(Reading time: 37 - 74 minutes)

2017 போட்டி சிறுகதை 129 - காதலியா மனைவியா - ப்ரீத்தீ

This is entry #129 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா

எழுத்தாளர் - ப்ரீத்தீ

Love

ட் அ கிரேட் டைம் மேம்...”

“மீ டூ சார்...” என்று பேசியவாறு கைகுளிக்கு கொண்டனர்.

“சோ மறக்காமல் சண்டே வந்திருங்க... எங்க கிளப் மூலம் படிக்கும் மாணவர்களும் உங்களை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்காங்க..”

“தட்ஸ் மை pleasure சார். கண்டிப்பாக வந்திடுறேன்” என்று பேசி முடித்ததும். அவளை பார்க்க வந்திருந்த பெரியவர் இடத்தை விட்டு கிளம்பிவிட்டார். எப்பொதும் வரும் இடம் அது.. காபி என்றால் ரோஹிணிக்கு மிகவும் பிடித்தம் எப்போதும் தனது அலுவலக வேலை முடிந்ததும் இந்த வழியாக தான் செல்வது. தன் எழுத்துக்களை பத்திரிக்கையின் வடிவில் மாற்றி, அதை ஒரு தனி புத்தகமாகவே வார இதழாக வெளியிட்டுக்கொண்டிருந்தாள். முன்பெல்லாம் மாத இதழாக இருந்தது, இப்போது அவள் எழுத்துக்கு இருந்த வரவேர்ப்பால் வாரத்திற்கு மாறியது. தனி பதிப்பகம் போல் அது இயங்குவதால் அதுவே அவள் எழுதும் நேரம் தவிர மீதி நேரங்களை உறிந்துவிடும். அப்படி அந்த அலுவலகத்தில் இருந்து திரும்பி போகும் போதெல்லாம் இங்கு ஒரு காபி அருந்தாமல் போனால் ஏனோ பெரிய துரோகம் செய்துவிட்டது போல தோன்றும். இது ஒன்றும் பிறந்ததில் இருந்து வந்த பழக்கம் அன்று... எல்லாம் இந்த ராஜேஷ் மூலம் வந்தது தான், இப்படி நினைக்கும் போதே இதழின் ஓரம் முறுவல் தோன்றியது.

அவனை மனதில் நினைத்தவாறே காபியை வாங்கி ஒவ்வொரு சிப்பாக உரிந்தாள் ரோஹிணி. அவள் குடித்துக்கொண்டு இருக்கும் போது, அருகில் ஒரே சிரிப்பும் சத்தமுமாக இருந்தது. என்னவென்று திரும்பி பார்த்தவள் அதை ரசித்தவண்ணம் பார்க்க துவங்கிவிட்டாள். பெரிதாக எதுவும் அதிசயத்து நடக்கவில்லை, எல்லாம் கல்லூரி மாணவர்கள் தான் இந்த மும்பை நகருக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது. எப்போது இம்மாதிரி கல்லூரி மாணவர்களை பார்க்கும் போதெல்லாம் ஏக்கமாக இருக்கும். என்னதான் ஆசைப்பட்ட துறையில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பினும் இதோ இவர்களை போல சுதந்திரத்தோடு வாழ்க்கையை நிம்மதியாக நடத்த முடியவில்லையே என்று தோன்றும். அதை காட்டிலும் ஒரு சிறு ஏமாற்றம் மனதில் தோன்றும்... அதை நினைக்கையில்... சிந்தனையில் ஊரும் போது அழைப்பு வந்தது.

யார் என்று எடுத்து பார்த்தவள் திரையில் இருந்த புகைப்படத்தை பார்த்து புன்னகை புரிந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்தவள், “என்ன எழுத்தாளர் மேடம் எனக்கும் கொஞ்சம் உங்க டைம் கிடைக்குமா??” என்ற குரலை கேட்டே மகிழ்ச்சி தான் அவளுக்கு...

“ஏய்... ராஜூ...”

“பின்ன என்ன... மேடம் வருவீங்கன்னு லஞ்ச் சாப்பிடாம உக்காந்திருக்கேன். வாங்க சீக்கரம்.”

“அச்சோ.. சாரிப்பா... இதோ வந்துட்டேன்...”

“ஹே அதுக்காக அரக்க பறக்க குடிக்குற காப்பியை கொட்டிட்டு வராத... எனக்கு...”

“வேஸ்ட் பண்ணா புடிக்காது...” என்று அவனது வாக்கியத்தை இவளே முடித்துவிட்டு புறப்பட்டு சென்றாள். இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, வாழ்க்கை துணை அமைவது என்பது அவரவர் புண்ணியத்தை பொருத்தது போலும்... அந்த வகையில் ராஜேஷ் அவளுக்கு கிடைத்தது கூட ஒரு புண்ணியம் தான். பக்காவாக நிச்சயித்து முறையாக நடந்த திருமணம்.

வாங்க மேடம் வாங்க... என்ன இருந்தாலும் எங்க மேடம் punctual தான்” என்று கூறி அவளை அணைத்துக்கொண்டான். அவனது கழுத்தில் கைகளை மாலையாக போட்டபடியே அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து ரசித்தவள், “ஏன்டா உன்னை நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கல...” என்று ஏக்கமாக கேட்டாள்.

அவள் கேட்ட வினாடி, அவனது கண்ணில் ஒரு மின்னல் வெட்டி அவளது கண்ணுக்குள் ஊடுருவி சென்றது. அதை ரசித்தவள் “எப்பா இந்த பார்வைக்கே உனக்கு அவ்வளவு ரசிகைகள் இருந்திருக்கணும்டா.. இப்படி கேட்கும் போதுலா ஒரு பார்வை...”

“என்ன பார்வை உந்தன் பார்வை...

என்னை மறந்தேன் இந்த வேளை...”

என்று அவன் கழுத்தில் ஊஞ்சல் ஆடிய வண்ணமே நெற்றியோடு நெற்றி முட்டிக்கொண்டாள். “ஹ்ம்ம்... சரி வாங்க கப்பல் ஓட்டும் தமிழரே... சீக்கரம் உணவருந்திவிட்டு செல்லவும்” என்று அவனை கையோடு அழைத்து வந்து பரிமாற துவங்கினாள். அந்த செய்கைகளையெல்லாம் ரசித்தவண்ணம் அவளை ஒட்டியே வந்தான். இது இவர்களுக்குள் இருக்கும் பழக்கம், வேலை பழு என்று கூறி பேசி பழகும் நேரம் கூட இல்லாமல் காலத்தை ஓட்டாமல், எப்போதும் சேர்ந்தே உணவருந்துவது என்று முடிவு செய்து இருந்தனர் தவிர்க்க முடியா நேரங்களை தவிர.

இவர்களுக்கு திருமணம் நடந்து 1௦ மாதங்கள் முடிந்திருந்தது. அதற்கு முன்பு வரை வெளிநாட்டு கப்பல்களில் வேலை செய்து வந்த ராஜேஷ், திருமணத்திற்கு பின்பு இந்திய கப்பல்களில் மட்டும் வேலை செய்வதற்கு ஏற்ப பதவி மாற்றம் செய்யபட்டிருந்தான். அதனால் மும்பையில் இருந்த துறைமுகத்தில் வேலை கிடைத்தது, எப்போதாவது பயணம் போகும் வகையில் இருக்கும் ஆனால் முன்பை விட மிக குறைவு தான். தான் வெளிநாட்டு கப்பல்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே அவனின் வீட்டில் பெண் தேட துவங்கிவிட்டிருந்தனர். ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து தேடிக்கொண்டிருக்க இடையில் விடுமுறையில் வரும் பொழுது கண்டுக்கொண்ட சம்பந்தம் தான் ரோஹிணியின் பொருத்தம்.

ராஜேஷின் தந்தை மோகனின் நண்பரின் நண்பர் தான் ரோஹிணியின் தந்தை, இவ்வாறு துவங்கிய உறவு வீட்டு விசேஷங்கள், உறவுகள் என்று பகிர துவங்கி பின்பு மனங்களை இடம் மாற்றிக்கொண்டனர் தங்கள் குடும்ப வாரிசுகளின் மூலம். அவர்கள் முதலில் பார்த்து பேசிய தருணங்களை அவ்வப்போது நினைத்து பார்த்துக்கொள்வாள் ரோஹிணி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.