(Reading time: 30 - 60 minutes)

ஸ்தூரி பாட்டிக்கு மட்டும் இல்லை அங்கு இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருந்தது வாழ்க்கை என்ற சின்ன கோட்டை கடப்பதற்க்குள்தான் எத்தனை எத்தனை ஏற்ற இறக்கங்களாக அது மாறி போகிறது

எதை எதையோ யோசித்துக்கொண்டு இருந்தவள் சிந்தனையை களைத்தான் சித்தார்த் “ என்ன அம்மு சிந்தனைலாம் பலமா இருக்கும் போல “

“ ஒன்னும் இல்லங்க இங்க இருக்கவங்கள பத்தி நினச்சு பாத்தேன் இங்க இருக்க வசதிக்கு நாம இவங்கள நல்லா பாத்துட்டாலும் உலகத்துல இருக்கு இது மாதிரி மத்த இல்லங்கல்லாம் இதே போல் இருக்கும்னு சொல்ல முடியாதுல எல்லார் மனசும் ஒரு சின்ன அன்புக்கு தானே ஏங்குது அது கிடைக்காம ஏங்குறதுலாம் பாவம்ல...... நாம ஃப்யூச்சர்ல இத விட பெரிய ஹோம் ஆரம்பிச்சு நிறய பேர்க்கு ஆதரவு தரணும் “

“ கண்டிப்பா பண்ணலாம்மா இப்ப நீ எல்லார்க்கும் ஸ்வீட் குடு கொஞ்ச நேரத்துல டின்னர் டைம் வந்திரும்வா “

ம்‌ம்ம்... நானே போய் எல்லாருக்கும் குடுதுட்டு வரேன் – சுஹானா

நீ எதுக்கு ஸ்ட்ரைன் பண்ணிக்கிற எல்லாரையும் கிரௌண்ட்ல அஸ்ஸெம்பேல் ஆக சொல்லலாம்

அவனை முறைத்தவள் “ ஒண்ணும் வேணாம் அப்படி பண்றது ரொம்ப தப்பு லைன்ல நின்னு வாங்குறது அவங்களுக்கு எவ்ளோ மனகஷ்டத்த தரும் நானே போய் குடுதுக்குறேன் “

நல்ல மனம் வாழ்க.......

ஒய்....

“ஓகே ஓகே  கூல் இங்க லைன்ல வாங்குற ரூல்லாம் இல்ல பாவம் பொண்ணுனு கொஞ்சம் கன்சசென் குடுத்தா என்ன வில்லன் ரேஞ்ச்க்கு லுக் விடுற நான் ஒன்னும் சொல்லல நீயே போய் குடுமா” “

“ அது அந்த பயம் இருக்கணும் ” என்று அவனிடம் பலிப்பு கட்டிவிட்டு சென்றாள் சுஹானா

தன்னால் முடிந்த மட்டும் எல்லாரையும் தேடி சென்று இனிப்பு வழங்கினாள் ஆனால் அவளை தூரத்தில் பார்த்த உடனே எல்லாரும் அவளை சூழ்ந்துக்கொண்டனர் மனம் நிறைய ஆசி குடுத்தனர் பெரியவர்கள்

எல்லாருக்கும் கொடுத்துவிட்டோமா என்று ஒரு முறை சரிபார்த்தவள் அறைகளுக்குள் இருக்கும் ஒரு சிலருக்கு கொண்டுக்கவில்லை என்பது விளங்க அவர்களை தேடி போனாள்

நிறய பேர் என்று சொல்ல முடியாது நான்கு ஐந்து பேர் தான் இருபார்கள் அவர்களுக்கும் கொடுத்து விட்டு கடைசியாக ஒரு அறை மட்டும் மிச்சம் இருக்க அந்த அறைக்குள் மெல்ல நுழைந்தாள் காரணம் அங்கு இருந்தவர் உறக்கம் பாவம் காலில் கூட வலிக்கு ஏதோ ஒரு பெரிய பாண்ட்ஐடு .

இவ்வளவு தூரம் வந்துட்டு குடுக்காமா எப்படி திரும்ப போக.... என்ன செய்யலாம் என்று யோசிதவளுக்கு உதவிக்கு வந்தார் மலர் பாட்டி 

“ என்னமா இங்க நிக்கிற எதாதும் வேணுமா  “

அது ஒன்னும் இல்ல பாட்டி இந்த பாட்டிக்கு மட்டும் ஸ்வீட் குடுக்கலா அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் என்று உறங்கிக்கொண்டு இருந்த அந்த பெண்மணியை காட்டினாள்

ஓ இதுவா இது கற்பகம்மா எல்லார்ட்டயும் அன்பா இருக்கும் ரொம்ப நல்ல மனுஷி பாவம் முந்தாநேத்து பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடுச்சு அதான் மாத்திர சாப்பிட்டு தூங்குது எந்திருக்கிற நேரம் தான் நீ அது பக்கத்துல இருக்க டேபிள்ள வச்சுட்டு போத்தா என்று கூறி சென்று விட்டார் அவர்

கற்பகம் அந்த பெயரை கேட்டவள் நெஞ்சில் ஒரு நொடியில் ஆயிரம் ஊசிகளை வைத்து குத்தும் வலி

இருக்காது இது அவராய் இருக்க வழியில்லை ஒரு வேலை இருந்துவிட்டாள் இத்தனை ஆண்டுகள் என் அன்னை வைத்த நம்பிக்கை உயிர்பெறும்  அல்லவா பொய்த்து போனாய் என்று கல்லாய் நான் நினைத்த கடவுள் உயிர் பெற்று எனக்கு பதில் தருவார் அல்லவா இப்ப நான் என்ன செய்ய யோசிக்க மறுத்த மூளையுடன் ஏதாவது சொல் என்று மனம் போட்டி போட ஒன்றும் தோன்றாமல் ஒரு சில நொடி நின்ற இடத்திலே வேரூன்றி நின்றுவிட்டாள்

“ சுஹா உள்ள போ “ அவளை இத்தனை நேரம் கவனித்துக்கொண்டு இருந்த சித்தார்தின் வார்தைகள் அவளை உள்ளே அழைத்துச்சென்றது

அவர் அருகில் சென்று அந்த டேபிள்ளில் அந்த ஸ்வீட் பாக்ஸ்ஸை வைத்துவிட்டு அவரை நோக்கி தன் கண்களை செலுத்தினால் சுஹானா ஆனால் அவளால் தான் அவரை காண முடியவில்லை முகத்தை மூடி தூங்குபவர் கைகளை விலக்கி விட்டு எப்படி பார்ப்பதாம்

சற்று ஏமாற்றத்துடன் திரும்பிசெல்ல எத்தனித்தாள் யார் செய்த புண்ணியமோ அந்த நொடி எப்படி வந்தது என்று தெரியவில்லை ஆனால் சரியான நேரத்தில் தான் வந்தது அவருக்கு அந்த இருமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.