(Reading time: 30 - 60 minutes)

காரில் இருந்து இறங்கியவர்களை வரவேற்றது அந்த பெயர் பலகை பிருந்தாவனம்

ஏனோ அந்த இடத்தை பார்த்தவுடன் அவளுக்குள் ஒரு நிம்மதி ஏதோ தாய் மடி வந்த குழந்தைப்போல்.... அதன் சுற்று சூழலும் அவளை ஈர்க்கத்தான் செய்தது pollution நிறைந்த கட்டிடங்களை பார்த்தவளுக்கு இப்படி ஒரு கிராமத்தில் பசுமையான வயல்வெளிகளுக்கு இடையில் இந்த அழகிய இல்லத்தை பார்க்கும் பொழுது நிஜமாகவே இது பிருந்தாவனம் என்றுதான் தோன்றியது

இங்க நீங்க அடிக்கடி வருவீங்களா – சுஹா

“ அடிக்கடினு சொல்ல முடியாது அப்பலாம் எப்பயும் லீவு டைம்ல வந்துருவேன் இது அப்பா ஊர் அப்பா ரொம்ப ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுமா இந்த இல்லம் முன்ன அப்பா பாத்துக்கிட்டாங்க அவங்களுக்கு பிறகு நானும் என் ஃப்ரெண்ட் ஆதவ்வும் சேர்ந்து பாத்துக்கிறோம் மேரேஜ்க்கு முன்ன அடிக்கடி வந்து தங்குவேன் பட் இப்பல்லாம் உன்ன தனியா விட்டுட்டு வர மனசு வரமாட்டேன்து பட் வீக்லி ஒன்ஸ் விசிட் பண்ணுவேன் “

“ இங்க இருக்கவங்கலாம்.......எப்படி...இங்க “ திக்கி திணறிய வார்தைகளை புரிந்தவன் ஒரு புன்னகை உதிர்த்து பேச்சை தொடர்ந்தான் “ இது முதியோர் இல்லம் மட்டும் இல்ல ஆதரவுஅற்ற எல்லோருக்கும் புது சொந்தங்களை குடுக்கும் இடம் சிலர  பிள்ளைங்களே வந்து சேர்த்து விடுவாங்க நாங்க பார்த்த சிலர நாங்களே கூப்பிட்டு வருவோம் இவங்களுக்கு இந்த இடம் எல்லோரும் வாழ்ற ஒரு கூட்டு குடும்பமா இருக்கணும்னு தான் இந்த இடத்த முதியோர் இல்லம்னு பேர் வைக்கல உன்ன இங்க கூட்டிட்டு வரணும்னு எப்பயும் நினசுட்டே இருப்பேன் இன்னைக்கு மேடம்க்கு பர்த்டே கிஃப்ட் குடுக்க கூட்டிட்டு வந்தாச்சு “

இதை பத்தி அவளுக்கு ஓரளவு தெரியும் என்றாலும் இன்று இவன் கூறியதுயெல்லாம் இவள் மனதுக்கு ஏதோ ஆறுதல் அளித்ததை நன்றாக உணர்ந்தாள்

சரி நீ உள்ள போய் ஆஃபிஸ் ரூம்ல வைட் பண்ணு நான் கார்ர பார்க் பண்ணிட்டு வரேன்- சித்து

ம்‌ம்‌ம்  ஓகே – சுஹா

அவனிடம் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றவள் ஆஃபிஸ் ரூமை தேடும் பொழுது தானாக அவள் பார்வையில் பதிந்தார் ஒரு முதியவர் இல்லை அவரின் செயல் தான் அவள் கவனத்தை இழுத்ததோ??? ஒரு அறையின் முன் தொங்கிக்கொண்டு இருந்த அந்த சார்ட் போர்டில் அவர் ஏதோ தீவிரமாக சரிசெய்து கொண்டு இருந்தார் ஏதோ தத்துவம் எழுதுவார் போல் என்று சுவாரசியமாய் அருகில் சென்று பார்தவளுக்கு அது கொஞ்சம் அதிர்ச்சி தான் அதில் அவர் எழுதிக்கொண்டு இருந்த வார்த்தைகள்

“ பால் குடித்த மிருகங்கள் இங்கு அவ்வப்பொழுது

வந்து செல்வதுண்டு மனிதர்களே ஜாக்கிரதை ”

அது தத்துவம் தான் அவரை பொருத்தமட்டில் அது அவர் உணர்ந்த பாடம்.....

அதை பார்த்து கோவம் கொண்டவள் “ ஐயா ஏன் இப்படி எழுதுரிங்க பொது இடத்துல எதுக்கு இப்படி தேவைல்லாம பண்றீங்க... அப்ப பால் குடுச்சு வளந்த எல்லாரையும் மிருகம்னு சொல்றீங்களா எல்லாரும் ஒரே மாதிரி இல்ல ஃபர்ஸ்ட் அதை அழிங்க “ என்று கொஞ்சம் குரல் உயர்த்தி பேசத்தொடங்கியவளை இடைமறித்தார் அந்த முதியவர்

 “ ஏய் யார் நீ? எதுக்கு என்ன வந்து அதிகாரம் பண்ற நான் அப்படித்தான் எழுதுவேன் இது எல்லாம் உனக்கு புரியாது பேசாம போய்டு வைத்து பிள்ளக்காரியா இருக்க இல்ல அடுச்சுப்பூடுவேன் என்று தன் கையில் இருந்த தடியை உயர்த்தினார்

“ தாத்தா யார இவ்ளோ சத்தமா மிரட்டிட்டு இருக்கீங்க? நீங்க சத்தம் போடக்கூடாதுணு தெரியாத “ என்ற  கேள்வியுடன் வந்தான் ஆதவ்

“ நான் எங்க தம்பி கத்துனேன் சும்மா இருந்தவன இந்த பொண்ணு தான் வம்புக்கு இழுதுச்சு “என்று சுஹானாவை கைகாட்டினார்

கருப்பு கண்ணாடியில் வந்தவனை யார் என்று யோசித்தவள் அந்த முதியவர் பதிலுக்கு பதில் சொல்ல வாய் திறந்தாள் “ வம்புலாம் பண்ணலா ஸார் இந்த தாத்தா எழுதுன செண்டென்ஸ் எனக்கு பிடிக்கல அதான் ஏன்னு கேட்டேன் “

நீங்க? – ஆதவ்

ஐயம் சுஹானா சித்தார்த்ஸ் வொய்ஃப்

‌” ஓ வாங்க வாங்க சாரி சிஸ்டெர் உங்க மேரேஜ்க்கு வரமுடில நீங்க மட்டும் தான் வந்து இருக்கீங்களா சித்தார்த் எங்க “

“ நானும் தான் மச்சி வந்து இருக்கேன் “ என்று அவன் தோள்ளனைத்துக் கொண்டான் சித்தார்த்

“ வாயா வாயா எப்படி இருக்கீங்க என் பேத்தி எப்படி இருக்கா “ என்று உரிமையாக கேள்விகளை தொடுத்தார் அந்த முதியவர்

இவ்வளவு நேரம் தன்னிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்றவர் இப்பொழுது இவனிடம் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து அவரை முறைக்க தொடங்கினாள்

“ அவ உங்க கண்ணு முன்னாடி தானே நிக்கிறா எப்படி இருக்கானு நீங்களே பாத்துக்கொங்க “என்றான் அவள் கணவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.