(Reading time: 11 - 22 minutes)

டுத்து வாரத்திலேயே அவள் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று அதில் அவள் தவறை ஒப்புக் கொண்டும் காரணம் சொல்லாததால், சிறைத்தண்டனையும் அபராதமாக ஒரு சிறு தொகையும் விதித்தனர். அப்போதும் அவள் சொல்லாமல் போக பல பல கேள்விகளுடன் நாளடைவில் தன் பணியில் மூழ்கி போனான் ரகு..!!

ன்று..

மிகவும் இருட்டி விட தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு அவளை அழைத்தான் ரகு!!

"மஹி நேரம் ஆச்சு அவங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க"

"ம்ம்ம்ம்ம்" சட்டென தவம் கலைந்ததை போல ஒரு முக பாவத்தில் அவள் திரும்பி நடந்தாள். வீடு வரையிலும் அவளை பார்த்துக் கொண்டே வந்தவன் வீட்டின் வெளியே அவன் அன்னை நிற்கவும், வேகமாய் அவர் அருகில் சென்றான்.

அவர் உள்ளே திரும்பி, "காலை அந்த ஆரத்தி எடுத்துட்டு வாம்மா" என்று கூற, கலை, அந்த வீட்டு வேலைக்காரி ஆராத்தியுடன் வந்தாள். முதன் முதலில் மஹிராவை பார்க்கும் பரபரப்பு அவளுள்.

மஹிராவிற்கு இது பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக் கொண்டாள்.அவளை உள்ளே அழைத்து சென்று அமரவைத்து ரகுவின் அம்மா,

"நல்ல இருக்கியா டா? இதற்கு பதில் உடலளவுல இல்லைடா மனசாலவுல வேணும்"

"ம்ம்ம்ம் நல்லா இருப்பேனான்னு சந்தேகத்துல தான் வந்திருக்கேன்மா" என்று அவள் பதில் கூற,

"சரி தூங்குங்க காலைல நேரத்திலே கோவிலுக்கு போகணும், ஆறரைக்கு முகூர்த்தம்" என்று பொதுவாய் கூறி விட்டு அவர் நகர அவசரமாய் வினவினாள் மஹிரா.

"அவங்க எங்க அத்தை, அவங்களுக்கு பிடிக்கணுமே?"

"அவங்க காலைல அங்க வந்துடுவாங்க.. உங்க வீட்டில தான் தங்கி இருக்காங்க"

"அப்பா அம்மா?"

"அவங்க கூட தான் இருக்காங்க.. உன் அப்பா அம்மாவுக்கு உன்மேல கொஞ்சம் வருத்தம்.. அதை விட ரொம்ப நொடிஞ்சு பொய் இருக்காங்க.. இப்போ தான் கொஞ்சம் சிரிச்சு பார்க்க முடியுது அவங்க முகத்தை"

"..."

"அவங்களும் உன் அப்பா அம்மா கூட தங்கணும்னு விருப்பப்பட்டதால் அங்கேயே இருக்க சொல்லிட்டேன்"

சிறிது ஏமாற்றம் தான் மஹிராவிற்கு.. இருந்தாலும் மறைத்து கொண்டாள். அவர் சென்றவுடன் ரகு அவள் முகம் பார்த்து கேட்டான்.

"உனக்கு இந்த கல்யாணத்துல..?" முடிக்க முடியாமல் அவன் நிறுத்த,

"அவங்களுக்கு சம்மதம்ன்னா எனக்கும் தான்" சொல்லிவிட்டு மேலே பேசாமல் எழுந்து சென்றாள் மஹிரா.

ன்று..

இடையிடையே மஹிராவை காணும் முயற்சிகளையும் கைவிடாமல் தனக்கு தெரிந்த வக்கீல் மூலம் அவளை வெளியில் கொண்டு வர முடியுமா? என்ற ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் ரகு. ஆனாலும் அவளே ஒப்புக்கொண்டதாலும் காரணம் தெரியாததாலும் ஒன்றும் முடியாமல் போனது.

இது பெரும் தலைவலியை கொடுக்க, கடைசி முயற்சியாக அவளிடம் பேசி பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு அவளை அணுகினான். சிறையில் வார்டனிடம் அனுமதி பெற்று அவளை பார்க்க அவன் சென்றால், அவளை பார்க்க இனி யாரும் வரவே கூடாது என்று முகத்தில் அறைந்தார் போல அவள் சொல்லஅதன் பின் ஒன்றும் செய்ய முடியாமல் போனது அவனால்.

தன் முயற்சிகளை கை விட்டுவிட்டு தன் வேலையை கவனிக்க தொடங்கி, அவ்வப்போது அவள் நினைப்பை மட்டும் தடுக்க  முடியாமல் காலம் தள்ளி கொண்டிருந்தான் ரகு!!

ஒரு சில மாதங்களுக்கு பின், மஹிராவிடம் இருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது..

சந்திக்கவும்

-மஹிரா

இவ்வளவு தான் அந்த கடிதம், உடனே அவளை காண சென்றான்.

ன்று..

அதிகாலை நாலு மணி.. பனியின் போர்வையை போர்த்தியபடி மலை முகடுகள் துயிலில் இருக்க.. ரகுவின் வீட்டு பரபரப்பை இருந்தது.

ரகுவின் அன்னையும், கலையும் வேடனியவற்றை எல்லாம் தயார் செய்து முடித்து, மஹிராவிற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். ரகுவின் வீட்டிற்கு அருகே கோவில் இருந்ததால், மஹிராவின் பெற்றோரும் 'அவர்களும்' இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் ரகுவின் வீட்டிற்கு வருவதாக ஏற்பாடு..!! அவர்களின் சம்மதம் வேண்டுமே..

மஹிராவிற்கு அலங்காரத்தில் ஈடுபாடே இல்லை என்றாலும் பொம்மை போல அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் அலங்காரம் முடியும் தருவாயில் வாசலில் ஹார்ன் ஒலி கேட்க, அவசரமாய் எழுந்து ஓடியவள். காரில் இருந்து இறங்கி வந்த 'அவர்களை' பார்த்து மலைத்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.