(Reading time: 13 - 25 minutes)

து எப்படியோ, என் அப்பாவின் அந்த லேட்டஸ்ட் ஐடியாவும் ஃப்ளாப் ஆனது....

அந்த மாப்பிள்ளைக்கு ஒல்லியாக, உயரமாக, கலராக இருக்கும் பெண் வேண்டுமாம்....!

ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் கட்டாயம் இவரை முயற்சி செய்ய சொல்லி இருக்கலாம்....!

இத்தனைக்கும் வந்திருந்த அந்த மாப்பிளை என் அளவுக்கு படிக்கவில்லை, வேலையும் இல்லை!

இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் வேண்டாம், பிடிக்கவில்லை என்று சொல்லும் உரிமை கூட எனக்கில்லை, ஆனால் என்னை பார்த்து பிடிக்கவில்லை என்று சொல்லி நிராகரிக்க அவனால் முடிகிறது!

எரிச்சலாக இருந்தது.... ஆண்களுக்கு மட்டுமே தேர்வு செய்யும் உரிமை இருக்கிறதா????

யார் கொடுத்தது அவர்களுக்கு இந்த உரிமையை???

சப்புடன் நாட்கள் செல்ல, திடீரென வீட்டில் அம்மா அப்பாவிடம் புது விதமான மலர்ச்சி.... இப்போது என்ன செய்து வைத்திருக்கிறார்களோ என்று நான் கவலையுடன் காத்திருக்க விஷயம் மெல்ல வெளியில் வந்தது....

அப்பாவின் பால்ய நண்பர் ஒருவர், அவரின் மகனை எனக்கு மணமுடிக்க சம்மதித்து விட்டாராம்....!

அது யாரடா அவன்? என நான் கடுப்புடன் யோசிக்க... அந்த புது ‘ஜீரோ’ என்னை பார்க்காமலே கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டார், தீபாவளி அன்று வீட்டிற்கு வருகிறார்கள் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது....

அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளை என்ற என் அம்மாவின் பேச்செல்லாம் எனக்கு உண்மையாக தெரியவில்லை... சந்தேகத்துடனே மேலும் விஷயங்கள் சேகரித்தேன்...

அம்மா என் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பியது இந்த ‘ஜீரோ’வின் மர்மத்தை அதிகரித்தது.

ஆனாலும் விடாமல் கேள்விகள் கேட்டு அம்மாவிடம் இருந்து சில தகவல்களை கறந்தேன்.

அவன் என்னை போலவே எஞ்சினியர் தான்.... ஈ.பியில் வேலை செய்கிறானாம்...

ஆனாலும் அம்மா – அப்பாவின் நடவடிக்கை எதுவோ சரியில்லை என என்னை யோசிக்க வைத்தது....

அதுவும் அது என்ன அவர் பாட்டிற்கு என்னை பார்க்காமலே, என் விருப்பத்தை கேட்காமலே ‘ஓகே’ சொல்வது! பெரிய இவர்... சுவர்.....!

ஜீரோவை நேரில் பார்த்து நச்சென்று நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

சீக்கிரமே போட்டோ தருவார்கள், ‘ஜீரோவை’ நானும் பார்க்கலாம் என்று அம்மா சொன்னது எல்லாம் என் ஆர்வக் கோளாறை அடக்கவில்லை.

அம்மாவிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்து, அவனின் பெயர் மற்றும் வேலை செய்யும் இடத்தை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு ‘ஜீரோ’வை நேருக்கு நேர் சந்தித்து என்ன பெரிய தியாகி என்று நினைப்பா என்று கேட்டு விடுவது என்ற முடிவுடன் சென்றேன்....

ந்த மின்சார வாரிய அலுவலகத்தை கண்டுபிடிப்பது எளிதாக தான் இருந்தது. எதிரில் வந்த பனியாளர் ஒருவரிடம்,

“சரவணனை பார்க்கனும்....’ என்று என் பெயர் சொல்லி அனுப்பினேன்....

என்ன எல்லாம் பேசுவது, எந்த ரீதியில் பேசுவது, என்ன தொனியில் பேசுவது என்று நான் திட்டமிட்டுக் கொண்டிருக்க அங்கே வந்தவைனை பார்த்து ஒரு கணம் திகைத்து போனேன்....!

அவனின் முகமெல்லாம் நன்றாக தான் இருந்தது... பிரச்சனை தலையில் ஹுஹும்.... தலைக்கு மேலே இருக்கும் சிகையில் இருந்தது.

அந்த இளம் வயதிலேயே அவனுக்கு முன்னந்தலையில் வழுக்கை இருந்தது....

இவன் தான் சரவணனா?

நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் அருகே வந்தவன்,

“ஹலோ, நான் தான் சரவணன்....! வாங்க, பக்கத்துல இருக்க காபி ஷாப்பில ப்ரைவசி கிடைக்கும்.... அங்கே போய் பேசுவோம்....” என்றான் அமைதியான குரலில்.

அவனின் அமைதி விசித்திரமாக இருந்தாலும், பிகு எதுவும் செய்யாமல் அவனுடன் சென்றேன்.

காபி ஷாப்பில் இருந்த மெனுவை நான் பார்வையிட,

“இங்கே mocha நல்லா இருக்கும்.. உங்களுக்கு பிடிக்கும்னா அதையே செலக்ட் செய்துக்கோங்க...” என்று பரிந்துரை செய்தான்.

பரவாயில்லையே.....! இதை வாங்கு என்று உத்தரவிடவில்லை... எதை வேண்டுமென்றால் வாங்கிக் கொள் என்று விட்டேற்றியாகவும் இல்லை....! இதெல்லாம் ஓகே தான்....

ஆனால் அதென்ன என்னை பார்த்து விட்டு ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் காபி வாங்க சொல்கிறான்????

மனதில் இருந்த கேள்வியை மறைத்து அவன் சொன்ன மோகாவையே ஆர்டர் செய்தேன்.

Mocha வந்த சேர்ந்த பின்பும் ஏதோ ஒன்று என்னை கட்டி போட, அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தேன்.

சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவன், நான் அமைதியாக இருக்கவே,

“சொல்லுங்க...” என்றான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.