(Reading time: 10 - 20 minutes)

தீப்பெட்டி சிதறிக்கிடந்தது. ஒரு வழியாக, எழுந்து குச்சிகளைத் தேற்றி பற்றவைத்தான், அந்த தூரத்துக் கண்கள் இப்பொழுது இல்லை, சற்றே பிடிப்பு வந்தவனாய் அடுத்த அடி நகர, மீண்டும் காலைக் கிழித்தபடி எதோ ஒன்று ஓட, தாமசுக்கு கிலி பிடித்துக்கொண்டது. 

வேகமாக மாடியை நோக்கி முன்னேறினான், 

"எபி!! எபி!! 

அப்பா..!! 

திடீரென்று சத்தம் கீழிருந்து மேலே வர, 

எபி!! என்று கத்திக்கொண்டே தாமஸ் படியிறங்கி ஓடினான். அங்கே எபி இல்லை. 

தாமஸ் அழவே தொடங்கிவிட்டான், எபி இனி உன்னைத்திட்ட மாட்டேன்டா. வந்துடுடா.. ப்ளீஸ் என்று கலங்கி நின்றான். 

சட்டென்று என்னவோ பொறி தட்ட, சோபா பக்கமாக ஓடினான், பைபிளைத்தேடி.

வைத்த இடத்தில் பைபிள் இல்லை. தாமசுக்கு இப்பொழுது மெல்ல கவனம் தன் அண்ணன் பக்கம் சென்றது. 

நேற்று அவன் நினைவு தினம். அவன் கல்லறைக்குக் கூட சென்று பார்க்கவில்லை. என்னதான் இருந்தாலும் அண்ணன். அவன் எதிர்ப்பார்க்க மாட்டானா?  

அவன்தான் ஆவியாக வந்திருக்கின்றானோ என்று குழம்பியபடியே திரும்ப, பின்னால் எபி தாமசை முறைத்தபடி நின்றிருந்தான். கையில் கத்தி!! 

"டேய் எபி" என்று கலங்கியபடி கட்டிப்பிடிக்க வந்த தாமசை விலக்கிவிட்டு ஓடினான். இருட்டில் சட்டென்று மறைந்த அவனை பின்தொடர்ந்தான் தாமஸ். 

டங்!! 

கடிகாரப் பெண்டுலம் அயராது அதன் பணியைச் சரியாகச் செய்து கொண்டிருந்தது. எபியின் பின்னால் ஓடிய தாமஸ் மூச்சிரைத்தபடி வீட்டின் கொல்லைப்புறத்தில் நிற்க, சிறிது தூரத்தில் எபி, எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்!! தாமஸ், பக்கத்தில் சென்று பார்த்துவிட்டு, மூக்கைப்பொத்திக் கொண்டு, என்ன என்று பார்க்க, ஓரு கருப்புப் பூனை, கழுத்து அறுந்த படி செத்துக்கிடந்தது. 

எபியின் கைகளில் ரத்தம் படிந்த கத்தி. தாமஸ் பயத்தில் சப்தநாடியும் ஒதுங்கிப்போய் நிற்க, மெதுவாக தாமசை முறைத்தபடி கூரான பார்வையுடன் திரும்பினான் எபி! தாமஸ் மெதுவாக பின்னோக்கி நகர, காலில் எதோ தட்டியது. தடவிப் பார்த்தான்.

The Holy Bible. எதோ பிடிப்பு வந்தவனாய் அதைக் கையில் எடுத்துக்கொண்டு, எபியின் அருகில் சென்றான்!! கத்தியைக் கீழே போட்டுவிட்டு அப்படியே மயங்கிச் சரிந்தான் எபி. பிள்ளையைத் தூக்கிக்கொண்டு உடனே வீட்டினுள் ஓடிக் கதவைச்சாத்தினான் தாமஸ். இருட்டில் அங்கும் இங்கும் இடித்துக்கொண்டாலும், கையில் Bible இருக்கும் நம்பிக்கையில் ஓடினான். ஹாலில் தான் அமர்ந்திருந்த சோபாவில் உட்கார்ந்தவன். பிள்ளையை மடியில் போட்டபடி அவன் முகத்தில் தண்ணீரால் துடைக்க, எபி எழுந்தான். 

அப்பா!! என்று தாமசைப் பார்த்து எபி அழைக்க, தாமஸ் அவனைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான். எபியை ஆசுவாசப்படுத்திவிட்டு, 

"சோபாவிலையே இரு எபி, மாடிப்படிக்கிட்ட தீக்குச்சி இருக்கு. எடுத்துப் பத்தவைச்சுட்டு வரேன். நீ பத்து செகண்டுக்கு ஒரு முறை அப்பா, அப்பானு கூப்பிட்டுட்டே இரு. சரியா?" 

என்று எபியிடம் கூறிவிட்டு, மாடிப்படி நோக்கி நகர்ந்தான். குச்சிகளைப்பொறுக்கி, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, ஒன்றைப் பற்றவைத்து மேல்நோக்கிப் பார்க்க, அங்கே அந்தக் கண்கள் இல்லை. 

மாடியிலிருந்து சப்தம் வந்ததே, என்னவென்று பார்த்துவிடத் துணிந்தான்.

அப்பா!!

கைகளில் Bible உள்ள தைரியத்தில், படிகளைத்தாண்டி, மாடியேறினான், 

அப்பா!! 

அங்கே அவனது தாயாரின் புகைப்படக் கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி, சுக்குநூறாகியிருந்தது. "அம்மாவுக்குமா என்மேல  கோபம், அவங்களை நல்லாத்தானே பாத்துக்கிட்டேன்" என்று மனதில் நினைத்தபடி, அதை அருகில் கிடந்த தொடைப்பத்தால் அள்ளி cleaning Panல் போட்டுவிட்டுத் திரும்ப, எதோ ஒன்று அசுறவேகத்தில் மோதி படிக்கட்டில் உருண்டு கீழே விழுந்தவன் மயங்கிப்போனான். 

அப்பா!! 

மயங்கியவேளையில், அவன் கண்களில் எபியின் முகம் வந்து மறைந்தது.

ண்விழித்துப் பார்த்தவன், மருத்துவமனையில் கிடந்தான், அருகில் எமி. பதறி எழுந்தவன் கண்களில் கேலண்டர் தெரிந்தது. 

"அக்டோபர் 14 சனி."

"எங்கேடி எபி" என்று அழுதபடிக்கேட்க

"ஸ்கூலுக்குப் போயிருக்காங்க" என்ற எபியின் பதில் கேட்டு அமைதியானான். 

"ஒரே ஒருநாள் நான் ஊர்ல இல்லை, என்னங்க ஆச்சு? " என்று பயத்துடன் எமி கேட்க, 

எங்கே நடந்த எல்லாவற்றையும் சொன்னால் எமியும் பயப்படுவாளோ என்று எண்ணி, 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.