(Reading time: 12 - 23 minutes)

''து தெரியாதும்மா. நான்தான் கதவை திறந்தேன். ஆள் யாரும் இல்லை. ஆனா  இது கிடந்துது. போட்டுப் பார்த்தா டிஜிட்டல் லவ் லெட்டரா இருக்கு"

"அப்பா உங்களுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். நான் எதையுமே மறைக்க மாட்டேன். இந்த ராகேஷ் கொஞ்சநாளாவே என் பின்னால சுத்துறது தெரியும். ஆனா இந்த அளவு போவான்னு நினைக்கலை''

''அந்த கர்மத்தை ஆஃப் பண்ணி தொலைங்க.. இப்போ போட்டோ போட்டாவா காட்டறாங்க. இன்னும் போனா டூயட்டே பாடி ஆடினாலும் ஆடுவாங்க''

"அம்மா அசிங்கமா பேசாதே. நா ஒண்ணும் போட்டோ குடுக்கலை. அவனா எடுத்திருக்கணும். முதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்க லவ் பண்றது கொலை குத்தமும் இல்லை.. அப்படியே  பண்றதா இருந்தா நான் மறைக்கிறவளும் இல்லை"

"அடி செருப்பாலே லவ்வாமே லவ்.. ''

''சுஜாதா சும்மா இரு.. நம்ம பொண்ணை நாமளே சந்தேகப்படக்கூடாது. அவதான் காதல் கீதல் எதுவுமே இல்லேங்கிறாளே..''

''உங்க நம்பிக்கைக்கு தேங்க்ஸ்ப்பா. ஆனா நீங்களும் காதல்னா தப்புங்கிற மாதிரி பேசுறீங்களே? ''

''காதல் தப்புன்னு சொல்லலை. ஆனா 'வந்திருக்கிறது சரியான காதலா?  தப்பான காதலா?'-னு ஜட்ஜ் பண்றதுக்கும் ஒரு வயசு, பக்குவம் வேணுமே? 'ரோட்டையும் ரூட்டையும் சரியா ஜட்ஜ் பண்ணி ஒழுங்கா  ஓட்டுவே'னு உன்னை நம்பி  டூ வீலர் டிரைவிங் லைசன்ஸ் தர்றதுக்கே மினிமம் பதினெட்டு வயசு கேட்கறாங்க. அப்போ ஆயுசுபூரா ஓட்டப்போற லைஃப் வண்டிக்கு ஆதாரமான காதலை ஜட்ஜ் பண்றதுக்கும் வயசு பக்குவம்னு பல விஷயம் தேவைப்படுமே. அதை பெத்தவங்க நாங்கதானே பார்த்து பார்த்து சொல்லணும்? "

"இப்ப என்ன சொல்றீங்க?  காதலிக்காதேன்னு சொல்ல வர்றீங்களா? "

"நிச்சயமா இல்லை. ஆசைக்கும் ஆஸ்திக்குமா எனக்கு நீ மட்டும்தான் இருக்கிறே. உன் விருப்பு வெறுப்புகள்ல உனக்கு முழுசுதந்திரமும் குடுக்கத் தயாரா இருக்கிறேன். ஆனா கடிவாளம் என் கையில இருக்கும். இதை அதிகாரமா சொல்லலை.. அக்கறையில சொல்றேன். உன்னோட காதல் எனக்கு சரியாப் படலேன்னா ஒருநாளும்  சம்மதிக்க மாட்டேன்னு சொல்றேன்.."

"ஒருவேளை இந்த டிஜிட்டல் லவ்வர்பாய் ராகேஷ் மேலே எனக்கு காதல் வந்தா?"

"அப்படி லவ் வந்தா 'அவன் நல்லவனா கெட்டவனா? அவன் ஃபேமிலி நமக்கு செட்டாகுமா? இல்லையா?'ன்னு சகலத்தையும் விசாரிச்சுப் பார்த்து, எனக்கு திருப்தின்னாதான் நான் 'ஓ கே' சொல்வேன்"

"அப்பா.."

"அப்பா நியாயமாத்தான் நடந்துக்குவார், எந்த தந்திரமும் பண்ணமாட்டார்னு  நீ நம்புறியா இல்லையா? "

"முழுசா நம்புறேன்பா. ஆனா எதனாலேயோ உங்களுக்கு ராகேஷை பிடிக்காம போச்சுன்னா..?"

"அடுத்த நிமிஷமே நீ அவனை மறந்துட்டு நாங்க சொல்ற மாப்பிள்ளை பத்தி யோசிக்க ஆரம்பிக்கணும்.."

"தாராளமா. ஆனா அந்த மாப்பிள்ளை, 'எனக்கு மேட்ச் ஆவாரா? எனக்கும் அவருக்கும் செட் ஆகுமா?'ன்னு நானும் சகலத்தையும் விசாரிச்சுப் பார்த்து எனக்கு திருப்தின்னாதான் ஓ கே சொல்வேன்"

"மித்ரா "

"உங்க பொண்ணு கரெக்டாதான் நடந்துப்பா.. எந்த தந்திரமும் பண்ண மாட்டாள்னு என்னை நீங்க நம்புறீங்களாப்பா? "

"நிச்சயமா நம்புறேன்."

"நல்லா இருக்குங்க ரொம்ப நல்லா இருக்கு. இப்படியே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மாப்பிள்ளை பார்த்து டிக் அடிச்சுட்டு போனீங்கன்னா பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது மாதிரிதான்"

அலறி அரற்றியது அம்மாதான்!

ன்றரைமாதம் முன்னால் நடந்ததை நினைத்துக்கொண்டே ஸ்கூட்டி ஓட்டியதில், வீடு வந்ததே தெரியவில்லை. அம்மா வாசலிலேயே வழிமறித்தாள்.

"என்னடி இது.. உன் உயரத்தை விட பெரிய சைஸ் கவரா இருக்கு?"

"இன்னைக்கு காதலர் தினமாச்சே அதான் என் கிளாஸ்மேட் கார்த்தி எனக்கு 'ஐ லவ் யூ' கிரீட்டிங் கார்டு குடுத்தான்.. பாரு ஜோரா இருக்குது"

"ஏற்கனவே ஒருத்தன் வீடியோ அனுப்பி குடிமுழுகிப் போச்சு. இப்ப இந்த இழவு கிரீட்டிங்ஸா? டீன் ஏஜ் பொண்ணுங்கன்னா எப்படி வேணும்னா கூத்தடிப்பீங்களா?”

"பெத்த பொண்ணு மேலே அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கணும். பெத்தவங்களோட அந்த நம்பிக்கைதாம்மா டீன் ஏஜ் பொண்ணுங்க எங்களுக்குப் பெரிய கவசம். அப்பாவுக்கும் எனக்கும் உள்ள அண்டர்ஸ்டாண்டிங்கே அதுதானேம்மா?"

"அது இப்ப ஆட்டம் கண்டுரும் போல இருக்கும்மா'' - குரலைத் தொடர்ந்து அப்பாவே அறையிலிருந்து வந்தார்.

"அப்பா என்ன சொல்றீங்க? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.