(Reading time: 15 - 30 minutes)

க்கத்தில் வைத்துவிட்டுச் சென்றிருந்த முதல் நாள் பாயம்மா கொடுத்திருந்த கருவாட்டுக் குழம்பையும் தொட்டுக்கொள்ள வைத்திருந்த பக்கோடாவையும் காணாமல். ஐயொ..ஐயொ..ஐயொ..ஐயொ.என்று லபோ..திபோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கத்த ஆரபித்தாள்.மருமகளின் வேலைதான் இது என்று புரிந்துபோனது அவளுக்கு.

அவிழ்ந்து கிடந்த தலை முடியை அள்ளிச் செருக்கிக் கொண்டவள் வாசலுக்கு ஓடிவந்தாள்.நாலு வீடு தாண்டித்தான் மகன் வீடு.நடுத் தெருவில் வந்து நின்றுகொண்டவள்..ஏய்..வாடி வெளிய..நாற சிறுக்கி... நாத்த முண்ட..சாண்ட...க்கி..காணா...தூணா..மூணா...பூணா...சூணா...கூணா...அடியே ஒம்......த அறுக்காம வுடமாட்டேண்டி...பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பிக்க வீட்டுத்திண்ணைகளில் அமர்ந்தும் படுத்தும் நின்று கொண்டும் சீட்டு விளையாடிக்கொண்டும் வெற்றிலைபாக்ககை மென்று கொண்டுமிருந்த ஆண்களெல்லாம் தலையில் துண்டைப்பொட்டுக்கொண்டு கடைத்தெருவை நோக்கி ஓடினார்கள்.பெண்களெல்லாம் கதவை சாத்திக்கொண்டு உள்ளே ஓட அடுத்த அரை மணி நேரம் அங்கே சண்டமாருதம் வீசியது.காசாம்புவின் வாயிலிருந்து வெளிவந்த விதவிதமான பச்சைபச்சையான திட்டுக்களை ஒன்று விடாமல் இங்கே எனக்கு எழுத ஆசைதான்.படித்துவிட்டு உங்களிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுமே என்றுதான் பயமாகவும் தயக்கமாகவும் உள்ளது. சில்சீ வேறு பாவம் .....

காசாம்பு கத்தி முடிக்கும் வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் கட்டயத்திற்குப் பின்னால் பயந்தபடி படுத்திருந்த நாய் ஒன்று சரேல் என்று எழுந்து கண்மண் தெரியாமல் இலக்கின்றி ஓடியது.

கத்தி ஓய்ந்ததும் சேலைத் தலைப்பை உதறித் தோளில் போட்டுக்கொண்டு விடுவிடு என்று பாயம்மா வீட்டுக்குப் போனவள் மருமகள் தன் சோற்றில் மண் அள்ளிப் போட்டு விட்டதாக கூறி அழுது மூக்கைச் சிந்தியதும்..அழுவாத காசாம்பு..வுடு..இந்தா இதத் துண்ணு என்றபடி இரண்டு நாள் முன்னதாகச் செய்திருந்த பிரியாணியையும் மசால் வடையையும் கொடுக்க இருந்த பசியில் அவற்றை அங்கேயே தின்றுவிட்டு வீட்டுக்கு வந்தாள் காசாம்பு.

ரவு மணி பத்திருக்கும்.அசதியில் நன்றாகத்தூங்கிவிட்ட காசாம்புக்கு திடீரென வயிறு கலக்க முழிப்பு வந்தது.வயிறு கடமுடா என்றது.டுர்..புர் குர்..குர் என்று சத்தத்தோடு வயிற்றுக்குள் திரவம் இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு என ஓடுவதுபோல் இருந்தது.ஒரு கட்டத்தில் வயிற்றின் இம்சை தாங்க முடியவில்லை காசாம்புவால்.கொஞ்சம் தாமத்திதாலும் சேலையும் படுத்திருக்கும் பாயும் கண்டமாகி விடுமோ என்ற பயத்தில் எழுந்து வாசல் கதவைத் திறந்து கொண்டு படலையும் திறந்து வெளியே ஓடினாள்.

அமாவாசைக்கு முதல் நாள் என்பதால் இரவு வெளிச்சமின்றி ஒரே இருட்டு.அந்த இருட்டு யாராக இருந்தாலும்  பயத்தை ஏற்படுத்தும்.ஆனால் "அது"வந்தால் பயம் போய்விடும் என்பது உண்மைதான் என்பதைப்போல இருட்டைப்பற்றி எவ்வித எண்ணமும் தோன்றாமல் குப்பை மேட்டை நோக்கி ஓடினாள் காசாம்பு.வயிற்றில் பிரச்ச்னை தந்து கொண்டிருந்த விஷயங்களெல்லாம் வெளியே வந்ததும் அப்பாடா என்றிருந்தது காசாம்புக்கு.உடல் சாதாரணமானதும்தான் மை இருட்டு அவள் பார்வைக்கு உரைத்தது.’

ஐயோ இதென்ன இம்புட்டு இருட்டால்ல இருக்கு..பாம்பு கீம்பு கெடந்தாக்கூட தெரியாதே என்று நினைத்து பயந்தவளின் பார்வையில் பட்டது அந்த ஒளி.கண்களைக் கூசச் செய்யும் ஒளி.சிகப்பும் நீலமும் வெள்ளையும் கலந்த ஓர் நிறம்.திடீரெனத் தோன்றிய அந்த ஒளியைக் கண்டதும் திகைத்துப்போனாள் காசாம்பு.அந்த காரிருட்டில் அந்த ஒளி பிரமிப்பை ஏற்படுத்தியது.சுற்றி வட்ட வடிவமாய் ஐந்தாறு அடிவரை தெரிந்த ஒளியின் வெளிச்சம் அதன் அருகாமையில் இருந்தவற்றைத் தெளிவாக காட்டியது.காசாம்புக்கு அப்படி வெளிச்சம் காட்டு அந்த பொருள் எதுவென்பது புரிந்து போயிற்று.அப்படிப் புரிந்தபோது மிகுந்த பரபரப்பானாள் அவள்.அடி ஆத்தாடி..அது நாகரத்தினமாச்சுதே..?வாழும் பாம்புல்ல அத்த கக்கும்.வாழும் பாம்புக்கு அவ்வளவா கண்ணு தெரியாதில்ல..பகல் முழுக்க ஒளிஞ்சி கெடக்கும்.ராவுக்குதான் எர தேடி வெளியெ வரும்.கண்ணு தெரியாத பாம்பு தலையில வெச்சிருக்குற நாகமணிய கக்கும்.அப்ப அந்த வெளிச்ச்த்துல எரய புடிச்சி முழுங்கும்.பசி ஆறியதும் மறுபடி நாகரத்தினத்த முழுங்கும்னுட்டு நம்ம அப்பத்தா கத கதயா சொல்லுமே.அதுதாங்காட்டி இது..அப்ப பாம்பு இங்கிட்டுதான் எங்கியொ எர தேடிக்கிட்டு சுத்தும்...நாம சாக்கிரதையா கால வெக்கணும்.இல்லாங்காட்டி அது நாக கல்ல எடுக்க வரோம்ன்னு நெனச்சு ஒரே போடா போட்டுடும்.வாழும் பாம்பு ரொம்ப கோவக்கார பாம்பாச்சே?..ஆரடிநீளமான நாக பாம்புல்ல பல வருஷமா வாழ்ந்து ஒன்ர அடிக்கு வருமாம்.அதோட வெஷம் கெட்டிப்பட்டுக் கெட்டிப்பட்டு நாகக்கல்லா..

நாகரத்தினமா மாறும்ன்னுல்ல அப்பத்தா சொல்லும். அதோட வெல பல லச்சம் இருக்குமாமில்ல..?அப்பத்தா சொல்லுமே?சட்டென அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.அத கல்ல நாம எடுத்துகிட்டா நகக்கடையில கொண்டு குடுத்தா எம்மாம் பணம் குடுப்பாங்க?அந்த நாகமணிய எப்பிடி எடுக்கனுமின்னு கூட அப்பத்தா சொல்லிருக்கில்ல..அப்பிடியே செஞ்சா என்ன..?ஒரு முடிவுக்கு வந்தாள் காசாம்பு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.