(Reading time: 15 - 30 minutes)

மெல்ல மெல்ல மிக ஜாக்கிரதையாகக் கால்வைத்து நடந்தாள் வீட்டுக்கு.காலடி சப்தம் கூட பாம்பரியும்.பாம்புக்குக் காதுகள் கிடையாது.தரையில் ஏற்படும் அதிவுகள் அதன் உடலில் பட்டு அது அருகில் ஏற்படும் சலனங்களை அது புரிந்து கொள்ளும்.அப்பத்தா சொல்லுமில்ல..மெள்ள நடந்து வீட்டுக்கு வந்தவள் வரட்டி தட்டுவதற்காக கூடையொன்றில் சேர்த்து வைத்திருந்த சாணத்தைக் கூடையோடு எடுத்துக்கொண்டு நாகக் கல் இருக்கும் இடம் நோக்கி வந்தாள்.மனதில் பயம் கொப்பளித்தது.பாம்பு பட்டென்று போட்டுவிட்டால்? னல்லவேளை அப்படி நடக்கவில்லை.கையிலிருந்த கூடை சாணத்தையும் அப்படியே கூடையொடு அந்த நாக ரத்தினத்தின் மீது கவிழ்த்தாள்.அடுத்த நொடி ஓட்டமெடுத்தாள் பஸ் செல்லும் சாலையை நோக்கி.ஓடினாள் ஓடினாள் காசாம்பு ஊர் எல்லையை விட்டு வெகு தூரம்.கிட்டத்தட்ட அவள் இருபது மைல் தூரம் நடந்து இன்னொரு ஊருக்குள் நுழைந்தபோது மறுனாள் காலை பத்துமணியாகியிருக்கும்.இனி இன்னும் குறைந்த பட்சம் ஒரு வாரம் ஊருக்குச் செல்லக்கூடாது.தனது நாக ரத்தினத்தை தேடித்தேடி பாம்பு அலையும்.காணாது தவிக்கும்.கல்லை இழந்த கோபத்தில் பழிவாங்கத் துடிக்கும்.ஒரு வாரமும் உணவு எடுக்காது.கல்லைத் துப்பிய இடத்தைச் சுற்றிச் சுற்றி வரும்.அக்கல்லின் அருகே வந்தவர்களின் காலடி வாசம் வைத்து அவர்களைத் தேடும்.எப்படியோ கல்லை எடுத்தவர் யார் என்பதைக் கண்டு பிடித்து ஆக்ரோஷத்தோடு ஒரே போடு போடும்.அடுத்த நொடி தானும் உயிரை விடும்.

எல்லாம் அப்பத்தா சொன்னதுதான்.

ரு வாரம் ஆயிற்று.ஊர் திரும்பினாள் காசாம்பு.தெருவுக்குள் நுழைந்தவளுக்கு பெரும் அதிர்ச்சி.காரணம் குப்பை மேட்டையே காணவில்லை.அந்த பெரிய பரப்பளவு உள்ள இடம் முழுதும் சுத்தம் செய்யப்பட்டு கொத்தப்பட்டு ஒரு பெரிய கட்டிடம் கட்டப்படும் அளவுக்கு புதை குழி வெட்டப்பட்டிருந்தது.காசாம்பு நாகமணியின் மீது கொட்டி வைத்த சாணமோ கூடையோ..ஏன் அந்த இடமே கூட எதுவென்று தெரியவில்லை.தாங்க முடியாத சோகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள் காசாம்பு.உள்ளே நுழையு போதே காசாம்பு தெரியுமா ஒனக்கு எதுத்தாப்புல சமத்துவபுரம் வீடுங்க வருதாம்.கவுருமென்ட்டு கட்டுது.வேல ஜரூரா ஆவுது என்று யாரோ ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றார்.

வருத்தமும் அலுப்புமாய் சேலைத் தலைப்பையே உதறி தரையில் விரித்துப் படுத்துக்கொண்டாள் காசாம்பு.

சிறிது நேரம் புரண்டு கொண்டிருந்தவள் உறங்கிப்போனாள்.மனம் முழுதும் வருத்தம்.

தலைமாட்டில் சுருட்டிவைத்திருந்த காசாம்புவின் பாய் மெல்ல அசைந்தது.கொஞ்சமாய் அதனுள்ளிருந்து அந்தப் பாம்பு எட்டிப்பார்த்தது.ஒருவாரமாய் சாப்பிடவில்லை.தெம்பின்றி இருந்த அந்த பாம்பு ஊர்ந்து ஊர்ந்து மெல்ல மெல்ல காசாம்புவின் கழுத்தருகே வந்தது. உடலின் மிச்சத் தெம்பையெல்லாம் திரட்டித் தலையைத் தூக்கியது.ஆழ்ந்த உறக்கத்திலிருந்த காசாம்புவின் கழுத்தில் ஆவேசத்தோடு விழப்பல்லை இறக்கியது.

அடுத்த நொடி அப்படியே சுருண்டு உயிரைவிடது.

பாம்பைப் பற்றியும்..நாக ரத்தினம் பற்றியும் நான் எழுதியிருப்பவை எல்லாம் சிறு வயதில் எனது பிறந்த ஊரான சின்னஞ்சிறு கிராமத்தில் எங்களைப் போன்ற சிறு பிள்ளைகளுக்குக் கதைபோல் சொல்லப்பட்டவை..உண்மையா என்பதெல்லாம் தெரியாது..மன்னிக்கவும்.அந்தக் காலத்தில் நடந்ததாக சொல்லப்பட்ட பேய்க் கதைகளையும் பகிர்ந்து கொள்வேன்… நன்றி

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.