(Reading time: 10 - 19 minutes)

நீ அன்னைக்கு கல்ச்சுரல்ஸ் டேயில வாசிச்ச கவிதையும் , பாடின பாட்டும் ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கு ஒரு காதல் கவிதை எழுதி தருவியா " என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“காதல் கவிதையா,, எதுக்கு..."

"ஒருத்தர்க்கு கிஃப்ட் கொடுக்கிறதுக்காகத்தான். நீ யார்கிட்டயும் சொல்லிடாத. நான் ஒருத்தர லவ் பண்றேன். அவருக்கு நாளைக்கு பிறந்த நாள். அவங்களுக்கு கொடுக்கிறதுக்காகத்தான் கேட்கிறேன்."

"நான் விழிப்புணர்வு, சமுதாய கவிதை எழுதான் பழக்கம்..காதல் கவிதை எழுதி பழக்கம் இல்லை..” என்று சொன்னேன்.

“நீ டிரை பண்ணு. நாளைக்கு மதியானத்துக்குள்ள எனக்கு தந்தா போதும். “

“நான் நாளைக்கு க்ளாஸ்க்கு பொயிடுவேன் கெப்ஸி..”

“பரவாயில்ல .நான் உன் க்ளாஸ் ரூம்ல வந்து வாங்கிக்குறேன்.”

“நீ எப்படி நாளைக்கு வெளிய போவ..” என்று நான் கேட்க

“மூணு மணிக்கு காலேஜ் முடிஞ்சதும் கூட்டத்தோட கூட்டமாய் வெளிய போயிட்டு வந்திடுவேன்.”

“கெப்சி அவங்க என்ன பண்றாங்க..படிச்சிட்டிருக்காங்களா...நல்லவங்களா?”

“ ரொம்ப நல்லவங்க. என்ன ஊட்டிகெல்லாம் கூட்டிட்டு போயிருக்காங்க..”

“என்னது ஊட்டிக்கா...உங்க வீட்டுல தெரியுமா?”

“வீட்டுல எல்லாம் தெரியாது..காலேஜ் டூருனு சொல்லிட்டுதான் போயிருக்கேன். ..”

“அப்போ நீ அவங்க கூட டூர் போகுறப்ப உன்ன யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா கெப்ஸி..”

:நான் அவங்க கூட போகுறப்ப கம்மல் , வளையல் எல்லாம் களத்தி வச்சுட்டுதான் போவேன். அப்போ என்னை பார்க்குறப்ப பெந்தகோஸ்தே பொண்ணு மாதிரி தெரியுமா..அப்ப மத்தவங்களும் எங்களுக்கு கல்யாணம் ஆனவங்கனு தானே நினைப்பாங்க...என்று சொன்னாள்.

எனக்கு அதை கேட்டதும் நெஞ்சம் பக்கென்று இருந்தது. நான் படிக்க நிறைய இருப்பதாக சொல்லிவிட்டு நாளைக்கு கவிதையை தருவதாக சொல்லிவிட்டேன். அவளும் சரி என்று போய்விட்டாள்.

மறு நாள் உணவு நேர இடைவெளியில் என் வகுப்பறைக்கு வந்து கவிதை வாங்க வந்தாள். நான் நிஜமாகவே அதை வேண்டுமென்றே மறந்துவிட்டேன். அவளிடம் மறந்து விட்டதாக சொல்லிவிட்டேன். அவளும் கோபமாகவோ சோகமாகவோ எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.

என்னோடு உணவருந்திக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தி "அந்த கெப்ஸி எதுக்கு வந்தாள் என்று என்னிடம் கேட்டாள். நான் "ஒரு கவிதை எழுதி கேட்டாள் .. நான் மறந்திட்டேன்" என்று சொன்னேன். அதற்கு அவள் "அவக்கூட எல்லாம் ரொம்ப பழகாத. நாங்க வர்ற பஸ்ல தான் அவளும் வருவாள். அந்த பஸ் டிரைவரும் இவளும் லவ் பண்றாங்க. ஆனா அந்த டிரைவருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க..அந்த டிரைவர் நல்ல ஆளு இல்ல.” என்று சொன்னாள். எனக்கோ அதிர்ச்சியாகிவிட்டது... நான் ஒன்றுமே சொல்லவில்லை...

மாலையில் சிற்றுண்டி அருந்திவிட்டு என் அறைக்கு போகிற வழியில் கெப்ஸி வந்தாள்..நான் அவளை பார்த்து உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். என்று அவளை கூப்பிட்டு போய் " நீ லவ் பண்ற அந்த ஆளு நல்ல ஆளு இல்ல. ஏற்கனவே கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. என் கிளாஸ் பிள்ளைங்க சொன்னாங்கனு சொன்னேன். அவள் சர்வ சாதாரணமாக "அது எனக்கு தெரியும்.. அவரோட ஒய்ப்ய அவருக்கு பிடிக்காது..அவங்களுக்கு விவாகரத்து ஆய்டும். அதனால எனக்கு பிரச்சனை இல்ல " என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். எனக்கோ அப்ப இவள் தெரிந்து தான் காதலிக்கிறாள் என்று புரிந்தது. அன்று முழுவதும் என் மனதில் அவளை நினைத்து ஒரு போராட்டம். அய்யோ தெரிந்தே இப்படி இந்த பொண்ணு தப்பு பண்ணுதே என்று அவளுக்காக மனதில் ஒரு கவலை. நிறைய யோசித்து ஒரு முடிவு எடுத்து எங்களுடய பி.காம் வகுப்பு ஆசிரியரிடம் மறு நாள் சென்றேன். எங்க வகுப்பு ஆசிரியை மிகவும் நல்லவர்கள். ஒரு தாயை போல எங்களிடம் பழகுவார்கள்..நான் அவர்களிடம் முழு விசயத்தையும் அவர்களிடம் சொல்விட்டு கடைசியில் மட்டும் கொஞ்சமாக மாற்றி சொன்னேன். “ மேடம் அந்த பொண்ணுக்கு அந்த டிரைவருக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்குற விஷயம் தெரியவே இல்ல. நம்ம கிளாஸ் பிள்ளைகள் சொல்றப்ப தான் எனக்கு தெரியும். நீங்க எப்படியாவது அந்த பொண்ணோட அம்மா அப்பாகிட்ட இந்த விஷயத்த சொல்லி அவளை அந்த ஆளுகிட்டயிருந்து எப்படியாவது விலகிட சொல்லணும்.."என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். மனதில் அய்யோ ஒரு பொண்ண பத்தி மேடம் கிட்ட கோள் சொல்லிவிட்டு வந்து விட்டோமோ என்று ஒரு நிமிடம் தோன்றியது..ஆனால் மறு நிமிடம் அந்த பொண்ணு தப்பான வழியில போகக் கூடாது என்று ஒரு உறுதி வந்திருந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.