(Reading time: 37 - 74 minutes)

ன்னை முதல்ல பார்க்கும் போது எப்படி பார்த்த தெரியுமா??? எப்பா பொண்ணுங்களுக்கு தான் முட்ட கண்ணுன்னு சொல்லுவாங்க ஆனால் உனக்கு அன்னைக்கு நிஜமாவே முட்ட கண்ணு தான்” என்று சொல்லி சொல்லி சிரித்துக்கொள்வாள்.

“ஹே அதெல்லாம் ஒண்ணுமில்ல... எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது அதுனால அப்படி பார்த்தேன்”.

“ஆமா ஆமா நீயும் 1௦ மாசமா என்ன இப்படி சொல்லி தான் ஏமாத்துற.. ஒழுங்கா ஒத்துக்கோ என்ன பார்த்த உடனே சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டன்னு” என்று கூறி சிரித்தாள். அவள் சிரிப்பதையே பார்த்தவன் மெல்ல நினைவுகளில் நொடியில் வெகு தூரம் சென்றுவிட்டு வந்தான்.

“அப்படி என்னதான் யோசிப்பியோ தெரியலை ராஜு...”

“ம்ம்ம்ம் எல்லாம் உன்னை பத்தி தான் சாப்புடு...” என்று செல்லமாக கடிந்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பவளை உணவருந்த செய்வான்.

“ம்ம்ம்ம்... ராஜு சொல்ல மறந்துட்டேன் பாரேன்.. அறம் விதைப்போம் பௌண்டேஷன்ல இருந்து ஒரு இன்வைட் வந்துருக்கு. அவங்க நடத்தின சிறந்த கதை 2௦௦௦ கருத்துகணிப்பில என்னுடைய 2௦வது கதை “Layers Of Emotions”  முதல் இடத்தை பிடித்திருக்காம், அதுக்காக ஒரு விருது தருவதாய் சொல்றாங்க. மறக்காமல் இந்த சண்டே போகணும் எதுவும் அப்போயன்ட்மென்ட் வச்சிக்காதப்பா”.

“அச்சோ என்னம்மா இப்போ சொல்ற...”

அவன் இப்படி சொல்லவுமே அவன் ஏதோ பயணத்தில் அந்நேரம் பார்த்து கிளம்ப போகிறான் என்று வருந்த துவங்கிவிட்டாள்... இருந்தும் அவன் மனம் வருந்த கூடாதே... “அது.. திடிர்னு தான் தெரிஞ்சுது... உனக்கு எதாவது பிளான் இருந்தால் போயிட்டு வா நான் பார்த்துக்குறேன்...”

அவளது முகம் சுருங்குவதை செல்லமாக ரசித்துவிட்டு “ஹ்ம்ம்ம்... என்ன பண்றது... அன்னைக்குன்னு பார்த்து எனக்கும் அறம் விதைப்போம் பௌண்டேஷன்ல ஒரு வேலை என் மனைவி விருது வாங்குறதை பார்க்கப் போகணும்” என்று முடிக்கவும் சட்டென முகம் மலர்ந்துவிட்டது அவளுக்கு. அவளது இந்த மாற்றத்தை பார்ப்பதற்காகவே கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது குறும்பை ரசித்தவண்ணம் “ஏய்... போடா...” என்று மெல்லமாக அடித்தாள். ஒருவாறு போட்டி போட்டு பேசித் சிரித்து சாப்பிட்டு முடித்து தங்கள் வேலைக்கு கிளம்பிவிட்டனர். திருமணம் ஆன நாளில் இருந்தே வாழ்க்கை சுவையாக தான் சென்றது. ரோஹிணியின் வாழ்க்கையில் இடையில் நடந்த நினைவுகளை இந்த வாழ்க்கை மொத்தமாக புரட்டிப்போட்டது. இதையெல்லாம் யோசித்துக்கொண்டே தங்கள் வேலைக்கு சென்ற ரோஹிணிக்கு பழைய கால நினைவு நிழலாடியது.

ன்று மிக மிக பரபரப்பாக சுற்றிய தினம் தந்தை தாயின் சஷ்டியப்தபூர்த்தி (அறுவதாம் கல்யாணம்) தாவணி போன்ற உடியில் அழகாக உளற பின்னி வளையல், கொலுசின் கல கல ஓசைக்கு நடுவில் சிட்டுகுருவியாய் பறந்துக்கொண்டு இருந்தாள். கூட்டம் அலைமோதியது அவர்கள் வீட்டில், சொந்தங்கள், நண்பர்கள் என்று அனைவரும் வந்திருந்தனர் அந்த நிகழ்ச்சியை கொண்டாட. அவர்களுள் ஒருவர் தான் ராஜேஷின் குடும்பத்தார். தந்தையின் தோழரின் மூலம் அறிமுகம் ஆகி இப்போது தன் தந்தையின் நெருங்கிய தோழமையில் இருந்ததால் அவரே வந்து பத்திரிக்கை அளித்து அழைத்த பின்னும் போகாமல் இருக்க மனமில்லை ராஜேஷிற்கு. அதனால் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

இன்னமும் ரோஹிணிக்கு நியாபகம் இருந்தது, அவர்களை அழைப்பதற்காக வாசல் சென்றவளை கண்ணெடுக்காமல் பார்த்த ராஜேஷின் முகம். அவ்வளவா அழகாக இருக்கோம் விட்டால் கல்யாணமே பண்ணிக்க போகிற மாதிரி இப்படி பார்க்குறான் என்று தனக்குள்ளேயே நினைத்து சிரித்துக்கொண்டாள். அவள் விளையாட்டாக நினைத்தது நிஜமாகவே நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றும் அவள் சந்தேகமாக கேட்பது தான் “அதெப்படி ராஜு என்னை அத்தனை தடவை ஆன்டியும் அங்கிளும் பார்த்திருக்காங்க அப்போவெல்லாம் தோணாமல் நீ வந்து பார்த்திட்டு போனதுக்கு அப்பறம் பொண்ணு கேட்குராங்கன்னா என்ன அர்த்தம்??”

“என்ன அர்த்தம்??” என்று அதே மாறாத புன்னகையோடு பதிலுக்கு கேட்பான் ராஜேஷ்.

“நீ என்னை பிடுச்சிருக்குன்னு சொல்லி பொண்ணு கேட்க சொல்லிருக்க அப்படி தானே...” என்று அவனை மீண்டும் சீண்டுவாள்.

“யாரு நானா நீ தான் என் பின்னாடியே சுத்தின...”

“என்னது நான் சுத்தினேனா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.