(Reading time: 17 - 33 minutes)

ரொம்பவுமே பிசைந்தது என்றாலும்…. ஒரு வகையில் தாங்கிக் கொண்டேன்…. இதுவும் கடந்து போகும் என தேற்றிக் கொண்டேன்…. இதில் விஷயம் என்ன வென்றால் இந்த மஞ்சரியும் என்னை காலை கேட்க சொன்னார்….

இப்போதுதான் இதற்கு காரணம் வேறாக இருக்கும்…என்னை பழி வாங்கும் எண்ணம் இல்லை என புரிய தொடங்கியது….

விசாரித்தேன்…. எனக்கு லிசனிங் ஸ்கில் ப்ரமாதமாய் இருக்கிறதாம்…..இன்டர்வியூலயே டிசைட் செய்தாங்களாம்..ட்ரெய்னிங்ல நல்லா ஃபெர்ஃபார்ம் செய்தா  க்வாலிட்டி செக் எக்சிக்யூடிவ் போஸ்ட் எனக்கு நேரடியாக தரலாம்னு….பொதுவா அதுக்கு இரண்டு வருட அனுபவம் வேண்டும்…. அதோட இது டே ஷிஃப்ட் வேறு….

அவன் என்னை முன்பு எல்லோரை பத்தியும் சொல்ல சொன்னது ஞாபகம் வருகிறது…ஓ இததான் ஸ்டடி செய்தான் போல… அப்படினா பழி வாங்கனும்னு அவன் எதையும் செய்யவில்லையோ?.... எது எப்படியோ…..என் மனசோட இப்போதைய உணர்ச்சிக்குப் பின்னால நான் போறதா இல்ல….. அவன் வேண்டாம் எனக்கு…

அடுத்து இரண்டு தினங்கள் சென்றிருக்கும்…..மதியம் ஒரு 2 மணி இருக்கும்…. எங்கள் ட்ரெய்னிங் அறை கதவை திறந்து எட்டிப் பார்த்தவன்…. என் புறம் திரும்பாமல் அந்த மஞ்சரியைப் பார்த்து “கிளம்புறேன் மஞ்சுரி…. பை” என்றான்…

இப்போது அந்த மஞ்சரி சிரித்துக் கொண்டே எதோ சொல்லி வாழ்த்த எனக்கு வயிறு வாய் என மாறி மாறி துடிக்கிறது இதயம்…… அவனுக்கு அம்மா அப்பா ரெண்டு பேருமே அப்ராட்ல இருக்காங்கன்னு சொல்லிகிட்டாங்க…ஒருத்தர் யூஎஸ்ல…ஒருத்தர் மலேசியால….. இவன் அங்க எங்கயாவது போய் செட்லாக போறானோ….????

அங்கல்லாம்விட்டுட்டு இவன் முதல்ல எதுக்கு இங்க வந்தான்? எப்டி இங்க இருப்பான்? கண்டிப்பா திரும்பி வரமாட்டான்தான்…..எனக்கு உயிர் உடைந்து கொண்டு போகிறது….

இப்போது என் முகம் பார்த்தானோ……”கிறிஸ்மஸ் வெகேஷன் முடிஞ்சு வந்துடுவேன்….” பொதுவாக சொல்லிவிட்டுப் போனான்….. எனக்குள்  நிம்மதி எப்படி இருந்தது என சொல்ல தேவை இல்லை….

அவன் கிளம்பிப் போனதும் யாரோ மஞ்சரியிடம் ஏதோ கேட்க…”அவர் மலேசியாக்கு அவரோட அப்பாவ பார்க்கப் போறாராம்…” என பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.

அடுத்து நிறமற்ற சில தினங்களின் பின் எங்களுக்கும் கிறிஸ்துமஸ் ஹாலிடேஸ்…. அன்னைக்கு டிசம்பர் 26….காலைல நியூஸ்…..சுனாமி…..சென்னை மலேசியா எல்லா இடத்திலும் டெத் டோல்….

எனக்கு மூளையில் முதல் அலாரம் அவன்தான்…..பீச்னா அவனுக்கு ரொம்ப இஷ்டமாச்சே……. அவசர அவசரமா என்ட்ட இருந்த அவன் நம்பரை கூப்பிட்டேன்…..அது எங்க வேலை செய்ய….ஸ்விட்ச்ட் ஆஃப்…..

அடுத்து என்னவெல்லாமோ முயன்று…அவன் இ மெயில் ஐடி வாங்கி அதற்கு மெயில் செய்தேன்…. “உங்க ரிப்ளை வர்ற வரைக்கும் எனக்கு ஒழுங்கா மூச்சு கூட விட முடியாதுன்னு சொல்லி இருந்தேன்…..”ஏன்னா அது தான் உண்மை… எனக்கு நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது…அவன பத்தி எந்த தகவலும் இல்ல…..கண்டிப்பா என் மெயிலைப் பார்த்தா பதில் அனுப்பாம இருக்க அவனால முடியாது…..கிளம்புறதை சொன்னதுக்கு என் முகம் போன போக்கிற்கே திரும்பி வருவேன்னு சொல்லிட்டு போனானே….

நாள்கள் கரைந்து கழிய….இரண்டு நாள்….நான்கு நாள்…..ஏழு நாள்…..அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை…..அவன் இல்லாத உலகத்தில் நான் இருக்கிறேன் என நான் நம்பித்தான் ஆக வேண்டுமோ??????

ஐயோ தெய்வமே….ஏன் விலகிப் போறன்னு கேட்டானே…..இல்ல விலகி போகலைனு நான் சொல்லி இருந்தா…..இன்னைக்கு அவன் என் கூட இங்க இருந்திருப்பானே..... நான்தான் அவனைக் கொன்றுவிட்டதாக எனக்கு பூதகரமாக புரியத் தொடங்கியது…..இனி எனக்கு இந்த பூமியில் வாழ முடியும் எனக் கூட தோன்றவில்லை…...

 ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக அவன் இருந்துவிட மாட்டானா…? தெய்வமே திருப்பித் தந்துவிடேன் அவனை…. விழுந்து கிடந்தேன் உண்ணாமல் உறங்காமல்…

இன்று ஆஃபீஸ் போக வேண்டும்….அவன் இல்லாத ஆஃபீஸை எப்படிப் பார்ப்பேன்….. ?ஆனா அவன் ஆஃபீஸைப் பார்க்காமல் மட்டும் எப்படி வாழ்ந்துவிடுவேன்….? கிளம்பி ஆஃபீஸ் போனேன்….

நான் உள்ளே நுழையும் போது படிகளில் நின்றிருந்த  சுஜி….” ஒரு நிமிஷம்பா….3ர்ட் ஃப்ளோர் போய் நியூ இயர் விஷ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றாள்.… எனக்கு புரிந்துவிட்டது…  3ர்ட் ஃப்ளோர்ல இவ யாருக்கு விஷ் பண்ண போவான்னு தெரியுமே….. அவசர அவசரமா விழுந்தடித்து அவன் கேபினுக்கு ஓடினேன்….அவன் கேபினுக்கு அருகில் வெளியே நின்றிருந்தான்….

அவனுக்கு நியூ இயர் விஷ் சொல்ல ஒரு கூட்டம் சுத்தி நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்தது….

அது யார் எவர் என எதையும் நான் யோசிக்கும் நிலையில்  இல்லை…..என்னைப் பார்க்கவும் அவனுக்கும் புரிந்துவிட்டதோ…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.