“இவ்வளவா பேசுனேன்...”
“ஆமா இவ்வளவு பேசுனியே எந்த இயர், எந்த department னு சொன்னியா??” என்று லேசாக தலையில் கொட்டுவது போல செய்தான்.
“அட ஆமால... என்ன தேடிக்கிட்டு வந்தீங்களா???”
“ம்ம்ம்ம் ஒரு வாரம் கலுச்சு வந்தேன்.. உன் காலேஜ்ல ஊரு பட்ட department இருக்கு எங்கன்னு போய் எப்படி தேடுறது. கடைசியில என்னையும் திரும்பி வேலைக்கு கூப்பிட்டுட்டாங்க அதுனால திரும்பி கிளம்பிட்டேன்.”
“அப்பறம்???”
“அப்பறம் என்ன?? நீ அப்போ கடைசி வர்ஷம் போல... அடுத்து 1 வர்ஷம் கலுச்சு தான் எனக்கு இடைவெளி கெடச்சுது, வரலாம்னு பார்த்தேன் அப்பறம் காலேஜ் வாசல்லையா வந்து நிக்க முடியும். என்ன பண்றதுன்னே தெரியல... மின்னல் வேகத்துல வந்து மின்னல் வேகத்துல காணாம போயிட்ட. நீ கடைசி வர்ஷம் படிச்சிருக்கனும்ன்ற யூகமே உன்ன வீட்ல பார்த்து அங்கிள் எப்போ காலேஜ் முடுச்சன்னு சொன்னப்ப தான் எண்ணி பார்த்துக்கிட்டேன்.”
“நல்லா போச்சு போங்க... ச்சே.. அப்போவே உங்கள லவ் பண்ணேனா..”
“நீ நல்லா தான் லவ் பண்ண அப்போ கூட செம ஸ்பீட் தான்... எனக்கு தான் லவ் பண்ணவே முடியலை... ஹ்ம்ம்” என்று புலம்பினான்.
“ஓ... அதுனால தான் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிருக்கலாம்ன்னு சொல்லும் போதெல்லாம் நீ அப்படி பார்ப்பியா???” என்று ரொம்ப நேரம் கழித்து புரிந்துக்கொண்டாள்.
“ஹாப்படா இப்போதான் லைட் எரியுதுப்பா” என்று பதிலுக்கு கிண்டல் செய்துக்கொண்டிருந்தான்.
“சரி சரி போதும்.. அப்பறம் என்னாச்சு???”
“அப்பறம் என்ன? வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க வேண்டாம் வேண்டாம்ன்னு இன்னொரு வருடம் ஓட்டினேன்.. உன் வீடியோ மூலம் போட்டோ எடுத்து அதை வச்சு தேடுறது எவ்வளவு கரெக்ட்னு தெரியலை. அந்த வர்ஷம் தான் கரெக்டா வீட்டுக்கு வந்திருந்தேன், அங்கிள் ஓட அறுவதாம் கல்யாணத்துக்கும் வர முடிஞ்சுது. எதார்த்தமா வந்தாள் நீ அங்க நிக்குற... சரி எதாவது பேசுவன்னு பார்த்தாள், என்னை முன்னாடி தெரியாத மாதிரி போன, அப்பறம் அம்மா அப்பாட்ட பேசி உங்க வீட்ல பேச சொன்ன அப்பறம் தான் தெரியும் உனக்கு அச்சிடென்ட் ஆனது” என்று அவளை தன் அரவணைப்பில் வைத்துக்கொண்டு பேசினான்.
அவன் பேசுவதை பொறுமையாக கேட்டவள், திடிரென்று நியாபகம் வந்தவள். “ஏய் இதை தான் நீ நைட் நைட் வச்சு பார்த்தியா???”
“பார்த்துட்டியா?? எங்க surprise போயிடுமோன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா???”
“அது சரி... நார்மலா சொல்லிருந்தால் கூட பரவால்லை.. ஒரு பொண்ணை introduce பண்ணனும் அது இதுன்னு சொல்லி எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா???”
“அதான் உன் முகத்துலேயே தெரிஞ்சுதே... எவ்வளவு பிளான் பண்ணி பண்ணிருக்கேன் தெரியுமா... சும்மா சொல்லிருந்தால் இவ்வளவு surprise இருக்குமா??”
“ஆமா ஆமா shocking surprise... ஆமா யாரோ வந்து கதவை தட்டினது போல இருந்துதே...”
“அது... வந்து...”
“இன்னும் என்ன இருக்கு” என்று கண்களை பெரிது படுத்தி கேட்டாள்.
“அப்படி முழிக்காதடி... கண்ணை பாரு... எழுந்து வா..” என்றதும் ஆர்வம் தாங்காமல் அவள் பின்னால் சென்றாள். பின்னால் இருந்த பலகணியை பூட்டு போட்டு வைத்திருந்தான் அது எதற்காக என்று யோசித்துக்கொண்டே வந்தவள் அங்கு செய்ய பட்டிருந்த அலங்காரத்தில் அசந்துப் போனாள். சின்ன சின்ன மின்விளக்குகள் போடப்பட்டிருந்தது அதைவிட நடுவில் மாட்ட பட்டிருந்த ஊஞ்சல் தான் அவள் கண்ணை பறித்தது. மர ஊஞ்சலை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து அவள் அமர்வதற்காக காத்திருந்தது. அவள் ஆர்வமாக ஓடி சென்று பார்க்க... “இதெல்லாம் இப்போவா பண்ணினாங்க..”
“ம்ம்ம்ம்.. அலங்காரம் பண்ணியே எடுத்துட்டு வர சொன்னேன்...”
“தேங்க்ஸ்...” என்று அவனை கட்டிக்கொண்டாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்... மெதுவாக ஒரு மோதிரத்தை அவளிடம் நீட்டி “ஐ லவ் யூ ரோனி” என்றான்.. அவனது பேச்சில் எப்போதும் போல மயங்கியவள் அவனது அதே மின்னல் வெட்டும் காதலை கண்டு இன்னும் ஈர்த்துப் போனாள்.
மோதிரத்தை விரல்களில் மாட்டிகொள்ளும் முன்பு அவனை நோக்கியவள், “நான் இப்போ உன்னுடைய காதலியா மனைவியா??”
“இரண்டும் உன்னுள் அடக்கம் என்னை போல...” என்று கூறிவிட்டு சிரித்தான்.
This is entry #129 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா
எழுத்தாளர் - ப்ரீத்தீ
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.