(Reading time: 30 - 60 minutes)

த அப்பறம் பாத்துக்கலாம் டியர் இப்ப இந்த விஷயத்த வீட்டுல சொன்னியா எப்படி ரியக்ட் பண்ணாங்க

ம்‌ம்‌ம்... சொல்லிட்டேன் எல்லாரும் உடனே  போய் பாக்குறேனு சொன்னாங்க ஆனா அம்மாச்சிய கம்பெல் பண்ணாதீங்கணு சொல்லிருக்கேன் பாப்போம் என்ன பண்றாங்கணு எல்லாருக்கும் உங்க மேல கொஞ்சம் வர்த்தம் ஆனா அம்மாச்சி இத்தன நாள் உங்க பரமரிப்புல தான் இருந்தாங்கணு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷ பட்டாங்க

பார்ரா என் பொண்டாட்டிக்கு மூல வளந்திடுச்சு நான் கூட நீ அவங்கள அங்க இருந்து கூட்டிட்டு போக என்ன என்ன பண்ண போறியோனு பயந்தேன்

ரொம்ப பண்ணாதீங்க உங்கள விட எனக்கு ப்ரெய்ன் ஜாஸ்தி அந்த இடத்தில கொஞ்சம் நேரம்  இருந்த  எனக்கே அங்க இருந்து வர பிடிக்கல அப்பறம் திடீர்னு கிளம்ப சொன்னா  அம்மாச்சிக்கு மட்டும்  எப்படி இருக்கும் பாவம் வாழ்க்கைல ரொம்ப பட்டவங்க அவங்க சந்தோஷம் தான் முக்கியம் அவங்க அங்கயே இருக்கட்டும் நாம பாத்துக்கலாம் நாம அங்கயே முடிவு பண்ணோம்ல இது மாதிரி இன்னும் நிறய பேர்க்கு ஆதரவு தரணும்னு சோ நெக்ஸ்ட் அத செயல் படுத்துற வழிய யோசிப்போம்

யோசி யோசி –சித்தார்த்

அதுக்கு முன்னாடி என்கிட்ட உண்மையா மறச்ச உங்களுக்கு பணிஷ்மெண்ட் குடுக்கணும் என்று சொல்லிக்கொண்டு அவன் தலையில் சின்னதாய் ஒரு கொட்டு வைத்தாள்

ஆஆஆ... இப்படியெல்லாம் கொட்டுன அப்பறம் நான் பிருந்தாவனம் ஏரியா சைட் கேட்டு இருந்த ட்ரான்ஸ்பர்ர கேன்ஸல் பண்ணிருவேன்

ஹேய் நிஜமா தான் சொல்றீங்களா

யா யா

நிஜம்ம்ம்‌ம்மா –சுஹா 

நிஜம்ம்ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்ம்ம்ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்- சித்தார்த்

ஐயோ சோ ஸ்வீட் என்று மீண்டும் பாதங்களை உயர்த்தி அவன் உயரதுக்கு உயர்ந்தாள்

ஹேய் போதும்டி வலிக்குது

ஹி ஹி.. அதுலாம் இல்ல என்று அவன் கன்னத்தில் இதழ் பதித்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்

அவள் மனம் அறிந்தவனும் அவளிடம் சரணடைந்தான்

‌மௌனத்தில் உரையாடியவளின் சிந்தையை கலைத்தது அந்த கைப்பேசி அழைப்பு அதை பார்த்தவள் முகத்தில் சந்தோசத்தின் சாயல் அதில் மின்னிய பெயர் பிருந்தாவனம்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.