(Reading time: 13 - 25 minutes)

ண்டை போடலாம்னு நினைச்சு கிளம்பி வந்தீங்க சரி..... இப்போ என்ன நினைக்குறீங்க????”

அவனின் குரலில் இருந்த ஆர்வத்தை ரசித்த படி,

“இப்போ என்ன?” என்றேன் புரியாதவளை போல.

“இல்லை.... என்னை கல்யாணம் செய்துக்க உங்களுக்கு ஓகேவா????”

“நான் சொல்றது இருக்கட்டும், உங்களுக்கு சம்மதமா?”

“என்ன இப்படி கேட்டுட்டீங்க? உங்க குடும்பம் பத்தி என் அப்பா நிறைய சொல்லி இருக்கார்.... உங்களை பத்தியும் உங்க அப்பா சொன்னார்.... அப்போவே பிடித்திருந்தது.... இப்போ உங்களை பார்த்த பிறகு, அதுவும் எதுக்காக வந்தீங்கன்னு தெரிஞ்ச பிறகு, உங்க பேச்சை கேட்ட பிறகு, அதில தெரியும் உங்க நல்ல மனசு புரிஞ்ச பிறகு, முன்பை விட ரொம்ப பிடிச்சிருக்கு... உங்களுக்கு....???”

“எனக்கு.... ம்ம்ம்.... உங்களை விட ரொம்பவே அதிகமா பிடிச்சிருக்கு.....”

“இந்த வழுக்கை....”

“அதை விடுங்க சார்! சும்மா வழுக்கை அது இதுன்னு பேசிட்டு! அறிவு ஓவர் ப்ளோ ஆகி அப்படி ஆகி இருக்கும்....”

அழகாக புன்னகைத்தவன்,

“இல்லை சுஜா.... நாளைக்கு நம்மளை ஜோடியா பார்க்கும் போது உங்க பிரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் டீஸ் செய்யலாம்....”

“செய்தா செய்துட்டு போறாங்க... இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடலாம்.... நம்மளை பத்தி அப்படி பேசுறதுல அவங்களுக்கு சந்தோஷம்னா பேசிட்டு போய் தொலையட்டுமே... ஆனால் நீங்க இன்னொரு தடவை இது என்னவோ குறை என்பது போல பேசுறதை நிறுத்துங்க....”

“இல்லை, நான் குறைன்னு நினைச்சதில்லை.... கல்யாணத்துக்கு பொண்ணு தேட ஆரம்பிச்ச பிறகு தான்... சின்ன குழப்பம்....”

“விடுங்க பாஸ்.... அதான் இப்போ மேரேஜ் பிக்ஸ் ஆகுற ஸ்டேஜுக்கு வந்தாச்சே... பழைய மாதிரி ப்ரீயா இருங்க....”

மேலும் சில மணித்துளிகள் பேசி விட்டு காபி ஷாப்பை விட்டு வெளியே வரும் போது, ‘மன்னவன் வந்தானடி தோழி....’ என்ற பாடல் எங்கிருந்தோ காதில் விழுந்தது....

ஓல்ட் இஸ் கோல்ட்! சிச்சுவேஷன் பாடல் எல்லாம் சரியாக தான் இருக்கிறது என்று யோசித்த படி ‘ஜீரோ’ நோ நோ என் ஹீரோவுடன் நடந்தேன்...

“பார்த்து... இந்த பக்கம் பள்ளமா இருக்கும்...” என்று என்னை வழி நடத்தி சென்றான்....

அவனுடன் நடக்கையில் மனதினுள் அத்தனை சந்தோஷம்...!

சின்ன சின்ன விஷயங்களில் அவன் காட்டிய அக்கறை, ஷோ காட்டாமல் இயல்பாக பழகிய அவனின் குணம்...

அதற்கு மேல் என்னை என்னையாகவே ஏற்றுக் கொண்ட அவனின் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது....!

தற்கு மேல் அம்மா – அப்பாவின் தீபாவளி சந்திப்பு ஏற்பாடுகளுக்கு நான் எந்த தடையும் சொல்லவில்லை...

பட படவென பட்டாசுகள் ஓசை நிறைந்த தீபாவளி அன்று சரவணன் குடும்பத்தினர் எங்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, வீட்டை சுற்றி பார்ப்பதாக சொல்லி என்னுடன் நடந்த சரவணன், அதுவரை பாக்கெட்டினுள் மறைத்து வைத்திருந்த அழகிய ரோஜாவை எடுத்து நீட்டினான்.

நான் கேள்வியாய் பார்க்க,

“அன்னைக்கு காபி ஷாப்ல இருந்து பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போனப்போ,  அங்கே இருந்த ஒரு வீட்டு ரோஸ் பிடிச்சிருக்குன்னு சொன்னீயே.... அதை பறிச்சு தர முடியலை, அதான் இன்னைக்கு உனக்காக வாங்கிட்டு வந்தேன்....” என்றான்.

அந்த ரோஜாவை போலவே மெல்ல பூத்து மணம் வீச தொடங்கியது என்னுடைய.... மன்னிக்கவும் எங்களின் காதல் கதை....!

தோற்றத்தை பார்க்காமல் மனதை பார்த்து வந்த அழகிய காதல்...!

அதை கொண்டாடுவதை போல ஒலித்தது பக்கத்து வீட்டில் வைத்த ஆயிரம் வாலா சர வெடி!

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.