(Reading time: 17 - 33 minutes)

தில் அன்று ஒரு சனிக் கிழமை.

“நெக்‌ஸ்ட் வீக் ப்ரெசென்டேஷன் வச்சுதான் உங்க ஜாப் கன்ஃபர்மேஷன்…..இல்லனா டெலிஷன்…..அதனால ப்ரெசென்டேஷன்ல என்ன ஹெல்ப் வேணும்னாலும்…என்ன டவ்ட் இருந்தாலும் டீம் மெம்பர்ஸை நாளைக்கு இங்க வந்து என்னை மீட் செய்ய சொல்லு….” நான் கால்ஸ் கேட்டுகிட்டு இருந்தப்ப பக்கத்தில் இருந்து எதோ வேலை செய்து கொண்டிருந்த அவன் சொல்லிவிட்டு கிளம்பிப் போனான்.

நாளைக்கா?? என்றனர் நான் போய் விஷயத்தை சொன்ன போது எங்க டீம் மக்கள்.

பின்னே சண்டேவாச்சே….எல்லோரும் எதேதோ சொல்லி யாரும் வர போறதில்லைனு முடிஞ்சுட்டு……எனக்கு இப்ப பக் பக்…..நான்  இந்த இன்ஃபர்மேஷன டீம்க்கு பாஸ் பண்ணவே இல்லைனு நாளைக்கு வந்து வெயிட் பண்ற அவன் நினைப்பான் தானே… அதுக்காகவாவது நான் வரணும் என முடிவு செய்து கொண்டேன்… கூடவே அவனை நாளையும் பார்க்க வாய்ப்பு என்றது மனது.

மறுநாள் காலை 10 மணிக்கு வந்து மதியம் 1 மணி வரை காத்திருந்தேன். மொத்த ஃப்ளோரிலும் நானும் செக்யூரிடியும் மட்டும்…. அவன் தான் வரவில்லை…. பொறுமை இழந்து அவன் நம்பர்க்கு நான் கால் செய்தும் பார்த்துட்டேன்…..நோ ரிப்ளை…

மெல்லத்தான் எனினும் அப்போதுதான் புரிந்தது , என்னை இழுத்தடிக்கத்தான் அவன் இன்னைக்கு வர சொன்னதே….. அவன் இப்பல்லாம் எனக்கு கொடுக்ற எக்‌ஸ்ட்ரா வேலையால கூட நான் வருத்தப்படலைனு தெரிஞ்சு அடுத்த டார்ச்சர்க்கு போறான் போல…..எனக்கு தாங்கவே முடியவில்லை….

போனவாரம் அவன் வீட்டில் போய் கூத்தடித்துவிட்டு வந்த என் டீம் பாய்ஸ் கதை அடிச்சது காதில் விழுந்ததை வச்சு அவன் வீட்டு அட்ரெஸை புரிந்து வைத்திருந்தேன்….. இருந்த எரிச்சலில் ஆட்டோ பிடித்து அந்த அப்பார்ட்மென்ட்  சென்று காலிங் பெல்லை கட கடவென 20 முறை அடித்தபின் மெல்ல கதவைத் திறந்தவன்… கண்கள் தக்காளியாய் சிவந்திருக்க….

என்னைப் பார்த்ததும் “நீயா…இங்க….என்ன…?” என கேட்டும் முடிக்கும் முன் எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது அவனுக்கு உடம்பு முடியவில்லை…..அவன் வீட்டில் அவன் தவிர வேறு யாரும் கிடையாது என ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தேன்…

“ ஹேய்….இங்க வராத….நீ முதல்ல கிளம்பு…..இது சரி கிடையாது…..நான் தனியா இருக்கப்ப..அதுவும் எனக்கு ரொம்ப முடியவும் இல்ல…. நீ கிளம்பு….” அவன் சொல்லிக் கொண்டிருக்க நான் அவனை தாண்டி உள்ளே சென்றிருந்தேன்…..

வீட்டை பார்வையால் ஒரு சுற்று சுற்றினேன்….. நான் நினைத்து வைத்தபடிதான் இருந்தது…..

ஹாலில் பெரிதாய் ஒரு பெயின்டிங்….’ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான், அவர் அதை திருப்பிக் கொடுப்பார்’ என்று கொட்டை எழுத்தில் வாசகம் அதில்….

ஏதோ புரிவது போல் இருந்தது எனக்கு…. அவன் குணமே இதுதானோ? ஆனாலும்…..

கிட்செனை நோக்கி நான் போக…. தொண தொண என அவன் என் பின்னால்… “ப்ளீஸ் போய்டு… இங்க எதுக்கு வந்த…..இது சரி இல்ல….” என.

அவனை ஒரு பார்வை பார்த்த நான் அவன் கையைப் பற்றி கொண்டு போய் படுக்கையில் உட்கார வைத்தேன்…. அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை….. என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்….

நான் போய் அவனுக்கு சாப்பாடு செய்து, சாப்பிட கொடுத்து…..போட்டுக்கொள்ள மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்…..

கிளம்பும் நேரம் நேரடியாக கேட்டுவிட்டான்…..ஏனோ எனக்கு இதை கேட்பான் என்றும் தெரிந்திருக்கிறது…அதற்கு பதிலுமே தெரிந்திருக்கிறது….

“ என் மேல இவ்ளவு அக்கறை இருக்குல….என்னை இவ்ளவு பிடிச்சிறுக்குல…..அப்றம் ஏன் விலகி விலகி போற….என் மனசு புரியலையா இல்ல உன் மனசு புரியலையா ” என்றான்……

“இது அன்னைக்கு பசின்னு எனக்கு சாப்ட பணம் தந்தீங்கள்ல….அதே மாதிரி இரக்கம்… ” சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

‘இன்ஸ்டென்ட் காஃபி மாதிரி இவனுக்கு என்ன இன்ஸ்டென்ட் காதாலா’ என்றது மனது…ஆனாலும் ஏனோ அவன் மீது கோபம் வரவில்லை …

மறு நாள் கால் செய்து அவன் உடல் நிலை விசாரித்தேன்…. “ஆஃபீஸ் வந்துட்டு இருக்கேன்மா” என்றான்.

சரி இனி என் அக்கறை அவனுக்கு தேவை இல்லை எனப் பட்டது எனக்கு. ஆக அடுத்து நேரில் பார்த்து சின்ன புன்னகையுடன் அவன் விஷ் செய்யும் போது நான் பதில் ஏதும் சொல்லவில்லை….

அன்று முழுவதும் என்னை அவன் அவ்வப்போது பார்த்தாலும் அடுத்து எதுவுமே இருவரும் பேசிக் கொள்ளவில்லை…. மறுநாள் எங்கள் டீம் மொத்தமும் ஏதோ ஒரு மஞ்சரிக்கு மாற்றப் பட்டிருந்தது….

ஆக இனி நான் அவனை தினமும் பார்க்க கூட முடியாது…அவன் எந்த ஃப்ளோரில் இருப்பானோ….?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.