(Reading time: 30 - 60 minutes)

ல்ல விசாலமான ஹால் அதை ஒட்டி குட்டி குட்டி அறைகள் ஒரு நபர் தங்குவதற்க்கு போதுமானது ஆனால் அங்கு இருபவர்கள் தான் அதை உபயோக பாடுதுவது போல் தெரியவில்லை பாசதுக்கு ஏங்கும் வயது அல்லவா அவர்களுக்கு அதனாலோ என்னவோ அந்த ஹால்லில் தான் எல்லாம் மீட்டிங்கும் போலும் அவர்கள் தூங்குவதற்க்கு வசதியாக அந்த அறைகள் தூசி என்பதை மைக்ரோ ஸ்கோப் வைத்துதான் தேடவேண்டும் சுழல்சியாக சுத்தம் செய்யும் ஸ்வீப்பர்ஸ் பக்கா ஹைஜினிக் என்விரோன்மெண்ட் என ஒவ்வொன்றயும் கணக்கிட்டாள்‌

“ யாருப்பா இது உன் வீட்டுக்காரம்மாவா? “ பேச்சு இவள் பக்கம் திரும்புகிறது என்று சுதாரித்து தன் பார்வையை கேள்வி வந்த திசை நோக்கி திருப்பிக்கொண்டாள் அவள்

“ ஆமா பாட்டி வந்தோனே உங்க எல்லார்ட்டயும் அறிமுகம் படுத்த தான் அவ பக்கம் திரும்பிட்டே இருந்தேன் நீங்க எல்லாரும் தான் என் முகத்த பிடுச்சு கொஞ்சிட்டே திரும்ப விடல” ஒரு செல்ல கம்ப்ளைண்ட் அந்த பாட்டியிடம்  இதற்கிடையில் அங்கு இருந்தவர்களை பார்த்து மரியாதை நிமிர்தமாக உதட்டில் பூத்த சிறு புன்னகையுடன் கை கூப்பினாள் இவள்

“ ம்‌ம்‌ம்... இவ தான் பாட்டி என் லேடி ஹிட்ட்லர் பெயர் சுஹானா..... ரொம்ப மாடர்ன் பெயர இருக்குல்ல பாட்டி உங்க மாதிரி பனிமலர்னு எவ்ளோ பொயடிக்கா பெயர் வச்சு இருக்கலாம் “ என்று அந்த பாட்டியிடம் கண்சிமிட்டி கேட்டான்

அங்கு இருந்த இன்னொரு பாட்டியோ “இந்த பெயரும் ரொம்ப அழகதானேயா இருக்கு சுஹானானா ரொம்ப அழகானவள் அன்பானவள் பொறுமையானவள்னு அர்த்தம்”  என்று பதில் உரைக்க ஆரம்பித்து இருந்தார்

“ தனா பாட்டி இதுலாம் கொஞ்சம் ஓவர் ரொம்ப நாள் கழுச்சு பேரன் வந்து இருக்கேனே எனக்கு சப்போர்ட் பண்ணாம  புது கூட்டணி ஆரம்பிச்சுட்டீங்களா “ முகம் முழுக்க சந்தோசத்துடன் கேட்டான்

“ இவளும் எனக்கு பேத்தி தானே ஐயா...... லட்சணமா மஹாலக்ஷ்மி மாதிரி இருக்க தாயி” என்று இவளுக்கு நெட்டிமுறித்தார் அவர்

இதனுள் “ நீ உள்ள வா மா “ என்று அவள் கரம் பற்றி அழைத்துச்சென்றனர் இருவர்

அவர்களின் பாசமோ கனிவான குணமோ ஏதோ ஒன்று அவளை ஈர்த்துச்சென்‌றது அங்கு சிலர் கணவன் மனைவி என்று சேர்ந்து இருந்தவர்களை கண்டு இவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை

சிறிது நேரத்திலே “ மலர் பாட்டி தனா பாட்டி செல்வம் தாத்தா மணி அங்கிள் சாரதா பாட்டி தெய்வம் தாத்தா மஞ்சுளா ஆண்ட்டி கஸ்தூரி பாட்டி”..... என்று எல்லோரயும் ஏதோ ஒரு உறவு சொல்லி அழைத்து  தன் நட்பு வட்டதுக்குள் இழுத்துக்கொண்டாள்

அவளின் குழந்தை தனமான குணமும் மனிதர்களை மதிக்கும் பண்பும் மரியாதையும் எல்லாரயும் அவள் பால் இழுத்தது

அங்கு உள்ள குட்டீஸ் உடன் விளயாடிக்கொண்டே எல்லாருடனும் கதையடிக்க ஆரம்பித்து விட்டாள் ஆனால் பாவம் அவளை விளயாட விட்டாள் தானே “ இந்த மாதிரி நேரதுள்ளலாம் சுதானமா இருக்கணும் மா இந்த மாசத்துல வேகமா எதையும் செய்யக்கூடாது இப்படி இத செய்யனும் அப்படி அத செய்யனும் “ என்று கஸ்தூரி பாட்டியின் லிஸ்ட் நீண்டு கொண்டே போனது

“ பாட்டி போதும் போதும் எவ்ளோ ரூல்ஸ் போட்றீங்க உங்களுக்கு நிறய மேட்டர் தெரிஞ்சு இருக்கு பாட்டி உங்களுக்கு எத்தனை பசங்கள் “ எனக்கு நாலு மக்கமாறு(மகள்) மூனு மகேன்மா என்றார் கஸ்தூரி பாட்டி  

ஓ... – சுஹானா

“ என்னமா யோசிக்கிற இத்தன பேர பேத்துட்டு இந்த கிழவி இங்க என்ன அனாதையா கிடக்கானா “

“ அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி “ அவள் இல்லை என்று சொன்னாலும் அவர் முகத்தில் ஒரு குட்டி புன்னகை ஒட்டிக்கொண்டது

“ நான் லூசுமா “

“ என்னது ???????? “

“ பயப்புடாதமா, என் மகளுகல எல்லாம் நல்ல இடத்துல கட்டிகுடுத்துட்டேன்மா என் மகன்கலாம் அரசாங்கத்துல பெரிய உத்யோகத்துல இருக்கங்கமா அவர் போனதுக்கப்பரம் என்ன பயலுங்க பாத்துக்கணும்னு உயில் எழுதி சொத்தா பிருச்சு வச்சுட்டு போனாரு அவங்க ஐயா போனாதுக்கப்பறம் கொஞ்சம் நாள் எல்லாம் நல்லா தான் போச்சு ஆனா இருக்க பரபரப்பான உலகத்துல எனக்குனு நேரம் செலவலிக்கத்தான் யாரும் இல்லாம போய்ட்டாங்கலோனு தோன ஆரம்பிச்சுசு இப்படியே போச்சுனா என்ன பண்ணனு தெரில ஒரு கட்டத்துல அவங்க ஐயா பத்தி வரவங்க போரவங்கட்டலாம் பெருமையா பேசிட்டு இருந்தேன் அது அவனுங்களுக்கு கவுரவ கோரச்சலா போச்சு எனக்கு புத்தி பேதலுச்சு போச்சுனு இங்க கொண்டாந்து சேர்த்து விட்டுட்டாங்க நானும் எல்லாம் இருந்தும் இல்லாம இருக்கதுக்கு இங்க நிம்மதியா இருக்கலாம்னு வந்துட்டேன் மாசதுக்கு ஒருக்கா யாராவது வந்து பாத்துட்டு போவாங்க “ கூறி முடித்தவர் முகத்தில் தான் மகிழ்ச்சி என்பது துளி அளவும் இல்லை

தன்னிடம் இவ்வளவு அக்கறையும் கனிவும் காட்டிக்கொண்டு இருப்பவரை மனநலம் சரி இல்லாதவர் என்றால் யார் தான் நம்புவார் சுஹானாவும் அதே மனநிலையில் தான் இருந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.