(Reading time: 7 - 14 minutes)

“என் பிரெண்டு இதுல நடிக்கிறான் ரெண்டு சீன்ல வரானாம் அதான் பாக்கலாம்னு வந்தேன்  . . . அதுக்குள்ள கரண்டு போயிடுச்சு” என சோகமாக கூறியது அந்த பேய்

“நீங்களாம் ஏதேதோ மேஜிக் மாதிரி செய்வேளே . . . டிவி ஓட அப்படி எதாவது செய்யேன்”

“நான் இப்போதான் டிரெயினி . . . எனக்கு அதெல்லாம் இன்னும் சரியா செய்ய வராது . . . ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் எனக்கு மூணு மாசம்தான் ஆயிருக்கு”

“பால் தரட்டுமா?” ஏனோ சட்டென கேட்க தோன்றியது வரதாசாரிக்கு

“எனக்கு ஏற்கனவே பால் ஊத்திட்டா”

ஏன் கேட்டோம் என்றாகிவிடவே வரதாச்சாரிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஆனால் விடாமல் அவன் மனம் வருந்த கூடாதென்று

“காபி சாப்பிடறயா?“

“வேண்டாம்”

“கொஞ்சமா காபி குடியேன்” என பலவந்தப்படுத்தினார்.

இன்னொரு கப்பில் காபி கொண்டு வந்து கொடுத்தார். அதுவும் பருகியது. (பேய் காப்பி குடிக்குமானு கேட்காதீங்க  . .இந்த பேயிக்கு காப்பி பிடிக்கும் போல)

அப்போது அவனை முழுமையாக கவனித்தார்.

“ஏண்டா நகமெல்லாம் அழுக்கா இருக்கு? தலைய பாரு . . . நல்ல சட்டை இல்லயா?”

“இப்படிதான் இருக்கணும் . . . கிளீனா இருந்தா எங்களுக்கு சட்டபடி குத்தம்”

“ஓ . . . அங்கயும் சட்டமா?”

“ஆமா பேய் பீனல் கோடு”

“இருக்கட்டும் . . . நானும் ஒரு காலத்துல அங்க வருவேன்லயோ . . .அப்ப இதெல்லாம் மாத்தரேன் . . .இந்த வரதுவா இல்ல உங்க லாவானு ஒரு கை பாத்துடறேன்”

பதில் பேசாமல் காபி குடித்தது . . .

“சரி . . . எப்படி செத்துபோனே” வருதத்தோடு கேட்டார்.

“விஷம் குடிச்சேன் . . .”

“என்னமோ காபி குடிக்கிற மாதிரி சொல்றியேடா?” அதிர்ச்சியாக கேட்டார்

மௌனம் . .

“தற்கொலை மஹா தப்பு”  அவருக்கு மூக்குமேல் கோபம் வந்தது

ஆமாமென தலையாட்டியது.

“செக்க்ஷன் 309  இன்டியன் பீனல் கோடு படி தற்கொலை செய்துக்கிறது சட்டபடி குற்றம் தெரியுமா?”

“தெரியாது“

“இதுக்கே உனக்கு ஒரு வருஷம் சிறை தண்டனை கிடைக்கும்”

சிரித்தது . . “இனிமே சிறை தண்டனை கிடையாது”

மெழுகுபர்த்தி தன்னை உருக்கி வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருந்தது.

“தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை?”

“டென்த் பெயில்”  கண்களில் நீர் முட்டியது

தலையில் அடித்துக் கொண்டு (தன் தலையில்)   “அபிஷ்டு அபிஷ்டு இதுக்கெல்லாமா தற்கொலை பண்ணிப்பா . . .”

பேயின் விசும்பல் சத்தம் இரவில் துள்ளியமாய் கேட்டது

“அப்பா அடிப்பாளா?”

“இல்லை கொஞ்ச கோபப்படுவாங்க அவ்ளோதான் என் மேல பிரியம் அதிகம்”

“அப்புறம் ஏண்டா இப்படி பண்ண?” அங்கலாயித்தார்

“அவமானமா இருந்திச்சி . . ஒரு நிமிஷம் யோசிக்காம விஷம் குடிச்சிட்டேன்”

“அவசரப்பட்டுட்டியே ஒரு நிமிஷம் உன் அம்மா அப்பாவ நினைச்சி பாத்தியா?”

“ஆமா அவசரப்பட்டுடேன்  . . அம்மா அப்பா பாவம் ரொம்ப அழுதா . .”

“இனிமே புரிஞ்சி என்ன செய்றது . .”

“தப்புதான்” கண்ணீரை துடைத்துக் கொண்டது

“ ம்ம்ம சரி விடு  . . ”

இருவரின் காபி கப்பும் காலியானது  . . .

“தேங்க்ஸ் காப்பி ரொம்ப நல்லா இருக்கு . . .  நான் கிளம்புறேன் அம்மா அப்பாவ போய் பாக்கணும் . . அப்பா வீட்டுக்கு வந்திருப்பார்”

“நாளைக்கும் வா . . உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

“இல்ல நாளைக்கு முடியாது . . மாசத்துக்கு ஒரு நாள்தான் எங்களுக்கு பூமிக்கு விசா கிடைக்கும்”

“ஓ . .அமாவாசை அன்னிக்கா?”

“அமாவாசை அன்னிக்கு கூட்டம் அதிகம் இருக்கும் அதனால நான் வேற நாள்ல வருவேன் . . மாசத்துல ஒருநாள் எப்ப வேணா எடுத்துக்கலாம்”

“அடுத்தவாட்டி வரும்போது கண்டிப்பா இங்க வரணும் . . . என்னோட காபி குடிக்கணும்”

புன்னகையோடு “சரி  .தேங்க்ஸ்” என்றது

“அடுத்தவாட்டி வரும்போது நல்லா பல் தேச்சி குளிச்சி நீட்டா வா . .  அப்ப மனசும் தெம்பா இருக்கும். உங்க லா அங்கதான் இங்க இல்ல . . .அப்புறம் என் ஆத்துகாரியும் மகளும் உன்ன பாத்தா பயந்துடுவா . . அவங்களுக்கு தெரியாம வா . . ஜாக்கரதையா போய்ட்டு வாடா கண்ணா” அன்புடன் அக்கரையும் கலந்திருந்தது.

“நிச்சியமா அடுத்த தடவையும் காபி குடிக்க வரேன்” புன்னகைத்து . . .  நொடியில் மறைந்தது.

இரவுகள் - 02

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.