(Reading time: 30 - 60 minutes)

ந்த குரல் தோனி அவள் அறியாததா இப்படி சொன்னாள் அவர் அதை நிச்சையம் செய்வார் என்பது அவளுக்கு தெரியும் இதற்க்கு மேல் என்ன செய்ய என்ற யோசனையில் உட்கார்ந்து விட்டாள் இவள்

“ எத்தனாவது மாசம்டா “ அவளின் மேடிட்ட வயிரை மயிலிறகாய் வருடி கேட்டார்

“ ஏழு மாசம் “ – சுஹா

“ மகராசியா இருடா மா இப்ப தான் தம்பி எல்லா விவரமும் சொல்லுச்சு யார் செஞ்ச புண்ணியமோ தம்பி மாதிரி நல்ல புள்ள உனக்கு வாழ்க்க துணையா கிடச்சிருக்கு நல்லா இருடா யார் என்ன சொன்னாலும் பொறுத்து போகணும் சரியா “ இது தான் அம்மாச்சியின் டிரேட் மார்க் அட்வைஸ் “யார் என்ன சொன்னாலும் பொறுத்து போகணும்” இப்போதும் அதுவே குடுத்தார்

மேலும் அவரிடம் கதை பேச ஆரம்பித்தாள் சுஹானா பேசுவதற்க்கு கதையா இல்லை அவர் இல்லாத சமயம் குடும்பத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் சுப நிகழ்வுகள் என்று எல்லாம் சொன்னாள் ஆனால் மறந்தும் கூட அவரை மறுபடியும் இங்கு இருந்த்து வந்து விடுங்கள் என்ற வற்புடுத்தலை தொடங்கவில்லை அவள்

தேவன் இப்பொழுது நல்ல வேலயில் இருக்கிறார் குடும்பத்தில் எந்த சண்டையும் இல்லை எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா சொல்லிக்கொண்டு வந்தவளை நிறுத்தி தன் கணவன் குடும்பம் எப்படி இருக்கிறது அவர் பெண் என்ன படிக்கிறாள் எப்படி இருக்கிறாள் என்றும் கேட்டுக்கொண்டார் அவரை முறைத்து உப்பும் சப்புமாக அதற்க்கும் பதில் உரைத்தாள் சுஹானா

அவள் சந்தோசத்திற்க்காகவும் அங்கு இருபவர்களின் விருபதிற்க்கு இணங்க மேலும் ஒரு நாள் அங்கு தங்கினான் சித்தார்த்

எல்லாரிடமும் கூறி விடைபெற்று மீண்டும் அடுத்த நாள் மாலை பொழுதில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்

காரில் “ சுஹா தூங்குறியாடா, எஃப்‌எம் போடவா, ஏதாவது சாஃப்ட் ம்யூசிக் போடவா, விண்டோவ ஓபன் பண்ணிவிட்டு ட்ரைவ் பண்ணவா, பசிக்கிதா, ஆப்பிள் சாப்பிடுறிய, ஏதாவது ஹோட்டல்க்கு போலாமா “ என்று அவன் அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவளின் பதில் வேண்டாம் என்ற சின்ன தலை அசைப்பு

செல்லும் பொது இருந்த அத்தனை உற்சாகம் சந்தோஷம் எல்லாம் வடிந்து சோகமான முகத்துடன் அவள்

வீட்டுக்கு சென்றதும் அவனின் வற்புடுத்தலில் ஒரு கிலாஸ் பால் அருந்தி உறங்க சென்றுவிட்டாள்

அவனிடம் அவள் பேசி ஒரு நாளுக்கு மேல் ஆனது

அடுத்தநாள் காலை களைப்பும் சோர்வுமாய் எழுந்தவள் ரெஃப்ரெஷ் ஆகி அடுப்படிக்குள் சென்றால் பிளாஸ்க்கில் சூடாக டீ ஹாட் பாக்ஸ்ல் மொறு மொறுவேன அப்பொழுது தான் சுட்டு வைத்தாற் போல் குட்டி குட்டி தோசைகள் பக்கத்தில் மாங்காய் சட்டினி என்று எல்லாம் பார்த்தவள் முகத்தில் குட்டி புன்னகை கூடவே பார்த்துக்கொண்டு இருந்தவள் பின்னால் இருந்து அவளை வயிற்றுடன் சேர்த்து இருகை விரல் கோர்த்து கட்டிக்கொள்ளும் அவன் அணைப்பு

“ பட்டுக்கு தூக்கம் போச்சா “ – சித்தார்த்

“ ஆமா ரொம்பத்தான் அக்கறை “ –மெல்ல முணுமுணுத்து அவனிடம் இருந்து விலகினாள்

“ ஏன் எனக்கு உன் மேல அக்கற இல்லயா “

“ அதான் பத்தேனே... பிராடு, சீட்டர் காக் “

“ இப்ப உன் பிரச்சனை என்ன “ பேசாமல் அவனை மௌனமாய் பார்த்தாள் பார்வையில் இருந்தது கோபமா ஆற்றாமையா புரியவில்லை அவனுக்கு

“ எனக்கு இது இப்ப தான் டா ஒரு ஃபோர் மன்த்ஸ் முன்னாடி தெரியும் ஒன் டைம் உன் ஃபேமிலி ஆல்பம் காட்டினேல அதுல பார்த்தேன் அப்பறம் நீயே அவங்கள பத்தி சொன்ன அப்பதான் அப்ப உனக்கும் உடம்பு அடிக்கடி முடியாம போச்சு நம்ம ஃபேமிலி டாக்டர்ட்ட கன்செல் பண்ணேன் கொஞ்ச நாள் உனக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்க வேணாம்னு விட்டுட்டேன் நீ அடிக்கடி அவங்கள பத்தி பேசும்போது எனக்கு மனசு கேக்காது அதான் உன் பர்த்டே அன்னைக்கு சொல்லிட்டேன் என் பர்த்டே கிஃப்ட் எப்படி இருந்தது “ என்றான் உதட்டில் ஓடும் புன்னகையுடன் புருவம் உயர்த்தி 

தன்னால் முடிந்த மட்டும் தரையில் இருந்து அவள் கால்களை உயர்த்தி கொஞ்சம் பலமாக அவன் நெஞ்சில் ஒரு குத்து வைத்தாள்

ஸ்‌ஸ்‌ஸ்... ஆஆஆஆஆஆ வலிக்குதுடி

“ என் ஹெல்த்த பத்தி நான் தான் சொல்லணும் நீங்களா ஒண்ணு முடிவெடுத்து நீங்களா ஒண்ணு பண்றீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மனசுல இன்னும் என்ன என்ன மறச்சிங்க “

“ ஐய்யயோ இத தவிர வேற ஒன்னும் மாறைக்கலமா நம்பு இது கூட ஒரு சர்ப்ரைஸ் மாதிரி தான் பிளான் பண்ணேன் பட் நீ இவ்ளோ அழுவேன்னு தெரிஞ்சு இருந்தா முன்னாடியே சொல்லிருப்பேன் “

நம்புறேன் நம்பி தொளைக்கிறேன் பட் உங்கள என்ன பண்ண

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.