன்பெல்லாம் மகா கோபமாய் வரும் எனக்கு இதில், ஆனால் இப்போதோ  ஏனோ பாதுகாப்பாக உணர தொடங்கினேன்….

எந்த வகையிலேயோ அந்த தருணங்களை ஆசிக்க தொடங்கினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.