(Reading time: 37 - 74 minutes)

ன்னடி.. காலேஜ்ல எப்படி வாயாடி மாதிரி பேசுவ.. நீ பண்ணாத குறும்பா... ஒரு பையனை ரொம்ப சீண்டுனியே... அந்த பையனை தான் சொல்லுறேன்” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது ராஜேஷ் வந்துவிட்டான்.

“ஹாய்...” என்று தானே பேச்சினூடு நுழைந்தான். அவனை கண்டதும் தடுமாற்றத்தில் இருந்து வெளியே வந்தவள் “இது என்னோட கணவர்...”

“ஒ.. சூப்பர்... வாழ்த்துக்கள்” என்றுரைத்தவள்... “எனக்கு இன்போர்ம் பண்ணனும்னு கூட தோணலையா உனக்கு...” என்று அவளை செல்லமாக கடிந்துக்கொண்டாள். உடனே அவள் கணவனை பார்க்க... அவன் கையில் இருந்த உடையை அவளிடம் கொடுத்து, “நீ போய் இதை பில் போடும்மா...” என்று அனுப்பிவைத்தான்.

என்னவென்று புரியாமல் அந்த தோழி அவனை பார்க்க துணைவி சென்றதும் துவங்கினான். “தப்பா நினைச்சுக்காதீங்க... ஒரு ரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல ரோஹிணிக்கு எல்லாமே மறந்து போச்சு எல்லாரையுமே மறந்துட்டாள் அம்மா அப்பாவை உட்பட... அந்த அதிர்ச்சியில் இருந்து அவளை மீடேடுத்து அவளை இயல்புக்கு மாற்ற அத்தை மாமாக்கு பெரும் பாடாக இருந்தது. எங்க திருமணம் நடந்து 1௦ மாதம் ஆச்சு... சோ அப்போதைக்கு யாரையுமே நியாபகத்துல இல்லை...”

“ட்ரீட்மென்ட்??”

“அதெல்லாம் ரெகுலரா போய்கிட்டு தான் இருக்கோம் ஆனால் இப்போதைக்கு எதுவும் நினைவில் வந்தது போல தெரியலை... கொஞ்ச மாதம் ஆகும்னு சொல்லிருக்காங்க டாக்டர்ஸ்...”

“ஓ...”

“அந்த ஊருலேயே இருந்த தோழிகளுக்கு அவங்க அம்மா அப்பா சொல்லிருப்பாங்க... ஆனால் நீங்க எல்லாரும் கோயம்புத்தூர்ல தானே படுச்சீங்க, உங்க எல்லாரோட நம்பெர்ஸ விபத்துல தொலைச்சிட்டாள் அதான் யாராலையும் சொல்ல முடியலை.. கண்டிப்பா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க... காண்டக்ட் நம்பர் நோட் பண்ணிக்கோங்க...” என்று ரோஹிணியின் அழைப்பு எண்ணை தோழியிடம் கொடுத்தபடி ரோஹிணி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர்.

அனைத்தும் இப்போது புரிந்து போக எதையும் பெரிது படுத்தாமல் ரோஹிணியிடம் பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்றாள் தோழி. அவளிடம் பேசிவிட்டு வீட்டை நோக்கி பயணத்தை துவங்கியவளுக்கு யோசனையாகவே இருந்தது. எப்படிப்பட்ட இனிமையான வாழ்க்கையை பற்றி மறந்து போயிருக்கேன். கல்லூரியில் விடுதியில் தங்கி படித்திருக்கிறேன் ஆனால் எதுவும் நியாபகம் இல்லை.. இதனால் தான் எங்கு கல்லூரி மாணவர்கள் சுற்றி திரிந்து ஆட்டம் போடுவதை பார்த்தாலும் ஏக்கமாக இருக்கும் ரோஹிணிக்கு. சுமையே தெரியாமல் ஊரை சுற்றும் பருவத்தை எல்லாம் மறந்துவிட்டோமே.. அதுவும் மிருதுளா யாரோ ஒருவனை பற்றி கூறினாளே... அது என்னனு தெரியலையே அடுத்த முறை கேட்கணும்.. எப்படியும் விளையாட்டாய் தான் கூறி இருப்பாள் என்று மனதிற்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

“என்ன யோசனை மேடம்...”

அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

“சரி சரி.. கஷ்ட்டமாக தான் இருக்கும்.. விடு ரோஹிணி.. நடந்ததை நினைச்சு என்ன பண்றது...” அவனோ எப்போதும் தோன்றும் நினைவு தான் போல என்ற கணக்கில் ஆறுதல் கூறினான்.

“சரிதான்... இருந்தாலும் அவள் சொல்றாள்... நான் சரியான வாயாடியாம் பேசிகிட்டே இருப்பேனாம்...” அவள் கூறியதை கேட்டுவிட்டு மேலும் கீழும் பார்த்தவன் “இப்போ மட்டும் கம்மியாவா பேசுற...”

“இல்லப்பா, வீட்டுல எல்லாரும் என்னை ரொம்ப அமைதின்னு சொல்றாங்க. ஆனால் வெளியே பார்த்த சில பேர் என்னை வாயாடின்னு சொல்றாங்க.. இவள் ரொம்ப நெருக்கமாக இருந்திருப்பாள் போல... அவள் பேசுனதிலேயே தெரியுது” என்று மனதில் பட்டதை கூறினாள்.

“இதுல இருந்து என்ன தெரியுது???”

“என்ன???”

“ம்ம்ம்ம்.. நீ சரியான நடிகைன்னு தெரியுது...” என்று கிண்டல் அடித்து சிரித்தான்.

“போங்க” என்று திரும்பி நடக்க துவங்கிவிட்டாள்... “சரி சரி விடு வேற என்ன சொன்னாள் உன்னோட ப்ரண்ட்” என்று கொஞ்சம் ஆர்வமாகவே கேட்டான். அவளது ஆர்வம் தான் அவனிடத்திலும் இருக்கிறது என்று நினைத்து... “வேற எதுவும் நாங்க பெருசா பேசிக்கவே இல்லை... ஆனால்...”

“ஆனால்...”

“நான் ஏதோ ஒரு பையனை ரொம்ப சீண்டுவேணாம்... அவனையும் என்னையும் சேர்த்து வச்சு கிண்டல் செய்வாங்களாம்” என்று கூறவும்... அவனது கண்ணில் ஒரு ஆர்வம் துளிர்விடுவது போல தோன்றியது.. “அப்பறம்.. என்ன சீண்டுவ யாருன்னு சொன்னாளா...”

அவன் கேட்பதை புரிந்துகொள்ளாமல் “நீ ஏன் அதை இவ்வளவு ஆர்வமாக கேட்குற... சந்தேக படுரியா?? லவ் பண்ணிருப்பேன்னு” என்று கொஞ்சம் கடுப்பாகவே கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.