(Reading time: 30 - 60 minutes)

சும்மா இருந்த மனுஷன தத்து எடுக்குறேனு அவருக்கும் ஒண்ணும் சேர்த்து வைக்காம அவர் வாழ்க்கையே பாழாகிடிங்க இதுவே அவங்க அம்மா அப்பாட்ட இருந்து இருந்தா எங்களுக்கு இந்த நிலம வந்து இருக்குமா சனியனா இருந்து எங்க உயிர எடுக்குற தண்ட சோறு செத்து தொலஞ்ஜாலும் எங்களுக்கு நல்லது நடக்கும் “  இப்படி பல பழி சொல்லுக்கு ஆள் ஆவார் கற்பகம்அவரை கண்டித்த தேவனும் வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவன் இவளையும் எதிர்த்து பேசி பிள்ளைகளை பட்டினி போடுவதை விட வாய்யை மூடி இருப்பதே சிறந்தது என்று தேவனும் இருந்து விட்டார்  

மகனுக்கு திருமணம் ஆனதில் இருந்து வீட்டில் மாடு மாதிரி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு மருமகளை உள்ளங்கையில் வைத்து தாங்கும் கற்பகம்  இதற்க்கும் ஊமையாய் இருந்து விட்டார்

பாவம் மருமகள் அவள் சூழ்நிலை தான் அவளை இப்படி பேச வைக்கிறது என்று பொறுத்துக்கொண்டார் மருமகளை பத்தி யாரிடமும் குறை கூற மாட்டார் பத்தா குறைக்கு கணவனிடம் இருந்து கிடைக்கும் ஜீவனாம்சம்மான இரண்டாயிரம் ரூபாய் குடுக்க வந்த கணவரும் “ தண்டதுக்கு இருந்துட்டு உயிர வாங்குற எப்படீ சாவ எனக்கும் ஒரு செலவு மிச்சமாகும்ல “ என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்  

பொறுமையும் எல்லையை கடக்க தேவன் ஒரு நாள் தற்கொலை முயற்ச்சி செய்ய எல்லாம் தலைகீழாக மாறியது தன்னால் யாருக்கும் எந்த கஷ்டமும் வேண்டாம் என்று முடிவெடுத்தார் அதன்படி அவரின் பூர்வீக சொத்துகளையும் தேவன் பெயரில் எழுதி வைத்து விட்டு யாருக்கும் சொல்லாமல் எங்கோ போய்விட்டார் கற்பகம்

அந்த செய்தி அறிந்து முதலில் வந்தது சுஹா வீட்டில் இருந்து தான் அன்னை இல்லாமல் வளர்ந்த அவர் தந்தைக்கு அன்னையாய்  இருந்தவர் கற்பகம் அல்லவா இத்தனை பிரச்சனை நடந்து இருக்கு எங்கட்ட ஏன் முதலயே சொல்லல என்று குறை குறை கூறிய சுஹாவின் தந்தை செந்தில் ஏற்கனவே தேவனின் கடனுக்கு உதவியவர் இப்பொழுதும் தேவனின் கடனில் பெரும் பகுதியை அடைத்தார்

கற்பகம் காணாமல் போனது முதல் எல்லோரும் தேட ஆரம்பித்தனர் பேப்பர் விளம்பரம் கூட குடுத்தனர் நன்றாய் இருந்தவரை மனநலம் சரி இல்லாதவர் என்று விளம்பரம் குடுத்தனர் ஆனால் அவர் தான் கிடைப்பதாய் இல்லை கடவுள் புண்ணியத்தில் போலீஸ் சைட் கிடைத்த தகவலில்  அவர் உயிருக்கு ஒன்றும் இல்லை என்பது மட்டும் அப்போதைய ஆறுதல் அவர் தொலைந்து கிட்டதட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு இன்று சுஹாவிற்க்கு கிடைத்துள்ளார்  

வேறு வழியின்றி அவளை சிறிது நேரம் அழ விட்டனர் அனைவரும்

 அவளை நோக்கி முதலில் பேச ஆரம்பித்தார் கற்பகம் “ அம்மு பொதும்டா தங்கம் ரொம்ப அழாதடா “

தன்னை சிறிது ஆசுவாச படுத்தியவள் “எப்படி இருக்கீங்க அம்மாச்சி” என்றாள்

“ எனக்கென்னடா நல்லா இருக்கேன் “

“ ம்‌ம்‌ம் பாத்தேன் பாத்தேன் “ என்று அவர் கால் கட்டை பார்த்து கொண்டே சொன்னாள் சுஹானா

“ இது தெரியாம வழுக்குனதுடா பெருசா ஒண்ணும் அடியில்ல விடு “

“ ஏன் அம்மாச்சி இப்படி பண்ணிங்க உங்களுக்கு ஒரு பிரச்சனைனா யார்ட்டயும் சொல்ல மாட்டீங்களா அங்க இருக்க பிடிக்கலென கிளம்பி எங்க வீட்டுக்கு வரவேண்டி தானே எதுக்கு இப்படி எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போனீங்க “

“ சொல்ல தெரியலடா ஆனா யாருக்கும் பாரமாய் இருக்க கூடாதுணு ஒரு முடிவு வேற ஒண்ணும் இல்ல “

“ நீங்க எங்களுக்கு பாரமா அம்மாச்சி ஏன் இப்படிலாம் பேசுறீங்க நீங்க இல்லாம அம்மா அப்பா இத்தன வருஷம் எவ்ளோ கஸ்ட்ட பட்டாங்கணு தெரியுமா தேவன் மாமா கூட பாவம் எவ்ளோ அழுதாரு.... நீங்க வந்துருங்க அம்மாச்சி நம்ம வீட்டுக்கு கூட வேணாம் இங்க எங்க கூட வாங்க பிளீஸ் “

“ வேணாம்டா நான் இங்கு இருக்கது தான் எல்லாருக்கும் நல்லது  யாருக்கும் கஷ்டம் குடுக்கமா இங்க இருக்க எல்லா உறவோடும் வாழ்ந்துட்டு இன்னும் கொஞ்சம் காலத்த ஓட்டிருறேன் தாயி... நீ சந்தோஷமா இரு “  

“ நான் இப்பவே எல்லார்ட்டயும் சொல்லி வரவைக்குறேன் சொல்றவங்க சொன்னா எல்லாம் கேப்பிங்க “

“கூப்பிடுடா எனக்கும் எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு பாத்து ரொம்ப நாள் ஆச்சு எப்பவாச்சும் பாக்கணும்னு தோணுனா தம்பிட்ட சொல்லிட்டு போவேன் யாருக்கும் தெரியாம உங்கள பார்த்துட்டு வந்துருவேன் “ என்று சித்தார்த்தை கை காட்டினார்

கணவர் பக்கம் சூடான பார்வை ஒன்றை வீசினாள் மேலும் கற்பகமே தொடர்ந்தார் “ ஆனா யார் வந்து கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன் எனக்கு இங்க இருக்க தான் பிடுச்சு இருக்குடா செத்த கொள்ளி போட சொந்தம்னு நீங்க இருக்கீங்க வேற என்ன வேணும் ஏதாவது செய்யலாம்னு நினச்சிங்க இங்க வந்த எனக்கு இதவிட்டு வேற இடதுக்கும் போக தெரியும் “ சொன்னவர் குரலில் தான் அப்படி ஒரு உறுதி   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.