(Reading time: 30 - 60 minutes)

ன் முகத்தை மூடிய கைகளை சற்று கீழிறக்கி அவளை நோக்கி கொஞ்சம் ஒருசாய்த்து படுத்தார் அவர் அவர் அவர்தான் அவரே தான்!!! இத்தனை வருடங்களில் ஒருதடவையாவது அவரை பார்த்து விட மாட்டோமா என ஏங்க வைத்தவர் தன் பிறந்த வீட்டில் இருந்த எல்லோரிடமும் ஒட்டுமொத்த பாசத்தை திருடிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒளிந்துக்கொண்டவர்  அவர் முகத்தை பார்த்தது மட்டும் தான் அந்த நிமிடம் அவள் மதியில் பதிந்த கடைசி உருவம் ஆம் அடுத்த நோடி அவள் மயங்கி சரிந்தாள் அவளை தாங்கி பிடித்தான் அவள் பின் நின்ற அவள் கணவன் அவனுக்கு தெரியுமே அவரை பார்த்தால் அவள் எவ்வளவு உணர்ச்சிவச படுவாள் என்று அதனால் தானே இத்தனை நாள் அவளை அவன் இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை

சிறிது நேரம் எல்லாரையும் தவிக்க விட்டு கண் விழித்தாள் சுஹானா “ இதுக்கு மேல ப்ராப்ளம் இல்ல அவங்களுக்கு ஏதாவது சாப்பிட குடுத்துட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு டிராவல் பண்ணுங்க “ அவள் பக்கத்தில் இருந்த பெண் மருத்துவர் அவள் கணவனுக்கு ஏதயோ விளக்கிக்கொண்டு இருந்தார் அதற்க்குள் பாதி திறந்தும் திறக்க முடியாமல் இருந்த கண்கள் வழியாக அவரை தேட தொடங்கி இருந்தாள் இவள் ஆனால் அவளுக்கு சிரமம் குடுக்காமல் அவள் பக்கத்திலே அமர்ந்த்து இருந்தார் அவர்

பார்த்தாலே கை எடுத்து கும்பிடும் மகாலக்க்ஷ்மி போல் இருந்தவர் இன்று ஏதோ தொண்டி எடுத்தார் போல் எழும்பும் தோலுமாய் தெரிந்தவர் பார்த்தால் சட்டென அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு இருந்தார் அவர் அவரை அருகில் பார்த்த அடுத்த நொடி அம்மாச்சி என்று அவர் மடி சேர்ந்துக்கொண்டாள் சுஹானா அவரை இத்தனை வருடங்களில் ஒருதடவையாவது பார்த்து விட மாட்டோமா என ஏங்கியவள் இன்று அவரை இந்த சூழ்நிலையில் சந்திக்கும் நிலையில் நின்றுக்கொண்டு அவள் உணர்வை  எப்படி சொல்வாள் 

இத்தனைக்கும் கற்பகம் அவள் சொந்த பாட்டி இல்லை அவளின் அம்மாவின் பெரியம்மா ஆனால் சொந்த பாட்டியைவிட இவள் மேல் அதிக அன்பு வைத்தவர் இவளிடம் மட்டும் இல்லை அறிமுகம் இல்லாத யார் பேசினாலும் அவரிடம் அன்புமும் அக்கறையும்  மட்டுமே கிடைக்கும்

எதிர்பார்ப்புகள் இருக்கும் உறவுகளில் தான் ஏமாற்றங்கள் இடம்பெறும் இவர் எதிர்பார்ப்பு என்ன என்று அவரே இதுவரை முழுதாய் உணராதவர் எல்லோரிடமும் நட்பு பாராட்டுபவர்

விவரம் தெரியாத வயதில் பாலியல் திருமணத்திற்க்கு உட்படுத்தப்பட்டவர் குழந்தை தன்மை மறையாத வயதில் அவரிடம் போய் குழந்தை இல்லயா  குழந்தை  இல்லயா என்று கேட்க ஆரம்பித்தது இந்த சமூகம் கண் இமைக்கும் நொடியாய் ஓடி மறைந்தது இருபது வருடங்கள் இதற்க்கு மேல் முடியாது எனக்கு இவள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சென்றுவிட்ட கணவனை தடுத்து சமரசம் பேசியவர்களுக்கு தெரியவில்லை அவருக்கு ஏற்க்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது அந்த நிலயில் கற்பகம் இதை யாரிடம் சொல்ல சொன்னாலும் குறை இவரிடம் மட்டுமே கண்டுபிக்க காத்துகிடந்தது ஒரு காக்கா கூட்டம் நிலமை கைக்கு மேல் சென்றதை உணர்ந்து இவர்களை பிரித்து விட்டனர் தனி மரமாய் நின்றவளுக்கு துணையாய் தன் ஒன்று விட்ட தங்கை மகனை சட்டப்படி சுவீகாரம் செய்து இவருக்கு மாச  மாசம் கை செலவுக்கு ஒரு குறுபிட்ட தொகை தருவதாய் சொல்லி பிரிந்து சென்று விட்டார்

குழந்தை இல்லை என்பதை குறையாய் கூறி சென்றவர்க்கு குழந்தை பிறப்பதர்க்காண வழியை காணாம் இப்படியை பதினைந்து வருடங்கள் செல்ல ஐம்பதுகளுக்கு சென்ற பிறகு செயற்க்கை கருதருப்பு மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனானார்

குழந்தை இல்லை என்று இவருக்கு மலடி பட்டம் கொடுத்த சமூகதிற்க்கு அப்பொழுது  தெரியவவில்லை குறை கற்பகத்திடம் மட்டும் இல்லை என்பது

தனது தத்து மகனை மட்டும் உயிராய் கொண்டு முடிந்த மட்டில் சுற்றம் சூழ வாழ்ந்து கொண்டு இருந்தார் தன் தங்கை பிள்ளைகள் அண்ணன் பிள்ளைகள் என்று அனைவரிடமும் அன்பு பாராட்டுவார் காலங்கள் அதன் போக்கில் செல்ல அவர் மகன் தேவனும் பெரியவனாகி சுயதொழில்லில் முன்னேறி திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கு அப்பாவாய்  சந்தோஷமாக வாழ்ந்த காலம் தேவனின் நண்பன் மூலம்  புயல் வீச தொடங்கியது நண்பன் என்று நம்பி அவன் கடன் வாங்க கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் சென்று ஸுரிட்டி போட்டார் தேவன்

உதவி என்று நினைத்தவர்க்கு அது பெரும் உபத்திரம்மாய் மாறியது நண்பன் கடன் தொகையை கட்டமுடியாமல் கம்பி நீட்டி விட அவனை தேடி அலைந்தார் தேவன் ஒரு கட்டதுக்கு மேல் நண்பன் கிடைக்காமல் போக கடன் தொகை மொத்தமும் அவனுக்கு ஜாமீன் போட்ட இவர் தலயில் விடிந்தது பாவம் அவரும் அந்த நண்பனை தேட கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க என்று நிக்காமல் ஓடிக்கொண்டு இருந்தார் ஒரு கட்டத்தில் லட்சங்களில் இருந்த கடன் அதை விட இரு மடங்காகி கோடியை நோக்கி சென்றது இதற்க்கு மேல் முடியாது என்று இருந்த சொத்துக்களை விற்று மொத்த கடனையும் விற்று மனைவி மக்களுடன் நிற்கதியாய் நின்றார் குடும்ப கஷ்டம் என்று அவர் மனைவியும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு தான் வேலை கிடைக்கவில்லையே கிடைத்தது எல்லாம் கடன்காரன் பட்டம்

பொறுத்து பொறுத்து பார்த்த அவர் மனைவியும் பொறுமை இழந்து தினமும் சண்டை போட ஆரம்பித்தார் தத்து கொடுத்தாலும் பாசம் வைத்த அவரின் பெற்றோர்களும் எங்களுக்கு இன்னும் மூணு பிள்ளைங்க இருக்காங்க அவங்கலயும் பாக்கணும் என்று கை விரித்து விட கொஞ்சம் கொஞ்சமாக பத்ரகாளியாய் மாறினார் தேவனின் மனைவி அவரின் கோவம் சென்று நின்ற இடம் கற்பகம்மாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.