(Reading time: 37 - 74 minutes)

ன்னை...” என்று கையில் இருந்த துணியை வைத்து மெல்ல அடித்துவிட்டு, “நிஜமாவே நீ என்னோட பெஸ்ட் ப்ரிண்டுடா... இந்த கரீயர் உன்னாலதானே ஆரம்பிச்சேன் எனக்குன்னு ஒரு தனித்திறமை இருக்குன்னு நீ தானே காட்டின...” என்று மனதை வருடும் நினைவுகளோடு அவள் பேச, மெல்ல சிறுகுழந்தையின் சிகையை களைப்பது போல அவள் தலையில் செய்துவிட்டு “இன்னைக்கு செண்டிமெண்ட் சீரியல் போதும் பார்வையாளர்கள் கோச்சுக்க போறாங்க” என்று எப்போதும் போல் அவனது பாணியில் முடித்துவைத்தான்.

பேசியபடியே வேலைகளை முடித்துவிட்டு படுக்க சென்றுவிட்டனர். அவள் அயர்ந்து தூங்கிவிட அவள் தூங்குவதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் மெல்ல சத்தம் எழுப்பாமல் சென்று பலகணியில் அமர்ந்துக்கொண்டு தனது மடிகணினியை திறந்தான். ஏதேதோ கைகள் வேலை செய்ய சிறிது நேரத்தில் அதோடு கேட்பொறி(heaset) அணிவித்துவிட்டு தன் வேலையை துவங்கினான். திரையில் கைபேசியின் அழைப்புமணி கேட்டு பின்பு ஒரு பெண் குரல் கேட்டது ஹாய்.... என்று... அவளின் முகத்தையும் அவள் முகம் நிறைந்த சிரிப்பையும் பார்த்தவனுக்கு அவன் முகத்திலும் ப்ரதிபலித்தது. அவள் பேசுவதை பேசாமல் கவனித்துக்கொண்டிருந்தான்... எப்போதாவது அவள் சத்தமாக பேசுவது போல உணர்ந்தால் உஸ்ஸ் என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென ஒலியை குறைத்துக்கொண்டு கவனிப்பான். இது அவனுக்கு புதிய பழக்கம் அல்ல.. திருமணம் நடந்த பிறகு நிறுத்தபட்டிருந்த தொடர்பு மீண்டும் துவங்கி இருந்தான். என்ன தடுத்தும் படுக்கும் முன் ஒரு முறையேனும் அவள் குரலை கண்ணில் மிதக்கும் சிரிப்போடு கேட்காவிட்டால் தூக்கம் தழுவுவதில்லை.

இப்படி இவன் ரசித்து பார்த்துக்கொண்டிருந்ததை தண்ணீர் அருந்த வெளியே வந்த ரோஹிணி பார்த்துவிட்டாள். முதலில் ஏதோ திரைப்படம் பார்க்கிறான் போல என்று நினைத்தாள். ஆனால் ஏதோ பெண் மட்டும் அந்த திரையில் தெரிவது போல இருந்தது அதுவும் அவன் கொஞ்சம் மறைத்து வைத்து பார்ப்பதால் அவளால் முகத்தையும் பார்க்க முடியவில்லை. ஏனோ சந்தேகம் பட மனம் வரவில்லை என்றாலும் லேசாக நெருடலாகவே இருந்தது அவளுக்கு. இருப்பினும் தறிகெட்டு ஓடும் மனதினை திட்டிவிட்டு சந்தேகமே உறவுகளின் பெரிய துரோகி என்று புத்திமதி கூறிவிட்டு உள்ளே படுக்க சென்றுவிட்டாள் நம்பிக்கையோடு.

குட் மோர்னிங் மேடம்...” என்று கையில் கோப்பையோடு அவள் அருகில் வந்து அமர்ந்தான். மெல்ல திறக்க முடியாத கதவினை திறப்பதுப் போல கண்களை மெல்ல மெல்ல திறந்து அவனை ஆசையாய் பார்த்து மலர்ந்துவிட்டு எழுந்து அமர்ந்துக்கொண்டாள். “எனக்கு அப்பறம் தான் படுக்குற அதுக்குள்ள எப்படிப்பா எழுந்திரிக்குற???”

“அதெல்லாம் ஒரு திறமை ரோனி... உனக்கெல்லாம் அது வராது...”

“ம்ம்ம்ம்... அந்த திறமை எனக்கு வேண்டாப்பா... நல்லா... தூங்கனும் அதுக்கு தானே வாழ்க்கை” என்று அதையே தனது கடமை போல பேசினாள்.

“அது சரி... இங்க எல்லாம் சின்ன குழந்தை மாதிரி பேசு.. ஆனால் கதையில எல்லாம் நல்லா தத்துவமா பேசு...”

“அது கனவு வாழ்க்கை... இது நிஜ வாழ்க்கை...” என்று வடிவேலு பாணியில் சொல்லிவிட்டு தொடர்ந்தாள். “ஆமா ராஜு நேத்து எப்போ தூங்கின... எதாவது படம் பார்த்திட்டு இருந்தியா...

அவன் முகத்தில் சட்டென ஒரு மாறுதல் ஏற்பட்டுவிட்டு அய்யோ கண்டுபிடுச்சிடுவாளோ என்று நினைத்துக்கொண்டு “ஏன்... நான் நீ படுத்த கொஞ்ச நேரத்திலேயே படுத்துட்டேனே... உன் பக்கத்துலையே தான் புக் படுச்சுட்டு இருந்தேன்” என்று கொஞ்சம் உளறிக்கொட்டினான். ஏனோ ஒரு புருவ சுளிப்பினிடையே அதை பார்த்தவள் “அதுக்கு ஏன் இப்படி தடுமாருற சும்மா தான் கேட்டேன்” என்றுவிட்டு எழுந்து காலை கடமைகளை செய்ய சென்றுவிட்டாள். அன்று சனிக்கிழமை என்பதால் வீட்டிலேயே வித விதமாக சமைத்து சாப்பிட்டுவிட்டு பொழுதை கடத்துவதற்காக ஊரை சுற்ற கிளம்பினர்.

எப்போதும் போல ஒரு பெரிய மாலில் சென்று பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றையும் சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். “ஹே ரோஹிணி...” என்று தூரத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. யார் என்று புரியாமல் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அந்த நபரை தன்னை தான் அழைக்குறாரா என்பது போல வினவினாள்.

“என்னடி இப்படி பார்க்குற.. என்னை நியாபகம் இல்லையா...”

மனதிலோ ஐயோ... இந்த மாதத்திலேயே 3 வது நபர்... இவங்களை எப்படி சமாளிப்பது, இந்த ராஜு வேற ட்ரயல் ரூம்ல இருக்கான் இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு புரியாமல் திரு திருவென முழிக்க துவங்கிவிட்டாள்

“ஏய் என்ன இப்படி திருதிருன்னு முழிக்குற, காலேஜ்ல ஒன்னா படுச்சோமே அதுக்குள்ள மறந்துட்டியா? மிருதுளா நியாபகம் இல்ல...?!” கழுத்தில் தொங்கும் தாலியை கண்டுக்கொண்டவள் “திருமணம் ஆகிருச்சா...” என்று ஆச்சர்யமாக கேட்டாள்.

“அது அஹ... ஆகிருச்சு” என்று தலையை ஆட்டினாள்.

“கூப்பிடவே இல்லை... யார்கூட??? நாங்க ஒரு பையனை வச்சு கிண்டல் பண்ணுவோமே அவனையா?” என்று தோழி ஆர்வமாக கேட்கவும் லேசாக மனதில் திகில் இறங்குவது போல இருந்தது. “எந்த பையன்???” என்று எழுத்துக்களை எண்ணி எண்ணி பேசுவது போல அவள் வினவவும் தோழியை விநோதமாக பார்த்தாள் மிருதுளா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.